தத்வ த்ரயம் – சித் பிரகரணம்-சூர்ணிகை 8-30– –ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —

சூர்ணிகை -8

அஜடமாகை யாவது
ஞானத்தை ஒழியவும்
தானே தோற்றுகை –

அஜடத்வம் ஆவது –
அநந்ய அதீன பிரகாசத்வம் -ஸ்வயம் பிரகாசத்வம் -என்றபடி
ஸ்வயம் பிரகாசத்வம் ஆகையாவது -வாகிறவோபாதி
தீபம் தீபாந்தர நிரபேஷமாக ஸ்வ வ்யவஹாரத்துக்கு ஹேது
பிரகாசாந்தார நிரபேஷமாக ஸ்வ வ்யவஹாரத்துக்கு ஹேதுவாகை –
அத்தை அருளிச் செய்கிறார் –
ஞானத்தை ஒழியவும்
தானே தோற்றுகை -என்று

ஹிருதய நதர் ஜ்யோதி புருஷ (ப்ரு –6-3-7-ஹ்ருதயத்தில் பிரகாசித்த படியே உள்ள ஆத்மா )-என்றும்
அதராயம புருஷச ஸ்வ யமஜயோதிர் பவதி (ப்ரு -6-3-9-இங்கு ஆத்மா தானாகவே வெளிப்படுகிறான் )-என்றும்
விஞ்ஞானகன (ப்ரு-4-4-12 -ஞானமே வடிவாக உள்ளான் )-என்றும்
ஆத்மா ஜஞான மய- (ஸ்ரீ விஷ்ணு புரணம்-6-7-32- -ஆத்மா ஞான மயமாகவே உள்ளான் )-என்றும்
தச்ச ஞான மயம் வயாபிஸ்வ சமவேதய மநூபமம (ஸ்ரீ விஷ்ணு புரணம்-1-22-42- அந்த ஆத்மா ஞான மயமாகவே உள்ளான் –
எங்கும் நிறைந்து -தானே தன்னை அறிகிறான் -தனக்கு ஒப்புமை இல்லாதவன் )-என்றும்
ஆத்மா சமவேதயம் தத ஜ்ஞானம் (ஆத்மாவைக் குறித்து தானாகவே அறியப் படுகிறது )-என்றும்
சொல்லக் கடவது இறே-

——————————————————-

சூர்ணிகை -9

ஆனந்த ரூபமாகை யாவது
ஸூ கரூபமாய் இருக்கை –

ஆனந்த ரூபமத்வம் ஆவது –ஸ்வ ஏவ இஷ்டத்வம்
அதாவது
ஸ்வ பாவமே அனுகூலமாய் இருக்கை –

அனுகூலம் ஸூகம் துக்கம் பிரதிகூலமிதி சத்தே
ஸ்வாத்மா ஸ்வஸ்ய அனுகூலோ ஹீதயா தம சாஷிக ஏவ ச -(ஸூகம் என்பது ஏற்புடையது –
துக்கம் என்பது ஏற்புடையது அல்ல -தனது ஆத்மா ஏற்புடையவனே யாவான்
அவன் தனக்குத் தானே சாக்ஷியாக உள்ளான் )என்கிறபடியே
தனக்குத் தானே ஸூகமாய் இருக்கை –

————————————————————-

சூர்ணிகை -10-

அவதாரிகை –

இப்படி ஆத்மஸ்வரூபம் ஸூக ரூபமாய் இருக்கும் என்னுமிதில்
ஸூப்த பிரபுத்த பிரத்யபிஞ்ஞையை பிரமாணமாக
அரளிச் செய்கிறார் –

உணர்ந்தவன்
ஸூகமாக உறங்கினேன்
என்கையாலே
ஸூக ரூபமாகக்
கடவது –

ஸூகமாக உறங்கினேன் என்கிற பிரத்யபிஞ்ஞை தானே இதில் பிரமாணம்
என்று இறே தத்வ சேகரத்திலும் இவர் அருளிச் செய்தது –

ஸூ ஷுப்தி தசையில் பராக் அர்த்தம் அனுபவம் இல்லாமையாலும்
பிரத்யகாததச புராணம் யுண்டாகையாலும்
ஸூ பதோதத்தினாலே பராம்ருஷடமான ஸூகம் ஸ்வரூப ஸூகம் ஆகவேணும் இறே –

இப்போது ஸூகம் பிறக்கும் படி உறங்கினேன் என்று அன்றோ
ஸூகமாக உறங்கினேன் என்கிற இதுக்கு பொருள் என்ன ஒண்ணாது –
பிரதிபத்தி சரீரம் அப்படி அன்றிக்கே
இனிதாகப் பாடினேன் -என்கிறாப் போலே இருக்கையாலே

இது தன்னை பாஷ்யத்தில்
ஏவம் ஹி ஸூப்தோததி தஸ்யை பராமர்ச ஸூகம் அஹம் அஸ் வாப்ஸம் இதி
அநேன ப்ரத்ய வமர்சனேனே ததாநீம் ஸூகம் பவதி ததா ததாநீம் அஸ்வாப்யம்
இத்யேஷா பிரதிபத்தி இதி அதத் ரூபத்வாத் பிரதிபத்தே –(உறக்கத்தில் இருந்து எழுகின்ற எந்த ஒருவனும் –
அஹம் -நான் -என்பதில் இருந்து விலகி உள்ளதும் மற்ற அனைத்துக்கும் எதிர்த் தட்டாக உள்ளதும் ஆகிய
ஞானம் ஆகிய நான் அஞ்ஞானத்துக்கு ஸாக்ஷியாக இருந்தேன் என்று கூறுவது இல்லை
மாறாக நான் ஸூகமாகவே உறங்கினேன் என்று அல்லவோ உறக்கத்தில் இருந்து எழுந்த
ஒருவனின் நினைவுகள் உள்ளன -) என்று ஸ்ரீ பாஷ்யகாரரும் அருளிச் செய்தார் –

ஸ்வரூபம் அனுகூலம் அன்றாகில் ப்ரேமாஸ் பதத்வம் கூடாது
(ஆத்ம ஸ்வரூபம் ஏற்புடையது அன்றாகில் அதில் நமக்குத் பற்றுதல் ஏற்படவும் செய்யாதே )

ஆச்சர்ய வத் பஸ்யதி கச்சி நேநம்-(ஸ்ரீ கீதை 2-29-உயர்ந்தவன் மட்டுமே இந்த ஆத்மாவை வியப்புடன் காண்கிறான் )
இத்யாதிகளாலும் இவ்வர்த்தம் சித்தம் –

ஆர்த்ரம் ஜலதி (பிரகாசித்த படி உள்ளது )-என்றும்
நிர்வாண மய ஏவாய மாத்மா (ஆனந்த மயமானவன் )-என்றும்
ஜ்ஞாநாநாந்த மயஸ் த்வாத்மா (ஞானம் மற்றும் ஆனந்தத்தையே ரூபமாக யுடையவன் )-என்றும்
ஜ்ஞாந ஆனந்த ஏக லஷணம்-இத்யாதி
ஸ்ருதி ஸ்ம்ருதிகளாலும் ஆத்மாவினுடைய ஆனந்த ரூபத்வம் ஸூஸ்பஷ்டம் –

ஆக
கீழே
ப்ரக்ருதே பரத்வம் சொல்லுகையாலே
தேஹாத்ம வாதம் நிரஸ்தம் ஆய்த்து –

அஜடத்வ
ஆனந்த ரூபங்களைச் சொல்லுகையாலே
ஜடாத்ம வாதம் நிரஸ்தம் ஆய்த்து –

————————————————————

சூர்ணிகை -11

நித்யமாகை யாவது
எப்போதும் யுண்டாகை –

நித்யமாவது சர்வ கால வர்த்தித்வம்

—————————————————————

சூர்ணிகை -12-

அவதாரிகை –
ஏதத் விரோதி சங்கையை
அனுவதித்துப்
பரிஹரிக்கிறார் –

எப்போதும் யுண்டாகில்
ஜன்ம
மரணங்கள்
யுண்டாகிற படி என் என்னில்
ஜன்மமாவது தேக சம்பந்தம்
மரணமாவது தேக வியோகம் –

அதாவது
ஆத்மா சர்வ கால வர்த்தியாய் இருக்குமாகில்
பிரஜாபதி பிரஜா அஸ்ருஜத-(நான்முகன் உயிர்களைப் படைத்தான் )என்றும்
சந்மூலாஸ் சோம்யேமாஸ் சர்வா பிரஜா (அனைத்துமே ஸத் என்னும் ப்ரஹ்மத்தையே காரணமாக கொண்டவை ஆகும் )-என்றும்
யதோவா இமானி பூதானி ஜாயந்தே (அனைத்தும் எதனிடம் இருந்து உத்பத்தி ஆனதோ )-என்றும்
யத பிர ஸூதா ஜகத பிரஸூதி தோயேன ஜீவாந் வ்யசசர்ஜ பூம்யாம் (ப்ரக்ருதியானது எந்த ப்ரஹ்மத்தின் இடம் தோன்றியதோ
அத்தகைய ப்ரஹ்மா நீர் முதலானவற்றுடன் ஆத்மாவையும் படைத்தது )-இத்யாதி
ஸ்ருதி வாக்யங்களால் ஆத்மாவுக்குச் சொல்லப் படுகிற
ஜனன மரணங்கள் யுண்டாகிற படி என் என்னில்

அவற்றில் சொல்லுகிற ஜன்மம் ஆவது தேக சம்பந்தம்
மரணம் ஆவாது தேக வியோகம் -என்கை –

நித்யன் ஆகில் சிருஷ்டிக்கு முன்பு ஏக தவாவதாரணம் கூடாது என்னில்
ஏக தவமாவது
நாம ரூப விபாக பாவம் ஆகையாலே கூடும்

சம்ஹார தசையில் ஆத்மா இல்லையாகில் ஈஸ்வரனுக்கு உபாதானத்வம் கூடாது
அக்ருதா அப்யாக்ம க்ருத விப்ர நாசங்களும் வரும்-
ஆகையாலே ஆத்மா நித்யத்வம் கொள்ள வேணும்

ந ஜாயதே ம்ரியதே வா விபச்சித் (கட -2-18-அவன் பிறப்பதும் இல்லை இறப்பதும் இல்லை ) -என்றும்
ஜ்ஞா ஜஜௌ த்வா அஜவ் வீச நீசௌ-(ஸ்வ –1-19-அறிந்தவன் அறியாதவன் என்று
இரண்டு பிறப்பட்டவர்கள் ஈசன் அநீசன் என்று கூறப்படுகிறார்கள் )என்றும்
நித்யோ நித்யானாம் (ஸ்வே -6-13- நித்யர்களுக்குள் நித்தியமாக உள்ளவன் )-என்றும்
ப்ரக்ருதிம் புருஷம் சைவ வித்ய நாதீ உபாவபி -(ஸ்ரீ கீதை -13-19- ப்ரக்ருதி புருஷன் என்ற ஜீவாத்மா இரண்டும்
எப்போதும் சேர்ந்தே எல்லை அற்ற காலமாக உள்ளன )-என்றும்
‘ந ஜாயதே ம்ரியதேவா கதாசிந் நாயம் பூத்வா பவிதா வா ந பூய
அஜோ நித்யச் சாஸ்வதோயம் புராணோ ந ஹன்யதே ஹன்யமானே சரீரே–ஸ்ரீ கீதை -2-20 -(ஆத்மா பிறப்பதும் இல்லை –
இறப்பதும் இல்லை -முன்பு உண்டாகி பின்பு இல்லாததும் இல்லை –
ஆத்மா பிறப்பற்றவன் -நித்யமானவன் -அனைத்துக் காலங்களிலும் உள்ளவன் -பழமையானவன்
சரீரம் கொல்லப் பட்டாலும் ஆத்மா கொல்லப் படாதவன் -என்றும்
ஆத்மா நித்யத்வ பிரதி பாதகங்களான
ஸ்ருதி ஸ்ம்ருதிகள் அநேகங்கள் இறே-

——————————————————————–

சூர்ணிகை -13-

அவதாரிகை –
அசித் விலஷணமாய்-அஜடமாய் -ஆனந்த ரூபமாய் –
நித்தியமாய் இருந்தாலும்
விபுவாய் இருக்கலாம் இறே
ஏவம் பூதமான ஆத்மா ஸ்வரூபம் அணு என்று அறியும் படி
எங்கனே என்று ஜிஜ்ஞஸூ பிரஸ்நத்தை அனுவதிக்கிறார்

அணுவான
படி
என்
என்னில் –

—————————————————————–

சூர்ணிகை -14-

அவதாரிகை –

அதுக்கு உத்தரம் அருளிச் செய்கிறார்

ஹிருதயப் பிரதேசத்தில் நின்றும்
உத்க்ரமித்துப் போவது
வருவதாம் என்று
சாஸ்திரம் சொல்லுகையாலே
ஆத்மா
அணுவாகக்
கடவது –

அதாவது
ஹ்ருதிஹ் யேவாய மாத்மா (ப்ர-3-6-இதயத்தில் ஆத்மா உள்ளது )-என்று ஹிருதய ஸ்திதியையும்

தேன ப்ரத்யோ தே நைஷ ஆத்மா நிஷ்க்ராமதி சஷூ ஷோவா
மூர்த் நோவா அந்யேப்யோவா சரீரே தேசேப்ய (ப்ருஹ் –4-4-2-இறக்கும் போது இதயத்தில் உள் பகுதியில் உண்டாகும்
ஒளியின் உதவியுடன் இந்த ஆத்மா கண் மூலமாகவோ தலை வழியாகவோ
அல்லது சரீரத்தின் மற்ற பகுதிகளின் வழியாகவோ வெளியே கிளம்புகிறான் )-என்று உத்க்ரமணததையும்

யேவை கேசாச்மால் லோகாத் ப்ரயந்தி சந்தர மசமேவ தே சர்வே கச்சந்தி (கௌஷீ –1-2-இங்கு இருந்து புறப்படும்
அனைத்து ஆத்மாக்களும் சந்த்ர மண்டலத்தையே அடைகின்றன )-என்று கமநத்தையும்

தஸ்மால் லோகாத் புனரேத் யஸ்மை லோகாயஸ் (ப்ரு -4-4-6- அந்த லோகத்தில் இருந்து
கர்மம் இயற்றுவதற்காக மீண்டும் வருகிறான் )-என்று ஆகமனத்தையும்

நிர்தோஷ பிரமாணமான வேதாந்த சாஸ்திரம் சொல்லுகையாலே
அணுவாகக் கடவது -என்கை

விபுவாகில் இவை ஒன்றும் கூடாது இறே

சூத்ரகாரரும் ஆத்மவினுடைய அணுத்வம் சாதிக்கிற அளவில்
உத்க்ராந்தி கத்யாகதீ நாம் (2-3-20-சரீரத்தில் இருந்து வெளிக் கிளம்புதல் -நகர்தல் -மீண்டும் திரும்புதல்
ஆகியவை கூறப்படுவதால் விபு அல்லன் ) -என்று
இவற்றாலே இறே முந்துற சாதித்தது

ஏஷ அணுராத்மா சேதஸா வேதிதவ்ய (முண் -3-1-9-அத்தகைய அணு அளவுள்ள ஜீவாத்மா )-என்றும்

வாலாக்ர சத பாகஸ்ய சத்தா கல்பி தஸ்ய ச பாகோ ஜீவஸ்ச விஜ்ஞ்ஞேய-(ஸ்வே -5-9-நெல் நுனியின் நூறில் ஒரு பங்கை
எடுத்து அதனை நூறு பாகமாக வெட்டினால் அதில் ஒரு பாகமே ஜீவனுடைய அளவு என்று அறிய வேண்டும் )- என்றும்

ஆராக்ர மாத்ரோ ஹ்யவரோபி திருஷ்ட (ஸ்வே –5-8-சாட்டை நுனியில் உள்ள முள் போன்று நுண்ணியவன் )-என்றும்

ஸ்வரூப அணு மாதரம் ஸ்யாத் ஜ்ஞானானந்தைக லஷணம்-
த்ரசரேணு பிரமாணாஸ்தே ரஸ்மி கோடி விபூஷிதா (அணு அளவே உள்ளது -ஞான மயமானது –
மூன்று அணுக்கள் சேர்ந்த அளவுள்ள துகளாக நின்று கோடிக்கணக்கான ஒலியுடன் பிரகாசிக்கிறது )-இத்யாதி

ஸ்ருதி ஸ்ம்ருதிகளாலும்
ஆத்மாவினுடைய அணுத்வம் சம் ப்ரதிபன்னம் –

——————————————————————–

சூர்ணிகை -15

இப்படி இருக்குமாகில் -சர்வ சரீர அவயாபியான ஸூக துக்க அனுபவம்
எங்கனே என்கிற சங்கையை
அனுவதிக்கிறார் –

அணுவாய்
ஹ்ருதயத்து அளவில் நிற்குமாகில்
ஸூக துக்கங்களை
புஜிக்கிற படி என் என்னில் –

அதாவது
அணு பரிமாணமாய ஹிருதய பிரதேச மாத்ரத்திலே நின்று விடுமாகில்
பாதே மே வேதனா சிரசி மே வேதனா பாதே மே ஸூகம் சிரசி மே ஸூகம் (எனது கால்கள் வலிக்கிறது –
எனது தலை வலிக்கிறது -எனது கால்கள் ஸூகமாக உள்ளன -எனது தலை ஸூகமாக உள்ளது )-என்று
ஆபாதசூடம் சரீரம் எங்கும் ஒக்க
ஸூக துக்கங்களை புஜிக்கிற படி
எங்கனே என்னில் -என்கை —

————————————————————————————-

சூர்ணிகை -16-

அதுக்கு உத்தாம் அருளிச் செய்கிறார் –

மணி த்யுமணி தீபாதிகள்
ஓர் இடத்திலே இருக்க
பிரபை எங்கும் ஒக்க
வ்யாபிக்கையாலே
அவற்றைப் பூஜிக்கத்
தட்டில்லை –

அதாவது
மணி த்யுமணி தீபாதிகள் ஆகிற ப்ரபாவாத் பதார்த்தங்கள்
ஏக தேசஸ்தங்களாய் இருக்கச் செய்தேயும்
தத் பிரபை சுற்று எங்கும் வ்யாபிக்கிறாப் போலே

ஆத்மா ஹிருதய பிரதேசத்திலே இருக்கச் செய்தேயும்
தத் தர்மமான ஜ்ஞானம் எங்கும் ஒக்க வ்யாபிக்கையாலே
சரீரம் எங்கும் ஒக்க ஸூக துக்கங்களை
புஜிக்கைக்கு ஒரு பிரதி ஹதி இல்லை -என்கை

இது தான்
குணாத் வா லோக வத் (2-3-26)
(கிரணங்கள் போன்று தனது குணத்தால் பரவுகின்றான் )-என்கிற ஸூத்ர அர்த்தம் –

வாசப்தோ மதாப்தர வ்யாவ்ருத் த்யர்த்த தத ஆத்மா
ஸ்வ குணேன ஜ்ஞாநேன சகல தேகம் வியாப்ய அவஸ்திதம்
ஆலோகவத் யதா மணி த்யுமணி ப்ரப்ருதீ நாம ஏக தேச வர்த்தி நாம் ஆலோக
அநேக தேச வ்யாபீ த்ருச்யதே தத் வத் ஹிருதயஸ் தஸ்யாத்
மநோ ஜ்ஞானம் சகல தேஹம் வ்யாப்ய வர்த்ததே
ஜ்ஞாது ப்ரபா ஸ்தாநீ யஸ்ய ஜ்ஞானஸ்ய ஸ்வாஸ்ரயாத் அந்யத்ர வ்ருத்திர்
மணி ப்ரபாவத் உப பத்யத இதி பிரதம ஸூத்ரே ஸ்தாபிதம் -என்று இறே இதுக்கு ஸ்ரீ பாஷ்யம்

(ஸூத் ரத்தில் உள்ள -வா -மற்றக் கருத்துக்களைத் தள்ளுகிறது
ஆத்மாவானது தன்னுடைய தர்ம பூத ஞானத்தால் அனைத்து சரீரங்களிலும் பரவி நிற்கும்
ஸகல தேஹம் என்றது ஸகல சரீரங்கள் என்றும் சரீரத்தில் ஸகல இடங்களிலும் என்றும் பொருள்
ஆகவே -ஆலோகவத் -ஒளியைப் போன்று ஆகும்
இரத்தினம் ஸூர்யன் போன்றவை ஓர் இடத்தில் மட்டும் உள்ள போதிலும் அவற்றின் பிரகாசம் எங்கும் பரவி இருப்பதைக் காணலாம்
இதே போல் இதயத்தில் மட்டுமே ஆத்மா உள்ள போதிலும் அதன் ஞானம் சரீரம் முழுவதும் பரவி நிற்கிறது –
ஒளியுடன் கூடிய இரத்தினத்தின் ஒளி போன்று அறிபவனாக உள்ள ஆத்மாவின் ஞானம் என்பது
தன்னுடைய இருப்பிடம் ஆதாரமான ஆத்மாவையும் கடந்து பிரகாசிக்கும் என்பதை முதல் ஸூத்ரத்திலேயே கூறினோம் – )

இப்படி ஜ்ஞான வ்யாப்தியாலே சர்வத்தையும் புஜிக்கும் என்னும் இடம்
ப்ருக தாரண்யத்திலே சொல்லப் பட்டது –

பிரஜ்ஞயா வாசம் சமாருஹ்ய வாசா சர்வாணி நாமாந் யாப்நோதி
பிரஜ்ஞ யாக்ராணம் சமாருஹ்ய க்ராணேந ஸர்வாந் கந்தா நாப்நோதி
பிரஜ்ஞயா சஷூஸ் சமாருஹ்ய சஷூஷா சர்வாணி ரூபாண் ஆப்நோதி
பிரஜ்ஞயா ஸ்ரோத்ரம் சமாருஹ்ய ஸ்ரோதரேண சர்வாஜ் ஞா சப்தாந் ஆப்நோதி
பிரஜ்ஞயா ஜிஹ்வாம் சமாருஹ்ய ஜிஹ்வயா சர்வாந் ரஸாநா ஆப்நோதி
பிரஜ்ஞயா ஹஸ்தௌ சமாருஹ்ய ஹஸ்தாப்யாம் சர்வாணி கர்மாண்யாப் நோதி
பிரஜ்ஞயா சரீரம் சமாருஹ்ய சரீரேண ஸூக துக்கே ஆப் நோதி
பிரஜ்ஞயா உபஸ்தம் சமாருஹ்ய உபஸ்தே நாநா நதம் ரதிம ப்ரஜாம் சாப் நோதி
பிரஜ்ஞயா பாதௌ சமாருஹ்ய பாதாபயாம் சர்வா கதீர் ஆப்நோதி
பிரஜ்ஞயா தியம் சமாருஹ்ய தியா விஞ்ஞா தவ்யம் காமமாப் நோதி –
என்று இப்படி சொல்லுகையாலே –

(கௌஷீ தகீ –ஞானம் மூலம் வாக்கை அடைந்து அனைத்துப் பெயர்களுடன் சம்பந்தம் அடைகிறான்
ஞானம் மூலம் மூக்கை அடைந்து அனைத்து மணங்களையும் அனுபவிக்கிறான்
ஞானம் மூலம் செவியை அடைந்து அனைத்து ஆசைகளையும் கேட்க்கிறான்
ஞானம் மூலம் நாக்கை அடைந்து அனைத்து சுவைகளையும் உணர்கிறான்
ஞானத்தால் கைகளை அடைந்து அனைத்து செயல்களையும் செய்கிறான்
ஞானத்தால் அனைத்து சரீரங்களையும் அடைந்து-சரீரத்தில் எங்கும் செண்டு – இன்ப துன்பங்களை அனுபவிக்கிறான்
ஞானத்தால் ஆண் குறியை அடைந்து மக்களைப் பெறுகிறான்
ஞானத்தால் கால்களை அடைந்து வேண்டிய இடங்களுக்குச் சொல்லுகிறான்
ஞானத்தால் புத்தியை அடைந்து தனது விருப்பங்களை அடைகிறான் -என்றும் உண்டே -)

————————————————————————————————

சூர்ணிகை -17-

ஏக சரீர மாத்ரத்துக்கு இப்படி கொண்டாலும்
ஒருவன் ஏக காலத்திலே அநேக சரீரங்களை
பரிக்ரஹிக்கிறது ஸ்வரூப வ்யாப்தியாலே யாக
வேண்டாவோ -என்கிற
சங்கையிலே அருளிச் செய்கிறார் –

ஒருவன் ஏக காலத்திலே
அநேக தேஹங்களைப்
பரிக்ரஹிக்கிறதும்
ஜ்ஞான வ்யாப்தியாலே –

ஒருவனுக்கே அநேக தேக பரிக்ரஹம் கால பேதத்தாலே
சம்பவிக்கும் இறே-
அத்தை வ்யாவர்த்திக்கைக்காக
ஏக காலத்திலே -என்கிறது-

ஏக காலே அநேக தேக பரிக்ரஹம்
சௌபரி பரப்ருதிகள் பக்கலிலே
சம் பிரதி பன்னம் இறே –

——————————————————

சூர்ணிகை -18-

அவ்யக்தம் ஆகையாவது
கட படாதிகளை
க்ரஹிக்கிற சஷூராதிகளாலே
தோற்றாது இருக்கை –

சேத நாதி யோக்யானி கடபடா தீனி வஸ்தூனி யை ப்ரமாணைர் வ்யஜ் யந்தே
தைரயமாத்மா ந வ்யஜ்யதே இத் அவ்யக்த -(ஸ்ரீ கீதா பாஷ்யம் –2-25-அழிந்து போதல் போன்றவை
முதலானவைகளுக்கு ஏற்றதாக உள்ள குடம் துணி எந்தக் கண் முதலான இந்த்ரியங்களால் அறியப் படுகின்றனவோ
அந்த இந்த்ரியங்களால் ஆத்மா காணப்படடமல் உள்ளதால் அது அவ்யக்தம் எனப் படுகிறது )-என்று இறே
ஸ்ரீ பாஷ்யகாரரும் அருளிச் செய்தது
அப்படியே இவரும் அருளிச் செய்கிறார்

இங்கன் அன்றிக்கே
ஒரு பிரமாணத்தாலும் தோற்றாது இருக்கை என்னில்
துச்சத்வம் வரும் இறே

ஆகையாலே
மானஸ ஜ்ஞானம் கம்யம் இத்தனை யல்லது
ஐந்த்ரிய ஜ்ஞான கம்யம் அன்று என்கை

அவ்யக்த சப்தார்த்தம்
சென்று சென்று பரம் பரமாய் -என்று தொடங்கி
ஆத்ம ஸ்வரூப வைலஷண்யத்தை அருளிச் செய்கிற ஆழ்வாரும்
ஞானம் கடந்ததே -என்று
ஐந்திரிய ஞான அகோசரத்வத்தை இறே அருளிச் செய்தது-

—————————————————————————————–

சூர்ணிகை -19-

அசிந்த்யமாகை யாவது
அசித்தோடு சஜாதீயம் என்று
நினைக்க ஒண்ணாது
இருக்கை –

அதாவது
யத சேத் யாதி விசஜாதீயஸ் தத ஏவ சர்வ வஸ்து விசஜாதீ யத் வேன
தத் தத் ஸ்வ பாவ உக்த தயா சிந்த யிதிம் அபி நார்ஹ (2-25-எந்த ஒரு காரணத்தால் வெட்டுவதற்கு
ஏற்றதாக உள்ள வாள் போன்றவற்றைக் காட்டிலும் வேறுபட்டதாக உள்ளதோ அந்தக் காரணத்தால்
ஆத்மாவானது மற்ற பொருள்களை போன்று தன்மை கொண்டது அல்ல –
ஆகவே அந்தப் பொருள்களுடைய இயல்பான தன்மையுடன் ஆத்மா சேர்ந்து உள்ளதாக எண்ண இயலாது )-என்று இறே
இதுக்கும் ஸ்ரீ பாஷ்யகாரர் அருளிச் செய்தது
ஆகையாலே இவரும் இப்படி அருளிச் செய்கிறார் –

இங்கன் அன்றிக்கே
அச்சிந்த்யத்வம் ஆவது
ஒருபடியாலும் சிந்திக்கைக்கு யோக்யம் அன்றிக்கே இருக்கை என்னில் –
ஆத்மா ஸ்வரூப விஷயமான ஸ்ரவண மனனாதிகளுக்கு வையர்த்த்யம் ப்ரசங்கிக்கும் இறே
ஆகையால் அசித் சஜாதீய புத்த்ய அநர்ஹத்வமே அசிந்த்ய சப்தார்த்தமாகக் கடவது –

ஆக
அவ்யக்தோயம சிந்தயோயம் (2-25)-என்று
ஸ்ரீ கீதா உபநிஷத் ஆச்சார்யன் அருளிச் செய்தபடியே –
இவரும்
ஆத்மா ஸ்வரூப வைலஷண்யம் ப்ரகடநார்த்தமாக இவ்விடத்திலே அருளிச் செய்தது –

—————————————————————————

சூர்ணிகை -20-

நிர்வவவமாகை யாவது
அவயவ சமுதாயம் அன்றிக்கே
இருக்கை –

அதாவது –
விஞ்ஞான மய-(தை -4-1-ஞான மயமாகவே உள்ளான் )என்றும்
விஞ்ஞான கன-(ப்ரு –4-4-12-ஞானமே ரூபமாக உள்ளான் )என்றும் சொல்லுகிறபடியே
ஞான ஏகாகாரம் ஆகையாலே அசித் வஸ்துகளைப் போலே
அவயவ சங்காதாத் மகம் அன்றிக்கே இருக்கை –

—————————————————————————-

சூர்ணிகை -21-

நிர்விகாரம் ஆகையாவது
அசித்துப் போல விகரிக்கை அன்றிக்கே
ஒருபடிப் பட்டு இருக்கை–

அதாவது –
அம்ருதாஷர மஹர-(ஸ்வே –1-10- மரணம் அற்றவன் அழிவு அற்றவன் -மாற்றம் அற்றவன் )-என்றும்
ஆத்மா சுத்தோ ஷர -(ஸ்ரீ வராஹ புராணம் -2-13-17-ஆத்மா தூய்மை யானவன் -மாற்றம் அற்றவன் -)-என்றும்
அஷர சப்த வாஸ்யமான வஸ்துவாகையாலே
ஷண ஷரண ஸ்வ பாவம் ஆகையாலே
ஷர சப்த வாஸ்யமான அசித்துப் போலே விகரிக்கை அன்றிக்கே
சதைக ரூபமாய் இருக்கை

ஆகை இறே-
அவிகார்யோயம் (2-25-ஆத்மா மாறுபாடு அடையாதவன் )-என்று
ஸ்ரீ கீதோ உபநிஷத் ஆச்சார்யன் அருளிச் செய்தது –

——————————————————————————-

சூர்ணிகை -22-

அவதாரிகை –
ஏவம் பரகாரமாகையாலே ச்சேத் யாதி
விசஜாதீயமாய் இருக்கும்
என்கிறார் மேல் –

இப்படி இருக்கையாலே
சஸ்த்ரம்
அக்னி
ஜலம்
வாதம்
ஆதபம்
தொடக்க மானவற்றால்

சேதித்தல்
தஹித்தல்
நனைத்தல்
சோஷிப்பித்தல்
செய்கைக்கு
அயோக்யமாய் இருக்கும் –

இப்படி
அவ்யக்த்வாதிகள் நாலையும் அநு பாஷிக்கிறது ஆதல்
நிர்விகாரத் மாத்ரத்தை யாதல்

அதாவது
சஸ்த்ர அக்னி யாதிகளை ஸ்தேதந தஹநாதிகளை பண்ணும் போது
தத் வஸ்துக்களில் வியாபித்து செய்ய வேண்டுகையாலும்
ஆத்மா சர்வ அசித் தத்வ வியாபகன் ஆகையாலே
அவற்றில் காட்டில் அத்யந்த சூஷ்ம பூதன் ஆகையாலும்
வ்யாப்யமாய் ஸ்தூலமாய் இருக்கிற இவை
வியாபகமாய் சூஷ்மமான ஆத்ம வஸ்துவை
வியாபித்து விகரிப்பிக்க மாட்டாமையாலும்
சஸ்த்ர அக்னி ஜல வாதா தபாதிகளால் வரும்
ஸ்தேதன தஹன க்லேதன சோஷணங்களுக்கு
அநந்ஹமாய் இருக்கும் என்கை –

நைநம் சிந்தந்தி சஸ்த்ராணி நைநம் தஹதி பாவக
ந சைநம் க்லே தயந்த்யாபோ ந சோஷயதி மாருத-(ஸ்ரீ கீதையில் –2-23-இந்த ஆத்மாவை
ஆயுதங்கள் வெட்டுவது இல்லை -அக்னி எரிப்பது இல்லை -தண்ணீர் நனைத்து இல்லை –
காற்று உலர வைப்பது இல்லை )-என்றும்
அச்சேத்ய அயமதஹய அயம் அக்லே தய அசோஷ்ய ஏவ ச
நித்ய சர்வ கத ஸ்தாணு அசலோயம் ஸநாதன (ஸ்ரீ கீதையில் -2-24-இந்த ஆத்மா வெட்டப்பட இயலாதவன் –
எரிக்கப்பட்ட இயலாதவன் -நனைக்கப்பட இயலாதவன் -உலர்த்தப்பட்ட இயலாதவன் –
நித்யமானவன்-எங்கும் நிறைந்து உள்ளவன் -நிலையாக உள்ளவன் -ஸாஸ்வதமாக உள்ளவன் )-என்றும்
அருளிச் செய்தான் இறே –

————————————————————————————————

சூர்ணிகை -23-

அவதாரிகை –

இப்படி நிர் விகாரமான ஆத்ம வஸ்துவுக்கு
பரிணாமித்வம் கொள்ளுகிற
ஆர்ஹத மதம் அயுக்தம் என்னும் இடத்தை
தர்சிப்பிக்கிறார் மேல் –

ஆர்ஹதர்
ஆத்மாவை
தேக பரிமாணன்
என்றார்கள் –

ஆர்ஹதர் ஆகிறார் –
ஜைனர் அவர்கள் -பாதமே வேதனா (எனது கால்கள் வேதனை அளிக்கிறது )-இத்யாதி
ப்ரகாரேண ஆபாத சூடம் தேஹத்தில் யுண்டான துக்கா யனுபவம்
ஆத்மா தேக பரிணாமம் அல்லாத போது கூடாது ஆகையால்
ஆத்மா ஸ்வ கர்ம அனுகுணமாக பரிக்ரஹிக்கும்
கஜ பீபிலாதி சரீரங்களுக்கு அனுகூலமாக பரிணமித்து
தத் தத் ஏக பரிமாணனாய் இருக்கும் என்று இறே சொல்லுவது –
அத்தை அருளிச் செய்கிறார் –
தேக பரிமாணன் -என்றார்கள் -என்று-

——————————————————————————

சூர்ணிகை -24-

அவதாரிகை –

அத்தை நிராகரிக்கிறார் –

அது
ஸ்ருதி விருத்தம் –

இவ்விடத்தில் இவர்க்கு விவஷிதையான ஸ்ருதி ஏது என்னில்
அம்ருத அஷர மஹர (ஆத்மா மரணம் அற்றவன் மாறுபாடு அற்றவன் )-என்று
ஆத்மாவினுடைய நிர் விகாரத்வ பிரதிபாதிகையான ஸ்ருதி யாக வேணும் –

தேக பரிமாணன் என்கிற பஷம்
ஆத்மா நிர்விகாரன் என்கிற ஸ்ருதியாலே பாதிதம் -என்று
இவர் தாமே தத்வ சேகரத்திலே அருளிச் செய்கையாலே –

ஏஷ அணுர் ஆத்மா (இந்த ஆத்மா அணு அளவே உள்ளான் )–
வாலாக்ர சத பாகஸ்ய(நெல்லின் நுனியை நூறு பாகமாக வெட்டினால் வரும் ஒரு பாகத்தின் அளவு கொண்டவன் ) -இத்யாதி
ஸ்ருதிகளும் தேக பரிமாண பஷத்துக்கு பாதிகைகள் ஆகையாலே
அவற்றையும் இவ் விடத்திலே சொல்லுவாரும் உண்டு –

—————————————————————————————————–

சூர்ணிகை -25-

அவதாரிகை –

ஏதத் விஷயமாக தூஷணாந்தரமும்
அருளிச் செய்கிறார் –

அநேக தேகங்களை
பரிக்ரஹிக்கிற
யோகிகள்
ஸ்வரூபத்துக்கு
சைதில்யமும் வரும் –

அதாவது
தேக பரிமாணம் -என்னும் பஷத்தில்
சம் சித்த யோகராய்
சௌபரியைப் போலே ஏக காலத்திலே அநேக தேகங்களை பரிகிரஹிக்கும் அவர்களுக்கு
தங்களுடைய ஸ்வரூபத்தை அநேகமாக சினனமாக்கிக் கொண்டு
அவ்வவ தேகங்களை பரிக்ரஹிக்க வேண்டி வரும் என்கை –

பரகாய பிரவேச முகேன அநேக சரீரங்களை பரிக்ரஹிக்கிற யோகிகள் ஸ்வரூபத்துக்கு
ஸ்தூலமான சரீரத்தை விட்டு ஸூஷ்மமான சரீரத்தை பரிக்ரஹிக்கும் அளவில்
இதுக்கு எல்லாம் அது அவகாசம் போராமையாலே சைதில்யம் வரும் என்னவுமாம் –

ஏவஞ்சாத்மா கார்த்ஸ்ந்யம் (2-2-32-ஆத்மாவிற்கு நிறைவின்மை ஏற்படுவதால் )-என்கிற ஸூத்ரத்திலே சொல்லுகிறபடியே
அல்ப மகத் பரிமாணங்களான கஜ பீபிலிகாதி சரீரங்களை
ஸ்வ கர்ம அனுகுணமாக
பரிஹரிக்கும் அவர்களுக்கு
கஜ சரீரத்தை விட்டு பிபீலிகா சரீரத்தை பரிஹரிக்கும் அளவில்
கஜ சரீர சம பரிமாணமாய் இருக்கும் அந்த ஸ்வரூபத்துக்கு
பிபீலிகா சரீரம் அவகாசம் போராமையாலே
சைதில்யம் வரும் என்று
இங்கனே இவ் வாக்யத்துக்கு யோஜித்தாலோ என்னில்
யோகிகள் ஸ்வரூபதுக்கு என்கையாலே
அது இவ் விடத்தில் இவருக்கு விவஷிதம் அன்று-

——————————————————————–

சூர்ணிகை -26-

ஞான ஆஸ்ரயம் ஆகையாவது
ஞானத்துக்கு
இருப்பிடமாய்
இருக்கை –

ஞானமாவது
ஸ்வ சத்தா மாத்ரத்தாலே ஸ்வ ஆஸ்ரயத்தைப் பற்றி
ஸ்வ பர வ்யவஹாரத்துக்கு உடலாய் இருப்பதொரு
ஆத்ம தர்மம்

இதுக்கு ஆத்மா ஆஸ்ரயம் ஆகையாவது
தீப பிரபைகள் இரண்டும் தேஜோ த்ரவ்யமாய் இருக்கச் செய்தே
தீபம் பிரபைக்கு ஆஸ்ரயமாய் இருக்குமா போலே

தானும் ஜ்ஞான ஸ்வரூபனாய் இருக்கச் செய்தே
ஸ்வ தர்மமான ஜ்ஞானத்துக்கு தன்னை ஒழிய
ப்ருதக் ஸ்திதி யுப லம்பங்கள் இல்லாதபடி தான் ஆதாரமாய் இருக்கை

அத யோ வேதேதம் ஜிக்ராணீதி ச ஆத்மா -(சாந்தோக்யம் -8-12-4- யார் ஒருவன் யான் இதை முகர்கிறேன் –
என்று உணர்கிறானோ அவனே ஆத்மா )

மனசை வைதாந் காமாந் பஸ்யந் ரமதே-(சாந்தோ -8-12-5-மனம் கொண்டு அவன் அனைத்து விருப்பங்களையும் )

ந பஸ்யோ ம்ருத்யும் பஸ்யதி -(சாந்தோ –7-26-2-ப்ரஹ்மத்தைக் கண்டவன் ம்ருத்யு எனப்படும் அவித்யையை அடைவது இல்லை )

விஜ்ஞா தார மரே கேந விஜாநீயாத-(ப்ரு -2-4-44-எதன் உதவியால் ஒருவன் அறிபவனை அறிகிறான் )

ஜாநாந் யே வாயம் புருஷ-(சாந்தோ -7-26-2-இந்தப் புருஷன் நிச்சயமாக அறிகிறான் )

ஏஷ ஹி த்ரஷ்டா ஸ்ப்ரஷிடா ஸ்ரோதா ரசயிதா க்ராதா மந்தா போக்தா கர்த்தா விஜ்ஞானாத்மா புருஷ-(ப்ர–4-9-அந்தப் புருஷனே
காண்பவன் கேட்ப்பவன் சுவைப்பவன் முகர்பவன் சிந்திப்பவன் அறிபவன் செய்பவன் -ஞான மயமாக உள்ளவன் ஆவான் )

ஏவமே வாஸ்ய பரி த்ரஷ்டு (ப்ர–6-5–இப்படியாகப் பார்ப்பவனுக்கே சொந்தமாக உள்ளவையும் )-

இத்யாதி ஸ்ருதிகளாலே ஜ்ஞாத்ருத்வம் சித்தம்-

———————————————————————————————

சூர்ணிகை -27-

ஏவம் பூதமான ஆத்மாவினுடைய ஜ்ஞாத்ருத்வத்தை
இசையாதே
ஜ்ஞானம் மாத்ரம் என்று சொல்லுகிற
பௌத்தாதிகள் யுடைய மதத்தை
நிராகரிக்கைக்காக தத் தத் பஷத்தை அனுவதிக்கிறார் –

ஆத்மா
ஜ்ஞானத்துக்கு
இருப்பிடம் அன்றிக்கே
ஜ்ஞானம் மாதரம்
ஆகில் –

———————————————————————–

சூர்ணிகை -28-

அஹம் இதம் ஜாநாமி-என்கிற
பிரத்யஷத்தாலே
அத்தை நிராகரிக்கிறார் –

நான் அறிவு என்று
சொல்ல வேணும்
நான் அறியா நின்றேன்
என்னக் கூடாது –

அதாவது –
ஆத்மாவுக்கு ஞான ஆஸ்ரயம் அன்றிக்கே
கேவலம் ஜ்ஞானமாய் இருக்கும் அளவே உள்ளதாகில்
நான் அறிவு -என்று தன்னை ஞான மாத்ரமாக சொல்லுகை ஒழிய
நான் இத்தை அறியா நின்றேன் -என்று தன்னை ஞாதாவாகச் சொல்லக் கூடாது -என்கை –

இவ் வாதத்தை நான் அறியா நின்றேன் என்கையாலே
விஷய க்ராஹியானதொரு ஜ்ஞானத்துக்கு தான் ஆஸ்ரயம் என்னும் இடம் தோற்றா நின்றது இறே
இப்படி ஆத்மாவினுடைய ஞாத்ருத்வம் ப்ரத்யஷ சித்தம் ஆகையாலே அபாதிதம் என்று கருத்து –

இதம் அபிவேத்மி இதி ஆத்ம வித்த்யோர் விபேதே ஸ்புரதி யதி தத் ஐக்யம் பாஹ்யம் அபி ஏகம் அஸ்து -(ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் -2-10-
நான் இதனை அறிந்து கொள்கிறேன் -என்ற சிந்தனையின் மூலமே ஆத்மாவுக்கும் ஞானத்துக்கும் உள்ள வேற்றுமை தெளிவாகிறது
இவை இரண்டும் ஒன்றே என வாதம் செய்யும் போது இவை இரண்டின் மூலம் அறியப்படும் விஷயம் மட்டும் ஏன் விலக்கப்பட வேண்டும்
மூன்றும் ஒன்றே எனக் கூற வேண்டியது தானே – ) –என்று பட்டரும்
இப்படி இறே பௌதம மத நிரா கரணம் பண்ணுகிற இடத்தில் அருளிச் செய்தது —

———————————————————————————————————–

சூர்ணிகை -29-

அவதாரிகை –
ஜ்ஞாத்ருத்வ கர்த்ருத்வ போக்த்ருத்வங்கள் மூன்றும் சொல்ல வேண்டி இருக்க
ஜ்ஞான ஆஸ்ரயமாய் -என்று
ஜ்ஞாத்ருத்வ மாத்ரத்தைச் சொல்லி
மற்றவை இங்கு சொல்லாது ஒழிவான் ஏன்
என்கிற சங்கையிலே அருளிச் செய்கிறார் –

ஜ்ஞாதா என்ற போதே
கர்த்தா
போக்தா
என்னுமிடம்
சொல்லிற்று ஆய்த்து-

———————————————————————-

சூர்ணிகை -30-

அவதாரிகை –

இப்படி பிரதிஞ்ஞா மாத்ரத்திலே போராது
என்று அதுக்கு ஹேதுவை அருளிச்
செய்கிறார் –

கர்த்ருத்வ
போக்த்ருத்வங்கள்
ஜ்ஞான அவஸ்தா விசேஷங்கள்
ஆகையாலே

ஹேய உபாதேய ஜ்ஞான மூலம் ஜ்ஞாத்ருத்வம் ஆத்மன
தத் தத் ப்ரஹாணோ பாதான சிகீர்ஷா கர்த்ரு தாஸ்ரய (ஆத்மாவின் ஞானத்துடன் கூடிய தன்மை என்பது
நன்மை மற்றும் தீமை இவற்றை அறிவதற்கு ஆதாரமாக உள்ளது –
அவற்றை விடுதல் மற்றும் கைக் கொள்ளுதல் ஆகியவற்றுக்கு ஏற்படும் ஆசை என்பதே
செயல் ஆற்றக் காரணம் ஆகிறது – )-என்கிறபடியே
ஆத்மாவினுடைய ஜ்ஞாத்ருத்வம் ஹேய உபாதேய பிரதிபத்திக்கு ஹேதுவாய் இருக்கும்

அவ்வோ ஹேயங்களை விடுகையிலும்
உபாதேயங்களைப் பற்றுகையிலும் உண்டான சிகீஷா கர்த்ருத்வம் அடியாக இருக்கும்
கர்த்தாவுக்கு இறே சிகீர்ஷை யுள்ளது
அந்த சிகீர்ஷை தான் ஜ்ஞான அவஸ்தா விசேஷம் இறே

அத்தோடு கர்த்ருத்வதுக்கு உண்டான பிரதயாசத்தியைக் கடாஷித்து
கர்த்ருத்வத்தை ஜ்ஞான அவஸ்தா விசேஷம் என்று உபசரித்து அருளிச் செய்கிறார்

அல்லது
கர்த்ருத்வம் ஆவது க்ரியாஸ்ரத்வம் ஆகையாலே அத்தை
ஜ்ஞான அவஸ்தா விசேஷம் என்று முக்கியமாக சொல்லப் போகாது இறே

கிரியை யாவது –
ஜ்ஞானாதி இச்சதி ப்ரயததே கரோதி (அறிகிறான் விரும்புகிறான் முயல்கிறான் செய்கிறான் )-என்று
ஜ்ஞான சிகீர்ஷா ப்ர யத்ந அநந்தர பாவியான ப்ரவ்ருத்தி யாகையாலும்
தத் ஆஸ்ரயம் கர்த்ருத்வம் ஆகையாலும்
அத்தை ஜ்ஞான அவஸ்தா விசேஷம் என்று உபசார பிரயோகம் என்றே கொள்ள வேணும்

இனி போக்த்ருத்வம் ஆவது போகாஸ்ரயத்வம்
போகமாவது ஸூக துக்க ரூபமான அனுபவ ஜ்ஞானம்
அது ஜ்ஞான அவஸ்த விசேஷம் இறே
தத் ஆஸ்ரயத்வத்தை ஜ்ஞான அவஸ்தா விசேஷம் என்று
சொல்லுகையாலே இதுவும் ஔபசாரிகம்

இப்படி ஜ்ஞாத்ருத்வதுக்கும் இவற்றுக்கும் உண்டான
ப்ரத்யா சத்தி அதிசயத்தாலே
தத் ஐக்ய கதனம் பண்ணலாம் படி இருக்கையாலே
ஜ்ஞாத்ருத்வம் சொன்ன போதே
கர்த்ருத்வ போக்த்ருத்வங்கள் சொல்லிற்று ஆய்த்து என்ன தட்டில்லை இறே –

————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: