தத்வ த்ரயம் -அவதாரிகை/ சித் பிரகரணம்-சூர்ணிகை -1-7— –ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —

ஸ்ரீ சைல தயா பாத்ரம் தீ பக்த்யாதி குணார்ணவம்
யதீந்திர பிரணவம் வந்தே ரம்யஜா மாதரம் முனிம்-

லோகச்சார்யா குரவே கிருஷ்ண பாதச்ய ஸூநவே
சம்சார போகி சந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நாம –

வாழி யுலகாரியன் வாழியவன் மன்னு குலம்
வாழி முடும்பை என்னு மா நகரம் -வாழி
மனம் சூழ்ந்த பேரின்ப மல்கு நல்லார்
இனம் சூழ்ந்து இருக்கும் இருப்பு

——————————————————–

அவதாரிகை —

அநாதி மாயயா ஸூக்த -என்கிறபடியே –
அநாதி அசித் சம்பந்த நிபந்தனமாக
அஞ்ஞான அந்தகாரத்தாலே அபி பூதராய் –
ஆத்ம ஸ்வரூபம்
பிரக்ருதே பரமாய் -ஞானானந்தமயமாய் -பகவத் அனன்யார்ஹ சேஷமாய் -இருக்கும் படியை அறியப் பெறாதே –
தேவோஹம் மனுஷ்யோஹம் -என்று ஜடமான தேஹத்திலே அஹம் புத்தியைப் பண்ணியும்
தேஹாதிரிக ஆத்மஞானம் பிறந்ததாகில் –
ஈஸ்வரோஹம் அஹம் போகி-ஸ்ரீ கீதை –16-14- -என்று ஸ்வ தந்திர புத்தியைப் பண்ணியும்
சேஷத்வ ஞானம் யுண்டாய்த்தாகில் அப்ராப்த விஷயங்களில் அத்தை விநியோகித்தும்

இப்படி
யோன்யதா சாந்த மாதமான அந்யதா பிரதிபத்யதே
கிம் தேன ந க்ருதம பாபம சோரேணா த்மாபஹாரிணா -மஹா பாரதம் -என்கிறபடியே
ஆத்ம ஸ்வரூபத்தில் அந்யதா பிரதிபத்தி ரூபமாய்
அகில பாப மூலமான
ஆத்மாபஹாரத்தைப் பண்ணி
அல்ப அஸ்த்ரத்வாதி தோஷ துஷ்டமான
சப்தாதி போகைகத தத் பரராய்
விசித்ரா தேக சம்பதீஸ்வராய நிவேதிதும்
பூர்வமேவ க்ருதா ப்ரஹ்மன் ஹஸ்த பாதாதி சமயுதா-ஸ்ரீ விஷ்ணு தத்வம் -என்கிறபடியே
கரண களேபர விதுரமாய்
போக மோஷ சூன்யமாய்
அசித விசேஷிதமாய்க் கிடக்கிற தசையிலே –

பரம தயாளுவான சர்வேஸ்வரன்
ஸ்வ சரண கமல சமாஸ்ரையண உபகரணமாக கொடுத்த சரீரத்தைக் கொண்டு
தத் சமாஸ்ரயணத்தைப் பண்ணி உஜ்ஜீவிக்கலாய் இருக்க
அத்தைச் செய்யாதே –
அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன் -என்கிறபடியே
அதன் வழியே போய்
ஆறு நீஞ்சக் கொடுத்த தெப்பத்தைக் கொண்டு அக்கரை ஏறலாய் இருக்க
நீர் வாக்காலே ஒழிகிக் கடலிலே புகுவாரைப் போலே
சம்சார நிஸ்தரணத்துக்கு உடலானவற்றையும்
சமசரணத்துக்கு உடலாக்கி

அநாதி அவித்யா சஞ்சித அநந்த புண்ய பாப ரூப கர்ம அனுகுணமாக
மாறி மாறி பல பிறப்பும் பிறந்து
பிறந்த ஜன்மம் தோறும் துரந்த-(துர அந்த அந்தமில்லாத ) தாபத் த்ரய தவாநல தஹ்யமானராய்
இப்படி அநாதிகாலம் போரா நிற்கச் செய்தேயும்
அதீத அநாகதம் அறியாமையாலே
அதிலே ஒரு கிலேசம் இன்றிக்கே
கர்ப்ப ஜன்ய பால்ய யௌவன வார்த்தக மரண நரக ரூப
அவஸ்த சப்தகத்தை பிராபித்து
துக்க பரம்பரைகளை அனுபவித்து

இப்படி அநந்த கிலேச பாஜனமான சம்சார சாகரத்திலே அழுத்திக் கிடந்தது அலைகிற
சேதனருடைய அனர்த்த விசேஷத்தை அனுசந்தித்து
இவர்கள் யுடைய உஜ்ஜீவனத்துக்கு கிருஷி பண்ணிக் கொண்டு போருகிற
சர்வபூத ஸூஹ்ருதான சர்வேஸ்வரன்
ஏவம சமஸ்ருதி சகர்ச்தே பராமயமானே ஸ்வ கர்மபீ ஜீவே
துக்க ஆகுலே விஷ்ணோ க்ருபா காபயுபஜாயகே –(காபி உபயாஜயகே – -காபி சபரி / காபி குகன் போலே )-என்கிறபடியே
தன்னுடைய திரு உள்ளத்தில் பிறந்த அபார காருண்யத்தாலே –

ஜாயமானம ஹி புஷமா யம பஸ்யேன் மது ஸூதன
சாத்விகஸ் ச து விஜஞ்ஞேயச ச வை மோஷார் ததசிந்தக -என்கிறபடியே
ஜாயமான காலத்தில் பண்ணின விசேஷ கடாஷத்தாலே
நிரஸ்த ரஜஸ் தமஸ்சகனாய்
பிரவ்ருத்த சத்வ குணகனாய்
முமுஷூவான சேதனனுக்கு
தத்வ ஜ்ஞானம் பிறந்தால் அல்லது மோஷ சித்தி இல்லாமையாலே
தத்வ ஞான சமபாதயாம் அளவில் அது
சாஸ்திர ஜன்யமாதல்
உபதேசகமாய் ஆதல் -வேண்டுகையாலும் –

சாஸ்திர ஜனயமாம் அளவில்
சாஸ்திர ஞானம் பஹூ க்லேசம -என்கிறபடியே பஹூ கிலேச சாத்தியம் ஆகையாலே
துஸ்சாதமாகையாலும்
வருந்தி சாதிக்கப் பார்த்தாலும்
அனனதபாரம பஹூ வேதி தவயம அல்பசச காலோ பஹவசச விக்னா -என்கிறபடியே
சேதனர்-மந்த மதிகளுமாய்
மந்த ஆயுஸ்ஸூக்களுமாய்
அதுக்கு மேலே
விக்னங்களும் அனந்தங்களாய் இருக்கையாலே
எல்லாருக்கும் ஒக்க சித்திக்கை அரிதாய் இருக்கையாலும்

இனித்தான்
சாஸ்திர அப்யாசத்துக்கு அனதிகாரிகளான ஸ்த்ரி சூத்ராதிகளுக்கு
முமுஷூத்வம் யுண்டானாலும் நிஷ் பிரயோஜனமாம் படி இருக்கையாலும்
உபதேசகமயமாம் அளவில் யுக்த தோஷம் ஒன்றும் இல்லாமையாலும்
இந்த விசேஷத்தை திரு உள்ளம் பற்றி
சகல சாஸ்திர நிபுணராய்
சகல சேதன உஜ்ஜீவன காமராய்
பரம காருணிகரான-
பிள்ளை லோகாச்சார்யார்
ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாச புராணங்களிலே
துரவகாஹமாம் படி பரக்கச் சொல்லப் படுகிற
சித் அசித் ஈஸ்வர
தத்வங்களின் யுடைய
ஸ்வரூப ஸ்வ பாவ விசேஷங்களை
அகில சேதனர்க்கும் ஸூ க்ரஹமாகவும் ஸூ வ்யகதமாகவும்
இப்பிரபந்த முகேன அருளிச் செய்கிறார் –

நடுவில் திரு வீதிப் பிள்ளை பட்டர்
ஆச்சான் பிள்ளை
முதலான பூர்வாச்சார்யர்கள் யுடைய பிரபந்த நிர்மாணத்துக்கும் கருத்து இதுவே இறே
நிர் அஹங்காரராய்
பர சமருததி -ஏக – பிரியராய்
க்யாதி லாபாதி நிரபேஷராய்
இருக்கிறவர்கள் பலரும் பிரபந்தம் இட வேண்டுவான் என்-

ஒருவரிட்ட பிரபந்தத்தை மற்றும் உள்ளவர்கள் பரிபாலனம் பண்ண அமையாதோ -என்னில்
ஆழ்வார்கள் பலரும் ஏக கண்டராய் அருளிச் செய்கையாலே
அர்த்தத்துக்கு ஆப்ததை- சித்தித்தாப் போலே
ஆச்சார்யர்கள் பலரும் ஏக கண்டமாக அருளிச் செய்த அர்த்தம் என்று
மந்தமதிகளும் விச்வசிக்கைக்காக –
இன்னமும் ஓர் ஒன்றில் அவிசிதமான அர்த்த விசேஷங்கள்
ஓர் ஒன்றிலே விசதமாய் இருக்கும் –
அதுக்கடி ஸூக்தி விசேஷங்களும்
சங்கோச விஸ்தரங்களும் –
இது ஏக கர்த்ருகங்களான பிரபந்த விசேஷங்களுக்கும் ஒக்கும் –

———————————————————————-

சித் பிரகரணம் –

சூர்ணிகை -1-
முமுஷூ வான சேதனனுக்கு
மோஷம் யுண்டாம் போது
தத்வ த்ரய ஞானம் யுண்டாக வேணும் –

முமுஷூ வாகிறான் மோஷம் இச்சை யுடையவன்
சம்சார விமோசனத்தில் இச்சை யுடையவன் -என்றபடி
முமுஷூ வானவன் என்கையாலே
சம்சார நிவ்ருத்தியிலே ஒருவனுக்கு இச்சை யுண்டாகையில் உள்ள அருமை தோற்றுகிறது-
இந்த இச்சை பிறவாமை இறே அநாதி காலம் சம்சரித்தது
உஜ்ஜீவயிஷூவான சர்வேஸ்வரனும் இந்த இச்சை பிறக்கும் அளவு இறே பார்த்து இருக்கிறது –
சம்சாரத்தைப் பூண் கட்டிக் கொள்ள இச்சிக்க கடவ ஆத்மாவுக்கு தந் நின்வ்ருத்தியில்

இச்சை பிறக்கை துர்லபம் இறே
இப்போது இவர் சேதனன் -என்றது ச அபிப்ராயம்
அதாவது
சைதன்ய பிரயோஜனம் யுண்டாகத் தொடங்குகிறதும் இப்போது என்கை –
அநாதி காலம் வ்யர்த்தமே பிறத்தது இத்தனை இறே சைதன்யம் –
அதாவது உஜ்ஜீவனதுக்கு உறுப்பாகாமை
இனித் தான் சம்சார நிவ்ருதியை இச்சிக்கிறது
நிரதிசய ஆதிசய ஆஹ்லாத ஸூக பாவைக லஷணையான பகவத் பிராப்திக்கு உறுப்பாக இறே
தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் அது இறே -உணர்வு ஆவது

ஆத்ம பிராப்திக்கு உறுப்பாக சம்சார நிவ்ருத்தியை இச்சித்தாலும்
விபரீத ஞான கார்யமாம் இத்தனை
ஆகையால் பகவத் பிராப்திக்கு விரோதியான
சம்சாரத்தின் உடைய விமோசனத்தில் இச்சை யுடையனான அதிகாரிக்கு
அப்படி இருந்துள்ள மோஷம் ஆகிற புருஷார்த்தம் சித்திக்கும் போது
தத்வ த்ரய ஞானம் யுண்டாக வேணும் -என்கை –

தத்வ ஞான உத்பத்திக்கு முன்னே முமுஷை ஜனிக்க கூடுமோ என்னில்
பரீஷ்ய லோகானா–முண்டக உபநிஷத் – –
ஜாயமான -இத்யாதி -சுருதி ஸ்ம்ருதிகளில் சொல்லுகிற பிரகிரியையாலே கூடும் –
உண்டாக வேணும் –என்ற அவச்ய அபேஷித்வம் தோற்ற அருளிச் செய்கையாலே
தத்வ ஞானான் மோஷ லாபம் -என்கிற இது சகல சித்தாந்த சாதாரணம் இறே

மோஷத்திலும் தத்வத்திலும் இறே விப்ரபத்தி உள்ளது –
ஆனால் ஜ்ஞானான் மோஷம் -என்கிற நியமம் கொள்ளும் போது –
பசுர் மனுஷ்ய பஷி வா யே ச வைஷ்ணவ சம்ஸ்ரயா தேனைவ தே பிரயாச்யந்தி தத் விஷ்ணோ பரமம் பதம் -என்றும்
யம் யம் ஸ்ப்ருசதி பாணிப்யாம் யம் யம் பச்யதி சஷூஷா ஸ்தாவராண் யபி முச்யந்தே கிம் புநர் பாந்தவா ஜநா–என்றும்
ஞான யோக்யதை இல்லாத திர்யக் ஸ்தாவரங்களுக்கும்
வைஷ்ணவ சம்பந்தத்தாலே மோஷ சித்தியைச் சொல்லுகிற வசனங்களுக்கு வையர்த்த்யம் வாராதோ -என்னில் -வாராது
அவற்றுக்கு முமுஷுத்வம் தானும் இல்லை இறே –

இங்கு முமுஷுவான சேதனனுக்கு இறே மோஷ சித்திக்கு தத்வ த்ரய ஞானம் யுண்டாக வேணும் என்கிறது –
அங்குத் தானும் முமுஷ்த்வமும் -தத்வ ஞானமும் -இவற்றின் -பககல் இன்றிக்கே இருக்கச் செய்தேயும்
இவை இரண்டாலும் பூர்ணனாய் இருப்பான் ஒரு வைஷ்ணவன் யுடைய அபிமானம் இறே கார்யகரமாகச் சொல்லுகிறது –
ஆகையால் அபிமானி யானவனுடைய ஜ்ஞான விசேஷத்தை கடாஷித்து இறே
அபிமான அந்தர் பூதமான இவற்றுக்கும் ஈஸ்வரன் கார்யம் செய்கையாலே –
தத்வ ஞானம் மோஷம் என்கிற இது அவ்விடத்திலும் சத்வாரகமாக சித்திக்கும் –

தத்வ ஞானம் என்னாதே
தத்வ த்ரய ஞானம் என்கையாலே
தத்தவங்களை அதிகமாகவும் நயூநகமாகவும் கொள்ளுகிற
பாஹ்ய குத்ருஷ்டி மதங்கள் அர்த்தாத் பிரதிஷிப்தங்கள்-

இவர் தாம் தத்வ த்ரயம் என்று நிர்ணயிக்கைக்கு பிரமாணம் என் -என்னில்
நிர்தோஷ பிரமாணமான வேதா நாதம்
போக்தா போக்யம் ப்ரேரிதா ச மதவா -என்று
போக்த்ரு சப்தத்தாலும்
போக்ய சப்தத்தாலும்
ப்ரேரிதா சப்தத்தாலும்
சித் அசித் ஈஸ்வர தத்வங்கள் மூன்றையும் இறே சொல்லுகிறது –
ஆகையால் வேதாந்த பிரதிபாத்யம் தத்வ த்ரயமுமே என்று நிச்சயித்து
மோஷம் யுண்டாம் போது தத்வ த்ரய ஞானமும் யுண்டாக வேணும் -என்கிறார் –

ஆனால் -தமேவம விதவா நமருத இஹ பவதி
நாந்ய பந்ததா அயநாய விதயதே – -என்று
வேதாந்தங்களில் பகவத் தத்வ ஞானம் ஒன்றுமே மோஷ சாதனம் என்னா நிற்க
தத்வ இதர–தத்வாந்தர- பரிஜ்ஞானத்தையும் இவர் மோஷ சாதனமாக அருளிச் செய்வான் என் -என்னில்
பகவத் தத்வத்தை அறியும் போது சகல சேதன அசேதன விலஷணமாகவும்
இவற்றுக்குக் காரணமாகவும்
வியாபகமாகவும்
தாரகமாகவும்
நியாமாகவும்
சேஷியாகவும்
அறிய வேண்டுகையாலும்
தத்வாந்தரங்களை அறியாத போது இப்படி அறிய விரகு இல்லாமையாலும்
தத்வ த்ரய ஞானம் யுண்டாக வேணும் -என்னக் குறை இல்லை –

போக்தா போக்யம் ப்ரேரிதாரம ச மத்வா -என்றும்
ப்ருதகாதமா நம ப்ரேரிராதம ச மதவா -ஜூஷடச் ததஸ தேனா மருத்தவ மீதி -என்கிற
ஸ்ருதிகளுக்கும் ஹிருதயம் இது இறே
இங்கன் அன்றாகில் தமேவம வித்வான் -இத்யாதி ஸ்ருதியோடு
இதுக்கு விரோதம் வரும்
ஆகையால் இந்த சுருதி சாயையாலே இவரும் அருளிச் செய்தார் ஆகையாலே
வேதாந்த விரோதி பிரசங்கமே இல்லை –

—————————————————————

சூர்ணிகை -2-

அவதாரிகை –
தத்வ த்ரயம் தான் ஏது என்னும்
ஆகாங்ஷையிலே அருளிச் செய்கிறார் –

தத்வ த்ரயமாவது
சித்தும்
அசித்தும்
ஈஸ்வரனும்

சித்தாவது -சைதன்ய ஆதாரமான வஸ்து
அசித்தாவது சைதன்ய அநாதாரமான வஸ்து
ஈஸ்வரன் ஆகிறான் யோக வைஷிகாதித ந்தரத்தில் உள்ளார் சொல்லுகிற கணக்கிலே
ஒரு புருஷ விசேஷம் அன்றிக்கே
வேதாந்திகள் சொல்லுகிற
சிதசித நியந்தா –
ஷரம பிரதான மமருதா ஷரம ஹர ஷராதமா நா வீசதேவ ஏக –
பிரதான ஷேத்ரஞ பத்திர குணேச -என்னக் கடவது இறே-

—————————————————————————————–

சூர்ணிகை -3-

அவதாரிகை –

உபதேச ( உத்தேச்ய)-கிரமத்திலே
தத்வ த்ரயத்தின் யுடையவும்
ஸ்வரூப ஸ்வபாவ விசேஷங்களை உபபாதிப்பதாக
திரு உள்ளம் பற்றி
பிரதமம் சித் தத்தவத்தை உபபாதிக்க உபரமிக்கிறார் –

சித் என்கிறது
ஆத்மாவை –

நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டரும்
ஆச்சான் பிள்ளையும்
முதலான ஆச்சார்யர்கள் தத்வ த்ரயம் அருளிச் செய்கிற இடத்தில்
அசித் உபக்ரமமாக அருளிச் செய்தார்கள்
இவர் சித் உபக்ரமமாக அருளிச் செய்தார்

இதற்க்கு கருத்து
அசித் தத்வம் ஹேயதயா ஜ்ஞாதவ்யம் ஆகையாலும்
ஈஸ்வர தத்வம் உபாதேயதயா ஜ்ஞாதவ்யன் ஆகையாலும்
இப்படி இரண்டு தத்வத்தையும் அறிகைக்கு அதிகாரியான சேதனனுடைய ஸ்வரூபம் தன்னை
முதலிலே அறிந்து கொள்ள வேணும் இறே என்று –

அவர்கள் தான் அப்படி அருளிச் செய்வான் என் என்னில்
ஆத்மாவினுடைய ப்ரக்ருதே பரத்வஜ்ஞ்ஞா நம பிரகிருதியை அறியாத போதே கூடாமையாலே
முந்துற பரக்ருத தத்வத்தை அறிந்து
அநந்தரம்
தத் வ்யதிரிக்தனாய்
தத் அநதர்வர்த்ததியான ஆத்மாவை அறிந்து
அநந்தரம்
ஆத்மாவுக்கு அந்தர்யாமியாய்
சரீரத்துக்கு ஆத்மாவைப் போலே
உபயத்துக்கும் அபிமானியாய் இருக்கிற பரமாத்வாவினுடைய ஸ்வரூபத்தை அறிகை
புத்தயா ஆரோஹகரம் ஆகையாலே அருளிச் செய்தார்கள் –

அசித் உபக்ரமாக சொல்லுகிற இது
அன்ன மயம் தொடக்கி
ஆனந்த மயம் அளவும் ஆரோஹிதத ஸ்ருதி மரியாதையைச் சேரும்

சித் உபக்ரமாக சொல்லுகிற இது
போக்தா போக்கியம் ப்ரேரிதாரமா -இத்யாதி ஸ்ருதிக்குச் சேரும்
ஆகையால் இரண்டு க்ரமமும் வேதாந்த சித்தம் –

சித் அசித் ஈஸ்வர தத் ஸ்வ பாவ -என்று ஆளவந்தாரும்
அசேஷ சிச் அசித் வஸ்து சேஷினே-என்று ஸ்ரீ பாஷ்யகாரரும்
அருளிச் செய்த வசனங்கள் உபய கோடியிலும் சேரும்
எங்கனே என்னில்
சித் உபக்கிரம யோஜனைக்கு தானே ஸ்வ ரசமாய் இருந்தது இறே

அசித் உபக்கிரம யோஜனையில் வந்தால் க்ரம விஷயா அன்று அவர்கள் அப்படி அருளிச் செய்தது –
சமசதபதமாக அருளிச் செய்கையாலே சமாசத்தில் அப்யர்ஹிதமாதல்
அலாபச தரமாதல்
முற்படக் கடவது என்கிற நியாயத்தைப் பற்ற
அலபாச தரமான சித் சப்தம் முன்னாக அருளிச் செய்தார்கள் இத்தனை
அபயர் ஹிதனான ஈஸ்வரன் தன்னை முதலில் எடாதே
சித் சப்தத்தாலே சேதனனைச் சொல்லிற்று
அலாபசதரம பூர்வமா -என்கிற அனுசாசன பதித்தாலே
இப்படி இரண்டு க்ரமமும் -வேத வைதிக -பரிக்ருஹீதம் ஆகையாலே
இரண்டும் முககயம் என்று கொள்ளக் குறை இல்லை-

சித் சப்தம் ப்ரேஷோபலப்திச சித் சமவித பிரதிபத் ஜ்ஞப்தி சேதனா -என்று
ஞான வாசி சப்தங்களோடு சஹபடிதம் ஆகையாலும்
ஜ்ஞான ஆஸ்ரய வஸ்துவில் இதுக்கு பிரசித்தி ப்ராசுயம் இல்லாமையாலும்
ஷராதம நா வீசதே தேவ ஏக –
ஆதமா நம ந தரோ யமயதி யமாதமா ந வேத யச்யாத்மா சரீரம் –
ஆத்மா ஜ்ஞான மயோமல-என்று
இப்படி ஸ்ருதி ச்ம்ருதிகளிலே பல இடங்களிலும் சொல்லுகையாலே
ஆத்ம சப்தத்துக்கு ஜீவ விஷயத்தில் பிரசித்தி ப்ராசுர்யம் யுண்டாகையாலும்
சித் -என்கிறது ஆத்மாவை -என்று ஸ்புடமாக அருளிச் செய்கிறார்-

—————————————————————————-

சூர்ணிகை -4-

அவதாரிகை –
இனி இந்த ஆத்மாவினுடைய ஸ்வரூபம்
இருக்கும் படி எங்கனே -என்கிற சங்கையிலே
ஆத்மா ஸ்வரூப லஷணத்தை அருளிச் செய்கிறார் –

ஆத்ம ஸ்வரூபம்
சென்று சென்று பரம் பரமாய் -என்கிறபடியே
1-தேக
இந்த்ரிய
மன
பிராண
புத்தி
விலஷணமாய்
2-அஜடமாய்
3-ஆனந்த ரூபமாய்
4-நித்யமாய்
5-அணுவாய்
6-அவ்யக்தமாய்
7-அசிந்த்யமாய்
8-நிரவயவமாய்
9-நிர்விகாரமாய்
10-ஜ்ஞாநாஸ்ரயமாய்
11-ஈஸ்வரனுக்கு ந்யாம்யமாய்
12-தார்யமாய்
13-சேஷமாய்
இருக்கும்-

ஸ்ருதி ச்ம்ருதியாதிகளிலே ஒன்றைச் சொல்லலாய் இருக்க
இப்பொழுது ஆழ்வார் அருளிச் செய்த சந்தையை எடுத்தது –
தத்வ பிரதிபாதகங்களான ஸ்ருதியாதிகளில் காட்டில்
தத்வ தர்சிகளில் பிரதானரான ஆழ்வாருடைய வசனமே
தத்வ நிர்ணயத்துக்கு முக்ய பிரமாணம் என்று தோற்றுகைக்காக –
விதயச ச வைதிகாச த்வதீய கம யீரமேநோ நுசாரிண—20-என்று இறே பரமாச்சார்யர் அருளிச் செய்தது –

ஸ்வரூபம் ஆவது -ஸ்வ மமான ரூபம் -அதாவது -அசாதாரண ஆகாரம்
சென்று சென்று பரம் பரமாய் -என்றது
போய்ப் போய்ப் ஒன்றுக்கு ஓன்று மேலாய் இருக்கிற
அன்னமய
பிராணமய
மநோ மயங்களுக்கு
அவ்வருகாய் என்ற படி –

தேக இந்த்ரிய மநோ பிராண புத்தி விலஷணமாய்-என்கிற இடத்தில்
புத்தி சப்தத்தால்
மஹத் அனுக்ருஹீதமான அந்த கரணத்தைச் சொல்லுகிறதோ
ஜ்ஞானத்தை சொல்லுகிறதோ -என்னில்
இவருக்கு இங்கு விவஷிதம் ஞானம் ஆக வேண்டும்
தத்வ சேகரத்தில்
தேஹாதி வைலஷண்யம் அருளிச் செய்கிற இடத்தில்
அப்படி அருளிச் செய்கையாலே –
தேஹேந்தரிய மன பிராண தீபயோ நய -என்று இறே ஆளவந்தாரும் அருளிச் செய்தது-

———————————————————————————————

சூர்ணிகை -5

அவதாரிகை –

உத்தேசம் – லஷணம் -பரீஷை -என்று மூன்று வகைப் பட்டு இறே தத்வ நிர்ணயகரம் இருப்பது –
அதில் -சித்தும் அசித்தும் ஈஸ்வரனும் -என்று தத்வ த்ரயத்தையும் உத்தேசித்து
உத்தேச க்ரமத்திலெ அவற்றினுடைய ஸ்வரூப சோதனம் பண்ணுவதாக நினைத்து
பிரதமத்திலே சித் சப்தோதிஷ்டனான ஆத்மாவினுடைய ஸ்வரூப சோதனம் பண்ணுவதாக உபக்ரமித்து
தேக இந்த்ரிய மநோ பிராண புத்தி விலஷணமாய் -என்று தொடங்கி
சேஷமாய் இருக்கும் -என்னும் அளவாக
ஸ்வரூப லஷணத்தை அருளிச் செய்தார் –
அத்தைப் பரீஷிக்கிறார் மேல் –
அதில் பிரதமத்தில் ஆத்ம ஸ்வரூபத்தின் யுடைய
தேஹாதி வைலஷனண்யத்தை சோதிப்பதாக
தஜ் ஜிஜா ஸூகளுடைய -ப்ரஸ்னத்தை-கேள்வியை
அநு பாஷிக்கிறார் –

ஆத்ம ஸ்வரூபம்
தேஹாதி விலஷணம்
ஆனபடி
என்
என்னில்-

இது தன்னை தத்வ சேகரத்தில்
இவர் தாமே விஸ்தரேண அருளிச் செய்கிறார் –
தேஹம் அநேக அவயவ சங்கா தாத்மகம் என்னும் இடம் சித்தம் –
அதில் எல்லா அவயவங்களுக்கும் சைதன்யம் யுண்டாகில்
அநேக சேதனோ பலபதி பிரசங்கிக்கும்
அவயவங்களுக்கு அந்யோந்யம் அவிவாத நியமும்
அவற்றில் மமதா புத்தியும்
மமதா வ்யவஹாரமும் கூடாது
ஓர் அவயவத்துக்கே சைதன்யம் கொள்ளில்
அது விச்சின்னம் ஆனால் அவயவ அநந்தரம் அது அனுபவித்ததை ஸ்மரிக்கக் கூடாது
பின்பு அஹம் புத்தி வியவஹாரங்களும்
மமதா புத்தி வ்யவஹாரங்களும் தவிர வேணும் –
சர்வ சர்வ வ்யாபீயான ஸூ க துக்க அனுபவமும் கூடாது-

அவயவ சங்காத் மகம் அன்று சரீரம்
அவயவி அதிலே சைதன்யம் என்னவும் ஒண்ணாது –
உப லம்ப அனுபத்திகள் இல்லாமையாலே அவயவ ச்வீகாரம் அனுபபன்னம் ஆகையாலே-

கிஞ்ச பால தேஹோஹம அந்தஞான யுவதே தேஹோஹம் பஹூ ஞான மம சரீரம் -என்று
சரீராஹா மர்த்தங்களில் பிறக்கும் பேத பிரதிபத்தியும்
பேத வ்யவஹாரமும் கூடாது –

மமாயமாத்மா -என்கிற இடத்தில் போலே அமுக்கியம் என்ன ஒண்ணாது –
முக்யே பாதம் இல்லாமையாலே –

அன்றிக்கே
அஹம் புத்திக்கு சரீரம் விஷயம் என்று கொண்டாலும்
சுருதியாலும்
ஸ்ருத்யர்த்தா பததிகளாலும்
தேஹாதி ரிக்தனாய்
தேஹாந்தர பரிக்ரஹ யோக்யனான ஆத்மா சித்தன் –

பாஹ்ய இந்த்ரியங்களும் ஆத்மாவாக மாட்டாது -ஒருவனே சர்வ இந்த்ரியங்களையும் அறிகையாலே
இப்படிக் கொள்ளாத போது –
யாவன் ஒருவனான நான் இவ்வர்த்தத்தைக் கண்டேன் –
அந்த நானே ஸ்பர்சியா நின்றேன் -என்கிற பிரதி சந்தானமும் கூடாது –
சஷூஷே ஆத்மாவாகில் அந்தன் ரூபத்தை ஸ்மரியாது ஒழிய வேணும்
ச்ரோத்ரமே ஆத்மாவாகில் பதிரன் சப்தத்தை ஸ்மரியாது ஒழிய வேணும்
இப்படி மற்றை இந்த்ரியங்களிலும் கண்டு கொள்வது –

அந்த கரணமும் ஆத்மா வாக மாட்டாது
ஸ்மார்த்தாவினுடைய ஸ்மராணாதி கார்யங்களுக்கு கரணமாக கல்பிதம் ஆகையாலே
இது தானே ஸ்மரிக்கிறது என்ன ஒண்ணாது
ஸ்மரணத்துக்கு கரணம் இல்லாமையாலே

கரணமும் இது தானே என்ன ஒண்ணாது –விருத்தம் ஆகையாலே
வேறே ஓன்று கரணம் என்னில் அது பாஹ்ய கரணமாகில்
அது இல்லாதவனுக்கு ஸ்மர்த்தி கூடாது
ஆந்தர கரணமாகில் ஆத்மாவுக்கு மனஸ் என்று பேரிட்டதாய் விடும்
ஆந்தர கரணம் அநபேஷிதம் ஆகில் இந்திரியார்த்தத சம்பந்தம் யுண்டான போது எல்லாம் ஜ்ஞானம் பிறக்க வேணும்
ஆகையால் மனசும் ஆத்மாவாக மாட்டாது

பிராணங்களும் ஆத்மா வாக மாட்டாது
சங்காத ரூபங்கள் ஆகையாலே தேஹம் ஆத்மா என்கிற பஷத்துக்கு சொன்ன தூஷணங்கள் இங்கும் துல்யம்-

ஜ்ஞானமும் ஆத்மா வாக மாட்டாது
எனக்கு ஜ்ஞானம் பிறந்தது நசித்தது என்று ஷணிகமுமாய்
ஆத்ம தர்மமுமாய் தோற்றுகையாலே
ஸ்திரமாய் இருப்பான் ஒரு ஆத்மா உண்டு என்னும் இடம்
நேற்றுக் கண்ட நானே இன்றும் காணா நின்றேன் -என்கிற
பிரத்யபிஜ்ஞையாலே சித்தம் -என்று
இப்படி விஸ்தரேன அருளிச் செய்தார் இறே-

————————————————————————————————

சூர்ணிகை -6-

அவதாரிகை –

இப்படித் தனித் தனியே எடுத்துக் கழிக்கும் அளவில் கிரந்த விஸ்தாரமாம் என்று
மந்த மதிகளுக்கும் பிரதிபத்தி யோக்யமாம் படி
தேஹாதிகளை சமுசசித்யோ பாதானம் பண்ணி –
அவற்றில் காட்டில் ஆத்மாவுக்கு யுண்டான வைலஷண்யத்தை
சில உக்தி விசேஷங்களாலே ஸூ க்ரஹமாக
அருளிச் செய்கிறார் –

-தேஹாதிகள் -என்னுடைய தேஹாதிகள் -என்று-ஆத்மாவில் வேறுபட்டு தோற்றுகையாலும்
-இதம் -என்று தோற்றுகையாலும்—ஆத்மா -நான் என்று தோற்றுகையாலும்
-இவை ஒருகால் தோற்றி ஒரு கால் தோற்றாமையாலும்–ஆத்மா எப்பொழுதும் தோற்றுகையாலும்
-இவை பலவாகையாலும்-ஆத்மா ஒருவன் ஆகையாலும்
ஆத்மா இவற்றில் விலஷணன் என்று-கொள்ள வேணும்

தேஹாதிகள் -என்னுடைய தேஹாதிகள்-என்று  ஆத்மாவில் வேறுபட்டு தோற்றுகையாலும்
இதம் -என்று தோற்றுகையாலும் –
அதாவது
தேகாதிகள் ஆனவை என்னுடைய தேஹம் என்னுடைய இந்த்ரியம்
என்னுடைய மனசு என்னுடைய பிராணன் என்னுடைய புத்தி என்று
மமதா புத்திக்கும் மமதா வ்யவஹாரத்துக்கும் விஷயமாய்க் கொண்டு
அஹமர்த்த பூதனான ஆத்மாவுக்கு அநயமாய்த் தோற்றுகையாலும்
அப்படியே
இது தேஹம் இது இந்த்ரியம் -என்று இதம புத்தி வ்யவஹார விஷயமாய்க் கொண்டு
அஹமர்த்த வ்யதிரிகதமாய்த் தோற்றுகையாலும்
அங்கன் அன்றிக்கே
ஆத்மா அஹம் அர்த்த பூதனாய்க் கொண்டு தோற்றுகையாலும் -என்றபடி –

இவை ஒருகால் தோற்றி ஒரு கால் தோற்றாமையாலும் ஆத்மா எப்பொழுதும் தோற்றுகையாலும் –
இவை என்று தேக இந்த்ரியாதிகளை பராமர்சிக்கிறது
தேஹம் ஒரு கால் தோற்றி ஒரு கால் தோற்றாமை யாவது
ஜாகரத் தசையில் ச்தூலோஹம் க்ருசோஹம் இத்யாதிகளாலே
அஹம் புத்த்யா வ்யவஹார விஷயமாகக் கொண்டு
ஆதமதவேன தோற்றி இருந்ததே யாகிலும்
ஸூ ஷுப்தி தசையில் அப்படி தோற்றாது இருக்கை –
ஆத்மா எப்போது தோற்றுகையாவது
உறங்குவதற்கு முன்பு இவை எல்லாம் அறிந்து இருந்த நான்
உறங்குகிற போது என் உடம்பு உட்பட அறிந்திலேன் என்று
பிரத்யபிஜ்ஞ்ஞை பண்ணுகையாலே
உபய அவஸ்தையிலும் தேஹாந்த்யன்யனாய் இருப்பான் ஒரு ஆத்மா யுண்டு என்று தோற்றுகை –
அதவா
ஜனன மரண பாக்த்வத்தாலே தேஹம் ஒரு கால் தோற்றி ஒரு கால் தோற்றாமையாலும்
நான் ஜன்மாந்தரத்தில் பண்ணின வதினுடைய பலம் இது -என்கிற லோக வ்யவஹாரத்தாலே
ஆத்மா ஜனன மரணாதி ரஹிதனாய்க் கொண்டு எப்போதும் தோற்றுகையாலே என்னவுமாம் –

அப்படியே சஷூ ராதி ரூபேண தோற்றி இருக்கிற இந்த்ரியங்கள் அந்த பதிராதி -குருடன் செவிடு – அவஸ்தைகளில்
தோற்றாமையாலும் –
சங்கல்பாதி ஹேது தாவென தோற்றி இருக்கிற மனஸ்
ஒரு கால விசேஷங்களிலே மூடமாய்க் கொண்டு ஒன்றும் தோற்றாமையாலும்-
உச்வாச நிச்வாதிகளாலே தோற்றி இருக்கிற பிராணங்கள் ஒரோ மோஹ தசைகளிலே
நெற்றியைக் கொத்திப் பார்க்க வேண்டும்படி தோற்றாமையாலும் –
விஷய க்ரஹண வேளையில் பிரகாசிக்கிற ஞானம் விஷய கிரஹண் அபாவ தசையில் தோற்றாமையாலும்
இப்படி அன்றிக்கே
நான் கண்ணும் செவியும் முன்பு விளங்கி இருந்தேன்
இப்போதும் அந்தனும் பத்திரனும் ஆனேன்
முன்பு என்னுடைய மனஸ் விசதமாய் இருக்கும் இப்போது ஒன்றும் தெரிகிறது இல்லை
நான் அப்போது நிஷ்பிராணனாய்க் கிடந்தேன் -இப்போது சபிராணன் ஆனேன்
எனக்கு அப்போது ஞானம் யுண்டாய் இருந்தது -இப்போது நசித்தது -என்று
இவை தோற்றின போதொடு தோன்றாத போதொடு வாசி அற ஆத்மா எப்போதும் தோற்றுகையாலும்

இவை பலவாகையாலும் ஆத்மா ஒருவன் ஆகையாலும்
மீண்டும் இவை என்று தேஹாதிகளைப் பரமாசிக்கிறது –
தேஹத்துக்கு பன்மை அநேக அவயவ சங்காததம் ஆகையாலே
இந்திரங்களுக்கு பன்மை சஷூர் ச்ரோத்ராதி வ்யக்தி பேதத்தாலே
மனசுக்கு பன்மை மநோ புத்தி சித்த அஹங்கார ரூபமான பேதத்தாலே
பிராணனுக்குப் பன்மை பிராணாபாநாதி பேதத்தாலே
புத்திக்கு பன்மை கடஜ்ஞ்ஞான படஜ்ஞ்ஞாநாதி பேதத்தாலே
இப்படி
தேகாதிகள் ஓர் ஒன்றே பலவாகையாலும் –
இங்கன் அன்றிக்கே –
அஹம் புத்தி வ்யாவஹாராஹனான ஆத்மா ஒருவன் ஆகையாலும்
ஆத்மா இவற்றில் விலஷணன் என்று கொள்ள வேணும்
அதாவது
இப்படி தேஹாதி பிரகாரத்தையும் ஆத்மாவினுடைய பிரகாரத்தையும் நிரூபித்தால்
ஆத்மா தேகாதிகள் ஆனவற்றில் வேறு பட்டு இருப்பான் ஒருவன் என்று
அவஸ்யம் அங்கீ கரிக்க வேணும் -என்கை-

————————————————————————————————

சூர்ணிகை -7

அவதாரிகை –

இப்படி உக்தியாலே சாதிதமான அர்த்தத்தை
சாஸ்திர பலத்தாலே த்ருடீகரிக்கிறார்

இந்த உக்திகளுக்கு
கண் அழிவு யுண்டே யாகிலும்
சாஸ்திர பலத்தாலே
ஆத்மா -தேஹாதி விலஷணனாகக்
கடவன்

கண் அழிவு யுண்டே யாகிலும் -என்கையாலே
சர்வதா இதுக்கு கண் அழிவு சொல்ல ஒருவருக்கும் போகாது
அதுதான் யுண்டாய்தாகிலும்
இவ்வாத்மா -சுருதி ச்ம்ருத்யாதி சகல சாஸ்திர சித்தம் ஆகையாலே
சாஸ்திர பலம் தானே இவ்வாதத்தை சாதிக்கும் என்று கருத்து –

பஞ்ச விமசோயம புருஷ –
பஞ்ச விம்ச ஆத்மா பவதி –
பூதாதி கவர்க்கேண சவர்க்கேண இந்திரியாணி ச
டவாககேண தவாககேண ஞான கநாததயச ததா
மநா பகாரேணை வோகதம பகாரேண தவஹங்கருதி
பகாரேண பகாரேண மகான பரக்ருதி ருசயதே
ஆத்மா து ச மகாரேண பஞ்ச விம்சதி பரகீர்த்திதா
ய பர பறக்ருதோ பரோக்த புருஷ பஞ்ச விம்சக
ச ஏவ சர்வ பூதாத்மா நர இதயபி தீயதே
ஆத்மா சுத தோஷ ரச சாந்தோ நிரககுண பரக்ருதோ பரா/
பரவிருததயபச யௌ ந சத ஏக சயாகி லஜத துஷூ பிண்ட
ப்ருதக் யத பும்சத சிர பாணாயாதி லஷண
தத அஹமி குதரைதாம சமாஜ்ஞாம ராஜத கரோமயஹம—
கிமதவ மேதசசிர கிம நு உர சதவ ததோ தரம கிமு பாதாதி கம தவமவை
தவைதத் கிம மஹீ பதே சமசதா வயவேபயச தவம ப்ருதக் பூப வ்யவஸ்தித
கோஹமிதயவ நிபுணோபூதவா சிந்தய பார்த்திவ–ஜடபரதர் ரகுகுணன் சம்வாதம்

பஞ்சபூதா தமேக தேக தேஹீ மோஹதமோ வருத
அஹம் ம்மை ததி தயுசசை குருதே குமதிர் மதிம
ஆகாசவாயவக் நிஜல புருதிவீபாய ப்ருதக் ஸ்திதே
அநாய மனயா தம விஞ்ஞானம க் கரோதி களேபரே-என்று
இப்படி சுருதி ச்ம்ருதியாதி சகல சாஸ்திர பிரதிபன்னமான
ஆத்மாவினுடைய தேஹாதி விலஷணத்வம் –
துர பன்னவம் என்று நினைத்து இறே
சாஸ்திர பலத்தாலே ஆத்மா தேஹாதி
விலஷணனாக கடவன் என்று ஸூ நிச்சயமாக அருளிச் செய்தது –

———————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: