உபதேச ரத்னமாலை –பாசுரம் -66/67/68/69/70- ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம் –

ஆர்க்கும் அந் நேர் நிற்கை அரிதாம் -என்றீர்
இதுக்கு ஒருத்தர் தாம் இல்லையோ என்று தம் திரு உள்ளத்துக்கு கருத்தாக
அதில்
இவ் வனுஷ்டானத்துக்கு ஒருத்தர் யுண்டு என்று அவரை தர்சிப்பித்து அருளும் முகத்தால்
இவ் வனுஷ்டானத்தை ஆதரித்துப் போரு என்று தம் திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார் –

கீழே
ஸ்வரூப ரஷணத்தையும்-தேக ரஷணத்தையும் பிரஸ்தாபித்து அதில் ஆத்ம ரஷணத்துக்கு உறுப்பாக
ஆசார்யத்வத்தை இட்டு வைத்து
தமக்கு ஆதரணீயமான தேக ரஷணத்துக்கு உறுப்பான சிஷ்ய ரஷணத்தில் அருமையை அருளிச் செய்கிறார் –

பின்பழகராம் பெருமாள் சீயர் பெரும் திவத்தில்
அன்பு அதுவும் அற்று மிக்க வாசையினால்-நம்பிள்ளைக்கு
ஆன அடிமைகள் செய் அந்நிலையை நன்னெஞ்சே
ஊனமற எப்பொழுதும் ஓர்—66-

பின்பழகராம் பெருமாள் சீயர் –
அவர் ஆகிறார்-ஸ்ரீ லோகாச்சார்யரான ஸ்ரீ நம் பிள்ளைக்கு அத்யந்த அபிமத விஷயமாய்
அவர் சந்நிதியிலே சகல அர்த்தங்களையும் கேட்டு
அந்த ஸ்ருதமான அர்த்தத்தின் படியே-எல்லாம் வகுத்த இடமே -என்று தத் ஏக நிஷ்டராய் அவரை ஷண காலமும் பிரியாதே
தத் கைங்கர்ய நித்ரராய் போருகிற ஸ்ரீ பின்பழகராம் பெருமாள் சீயர் — தாத்ருசமான அதிகார பூர்த்தியை யுடையவர் –

பெரும் திவத்தில் அன்பு அதுவும் அற்று –
பெரிய வான் -என்றும்
எம்மா வீடு -என்றும் சொல்லுகிறபடியே நிரதிசய ஸூக ரூபமாய் இருந்துள்ள த்ரிபாத் விபூதியாகிற
பிராப்ய தேசத்தை பிராபிக்க வேணும் என்கிற ப்ராவண்யமும் அற்று –
அதாவது –
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணுமே -என்றும்
வானுலகம் தெளிந்தே என்று எய்துவது -என்றும் சொல்லுகிறபடியே எல்லாராலும் விரும்பப் படுவதான தேசத்திலும் விருப்பம் அற்று
குரு வேர் பரம்பின திரு முக மண்டலத்தின் சேவையையும்
சுற்றிச் சுழற்றிப் பரிமாறுகிற கைங்கர்யத்தையும் விட்டு
அடியேனுக்குப் பரம பதத்துக்குப் போக இச்சை இருந்தது இல்லை இறே-என்று அருளிச் செய்து போருவர் -என்கை-

இப்படி அதில் ஆதரமும் மட்டமாம் படி அதிலும் இஷ்டமாய் இருப்பதான விஷயத்தைச் சொல்லுகிறது –
மிக்க வாசையினால்-நம்பிள்ளைக்கு ஆன அடிமைகள் செய் –
அதாவது
தேசாரும் சிச்சனவன் சீர் வடிவை ஆசை யுடன் நோக்குவன்-என்கிறபடியே
அந்த தேச விசேஷத்தில் யுண்டான ஆதரத்தை எல்லாம் தமக்கு தேசிகரான ஸ்ரீ நம்பிள்ளை விஷயத்திலே
கைங்கர்யத்திலே யாய்த்து – இவர் ஒருமடைப் படுத்திக் கொண்டு போருவ்து -என்கை –
ஆகையால் இவருக்கு ஒரு தேச விசேஷமும் ருசியாது இறே –

நம்பிள்ளைக்கு ஆன வடிமைகள் செய் அந்நிலையை –
தம்முடைய ஆத்ம ரஷணத்தில் அநவரதம் அவஹிதராய் பரமபதம் தம்முடைய சிறுமுறிப்படி செலுத்தும்படி இருப்பராய்
தமக்கு வகுத்த விஷயமாய் இருக்கிற ஸ்ரீ நம்பிள்ளைக்கு
இச்சா பிரக்ருத்யது குணைர் உபசாரைஸ் சதோ சீதை -என்கிறபடியே
தத்தத் அவஸ்த உசிதமாக சுழற்றிப் பரிமாறுகை முதலான சகல வித கைங்கர்யங்களையும் அவர் உகக்கும்படி
செய்து கொண்டு போந்த லோக விலஷணமான நிஷ்டையை

நன்னெஞ்சே –
நல் நெஞ்சே நம் பெருமான்-என்றும்
நெஞ்சமே நல்லை நல்லை -என்றும் சொல்லுகிறபடி அந்த சரம பர்வ நிஷ்டையை
பிரார்த்தித்துக் கொண்டு போருகிற விலஷணமான நெஞ்சே –
விலஷணர் யுடைய ஞான அனுஷ்டானங்களில் வாஞ்சை யுடைய நெஞ்சே –

ஊனமற எப்பொழுதும் ஓர் –
அப்படியே சரம பர்வமான ஆச்சார்ய கைங்கர்ய நிஷ்டையை ப்ராபித்துக் கொண்டு
சங்கோசம் அற சர்வ காலத்திலும் அனுசந்தித்திப் போரு-
அசக்ருதாவ்ருத்தி அபேஷா கார்யம் இறே –
இவர் தாம்
அந்நிலையை -என்றும்
தன்னிலையை -என்றும்–பலகாலும் அபேஷித்து அருளுவார் ஆய்த்து –
அதாவது
வடுக நம்பி தன்னிலை -இறே –

இப்படி இருக்கிற இவருடைய ஆச்சார்ய அபிமான நிஷ்டையை
தேவு மற்று அறியேன் -என்று இருக்கும் ஸ்ரீ மான்கள் ஆன அதிகாரிகள்
ஸ்ரீ ஆழ்வார் திரு மகளார் ஸ்ரீ ஆண்டாள் -என்று தொடங்கி
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை திருவடிகளிலே நம்முடைய ஸ்ரீ ஜீயர் என்னும் அளவாக
இத்தையும் அப்படியே அந்திம உபாய நிஷ்ட அக்ரேசரான அஸ்மத் பரமாச்சார்யாரும் அருளிச் செய்தார் இறே –

சேஷித்வ
சரண்யத்வ
ப்ராப்யத்வங்கள்
மூன்றும் ஸ்ரீ பிள்ளை விஷயத்தில் அனுசந்தித்து தத் ஏக நிஷ்டராய் எழுந்து அருளி இருக்கிற ஸ்ரீ ஜீயர்
என்று ஸ்ரீ எதிராஜ விம்சதி வியாக்யான பிரவேசத்திலே ஸ்ரீ அப்பிள்ளையும் அருளிச் செய்தார் இறே-

———————————————————-

கீழே
ஞானம் அனுட்டானம் இவை நன்றாகவே யுடையனான குருவை அடைந்தக்கால் -என்றும்
ஆனவடிமைகள் செய்யும் நிலையை -என்றும்
ஆச்சார்யனையே உபாய உபேயமாக அருளிச் செய்யா நின்றீர் –
அல்லாதார் அடைய பகவானையே-பிராப்யனாயும் பிராபகனாயும் ஸ்வீகரியா நின்றார்கள்
இவை இரண்டிலும் வழி எது என்று தம் திரு உள்ளத்துக்குக் கருத்தாக
வாக்யத் த்வய உக்த உபாய உபேயங்கள் தான் சரம பர்வ பர்யந்தம் அல்லது இராமையாலே
அதில் தாத்பர்யம் அறியாதார் வார்த்தை அன்றோ அது –
அத்ர பரத்ராசாபி-ப்படியே அங்கோடு இங்கோடு வாசி அற ஸ்ரீ ஆச்சார்யன் திருவடிகளிலே உபகார ஸ்ம்ருதி
யாவதாத்மா பாவி யாகையாலே-அங்கே போனாலும் ஸ்ரீ ஆச்சார்யன் யுடைய உகப்பே பேறாம் படி அன்றோ
அத்தலைக்கு அடிமை செய்து போருவ்து –
ஆகையாலே ஏதத் விருத்தமான வார்த்தையைக் கேட்டு நீ அஜ்ஞதை அடையாதே
அஞ்ஞான நிவர்த்தாக மான பூர்வர்கள் உடைய விலஷணமான அனுஷ்டானத்தை அநுவிதானம் பண்ணப் பார் – என்கிறார் –

ஆச்சார்யர்கள் அனைவரும் முன் ஆசரித்த
ஆசாரம் தன்னை அறியாதார் -பேசுகின்ற
வார்த்தைகளைக் கேட்டு மருளாதே பூருவர்கள்
சீர்த்தி நிலை தன்னை நெஞ்சே சேர் —67-

ஆச்சார்யர்கள் அனைவரும் -முன் ஆசரித்த ஆசாரம் தன்னை –
அவர்கள் தான் ஒருவர் இருவர் அன்றிக்கே –
ஸ்ரீ மதுர கவிகள் ஸ்ரீ நாத முனிகள் தொடக்கமான ஸ்ரீ சைலேசர் அளவாக யுண்டான
நம்முடைய ஸ்ரீ ஆச்சார்யர்கள் அனைவரும் பிற்பாடரான நமக்கும் அனுஷ்டேயமாம் படி முற்காலத்திலே
பிடித்தார் பிடித்தாரைப் பற்றி -என்னும்படி
பரம்பரையாகத் தம் தாம் ஸ்ரீ ஆச்சார்யர் திருவடிகளில் பண்ணும் கைங்கர்யமே
தங்களுக்கு உபேயமாகவும்
அவன் திருவடிகளே உபாயமாகவும்
எல்லாரும் ஏக கண்டராக அருளிச் செய்து அப்படியே
ஆசார தீத் யாசார -என்று ஆசரித்துக் கொண்டுபோருகிற அந்தப் பரிசுத்தமான அனுஷ்டானம் தன்னை –

அறியாதார் –
அவர்கள் இடத்திலே உபசன்னராய்–அந்தே வாசிகளாய் இருந்து
அப்யசித்து
கண்டு
கேட்டு–அறியாதார் –பேசுகின்ற வார்த்தைகளைக் –
கூறும் சமயங்களை -என்றாப் போலே
கேவல உக்தி சாரமேயாய்-நிரரர்த்தகமாய்-ஆபாத ப்ரதீதமாய்
தங்கள் துர்ஹிருதயதுக்கு தோற்றிற்று ஒன்றைச் சொல்லிலும் – வார்த்தைகளைக் கேட்டு மருளாதே –
அப்படி அடி அற்று இருப்பதான பிரதிபன்ன பாஷணங்களைக் கேட்டு பிரமியாதே —
அவர்கள் தான் ஆபத்தை போக்கிக் கொள்ளுகிறோம் என்று பிரமித்தும்
உத்க்ருஷ்டராக பிரமித்தும் போருவர்கள் – ஆகையால்
அவர்கள் வார்த்தையும் பிரமத்துக்கு உடலாய் இருக்கும் இறே –

கேட்டு அறியாதார் பேசுகின்ற வார்த்தைகள்
ஆகையாலே
அறிவு கேடான மருளை விளைவிப்பதாய் இருக்கும்
பூர்வாச்சார்யர்கள் போதம நுட்டானங்கள்
கூறுவார் வார்த்தைகளைக் கொண்டு நீர் தேறி -என்கிறபடியே
அவர்கள் தான் தெருள் கொள்ளச் சொல்லுகிறார்கள் அன்றே –
ஆகையால் அறியாதார் வார்த்தைகளைக் கேட்டு புத்தி சலனம் பிறந்து அலமாவாதே –

பூருவர்கள் சீர்த்தி நிலை தன்னை நெஞ்சே சேர் –
அதாவது
மதுரகவி சரிதாநுகாரி மஹித சாரித்ரராய் இருக்கிற பூர்வர்கள் யுடைய நிஷ்டையை
மனசே-ஸூபிரதிஷ்டமாக அனுசந்திக்கப் பார் -என்கை-

அதுக்கு சீர்மை -யாவது
சீர்த்த மதுரகவி செய் கலையில் பிரதி பாதிக்கப் படுமதான சீர்மை இறே
நிலை யாவது -நிஷ்டை –
அது தான் திரு மந்த்ரத்திலே-பதத் த்ரயத்தாலும் பிரதிபாதிக்கப் படுகிற
சேஷித்வ
சரண்யத்வ
ப்ராப்யத்வங்கள்
ஆகிற ஆகாரத் த்ரயத்தையும்-பிரதம பர்வத்தளவன்றிகிகே சரம பரவத் பர்யந்தமாக அனுசந்தித்தப் படியே
அந்த பத த்ரயார்த்த நிஷ்டையை யுடையராய் இருக்கும் இருப்பாய்த்து –

இப்படி விலஷணமாய் இருப்பதொரு நிலையை அபேஷித்து இருக்கிற நமக்கு பரிகரமான நெஞ்சே
அந்நிலையை உன்னிடத்திலே சேரும்படி பண்ணப் பார்

அன்றிக்கே
அடை நெஞ்சமே -என்னுமா போலே அத்தைச் சென்று சேர் என்கிறார் ஆகவுமாம்-

சீரியதான அர்த்தத்தை பர்வத குஹரங்களிலே சேமித்து வைக்குமா போலே
அறியாதார் வார்த்தைகளால் அவிசால்யமாம் படி-மலை கலங்கிலும் மனம் கலங்காது -என்னும் படியான
தம் திரு உள்ளத்திலே-அந்தச் சீர்த்த நிலையைச் சேரப் பார்க்கிறாரே இவர் தாம்

இத்தால்
ஸ்ரேஷ்ட சமாசாரமே கர்த்தவ்யம் என்றது ஆய்த்து –

———————————————————

கீழில் பாட்டில் ‘
சிஷ்டாச்சாரமே பிரமாணம் என்று அங்கீ கரித்து இப் பாட்டிலே இப்படி பிரமாணிக அநு ரூபமான அனுஷ்டானங்களை
அருளிச் செய்கிறார் –

நாத்திகரும் நற்கலையின் நன்னெறி சேர் ஆத்திகரும்
ஆத்திக நாத்திகரு மாமிவரை -ஓர்த்து நெஞ்சே
முன்னவரும் பின்னவரும் மூர்க்கர் என விட்டு நடுச்
சொன்னவரை நாளும் தொடர்–68

நாத்திகரும் நற்கலையின் நன்னெறி சேர் ஆத்திகரும்-
ஸ்வர்க்காதி ரூப பல தத் சாதனங்களை பிரதிபாதிக்கிற சாஸ்திரங்களிலும்
ஸ்வ அஹங்கார கர்ப்பமான பகவத் உபாசனத்தையும் தத் பலமான பகவத் அனுபவ கைங்கர்யங்களையும்
பிரதிபாதிக்கிற சாஸ்திரங்களிலும் பிரதி பத்தி விளையவும் கூடும்
ததேக போகமான கைங்கர்ய தத் சாதனங்களை பிரதிபாதிக்குமதான -நற்கலை- யுண்டு பிரபத்தி சாஸ்திரம்
அதில் நன்னெறி யுண்டு -பிராப்ய பிராபக அனுஷ்டானங்கள்
அது தங்களுக்கு கை வந்து இருக்கும் படியான ஆஸ்திக்யம் பிறக்கை அரிதாய் இறே இருப்பது

அன்றிக்கே
நற்கலை என்று
சீர்த்த மதுரகவி செய்கலை யான கண்ணி நுண் சிறுத் தாம்பாய்
அதில் நன்னெறி -என்று
தேவு மற்று அறியேன் -என்றும்
மேவினேன் அவன் பொன்னடி -என்றும்
ஆள்புக்க காதல் அடிமைப் பயன் அன்றே -என்றும் சொல்லுகிறபடியே
சேஷத்வாதிகளைச் சொல்லுகிற ஸ்ரீ மதுரகவிகளின் யுடைய சன்மார்க்கமான சரம பர்வ நிஷ்டை யாகவுமாம்-
இந்நிஷ்டை யுடைய பரம ஆஸ்திகர்கள் தாம் ஓர் ஒருவர் என்னும் படி அரிதாய் இறே இருப்பது –

ஆத்திக நாத்திகரு மாமிவரை -ஓர்த்து –
கீழ்ச் சொன்ன நாஸ்திகாதி த்ரயருடையவும் ஸ்வரூப ஸ்வ பாவங்களை நன்றாக ஆராய்ந்து –

நெஞ்சே-
இவர்களை விவேகித்து பற்றுகைக்கும் விடுகைக்கும் பரிகரமான நெஞ்சே
அஞ்ஞரையும்
விசேஞ்ஞரையும்
ஞான லவ துர்விதக்தரையும்
நன்றாக விவேகித்து அவர்கள் ஸ்வரூப ஸ்வ பாவங்களை அறிந்த பின்பு-

முன்னவரும் பின்னவரும் மூர்க்கர் என விட்டு
முன் சொன்ன அபிரமாணிகரான நாஸ்திகரையும்
பின் சொன்ன பஷ பாதிகளான ஆஸ்திக நாஸ்திகரையும்-சாஸ்திர மார்க்கத்தில் அடங்காத சஹாசிகர் என்று கை விட்டு –
அதாவது
யத் ப்ரத்யஷம் ததே வாஸ்தி நாச்த்யன்ய திதி நிச்சிதா
அர்த்த காம பரா பாப நாஸ்திகா தேக கிங்கரா -என்று தொடங்கி
விஞ்ஞான லஷணை ஸ்தான் துஸ் சமயக் வ்யசி தஸ் த்யஜேத் -என்கிறபடியே
இப்படி மூர்க்கரான இவர்கள் இருவரையும் விட்டு விடுகை கண்டீர் விதி -என்கிறபடியே சவாசனமாக பரித்யஜித்து -என்கை-

இனி பற்றப் படுமவர்களைச் சொல்லுகிறது –
நடுச் சொன்னவரை நாளும் தொடர் -என்று –
ப்ராமாணிகர் ஆகையாலே தத் உபய வ்யாவ்ருத்தராய் மத்யஸ்தராய் இருக்கிறவனே
ஆச்சார்ய பரதந்த்ரனாய் இருக்கிற அதிகாரிக்கு ஆப்தராய் அங்கீகார யோக்யராய்
அனுவர்த்த நீயராய் இருக்கும் அனுகூலர் படியையும்
இதுக்கு அசலாய் அனங்கீகார விஷயமாய் இருக்கும் அனுகூலர் படியையும்
அருளிச் செய்ய வேணும் என்று திரு உள்ளம் பற்றி
அது தன்னைத் திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார் –
நாத்திகரும் -என்று தொடங்கி –

நாத்திகர் ஆகிறார்
உள்ளோடு புறம்போடு வாசி அற நாஸ்திகராய் இருக்குமவர்கள் –
ஆத்திகர் ஆகிறார் உள்ளோடு புறம்போடு வாசி அற ஆஸ்திகராய் இருக்குமவர்கள்
ஆஸ்திக நாஸ்திகர் ஆகிறார்
புறம்பு ஆஸ்திகரைப் போலேயும் -உள்ளே நாஸ்திகராய் இருக்குமவர்கள் –
அது தன்னை அஞ்ஞனான விஷய பிரவணன் கேவல நாஸ்திகனைப் போலே

ஜ்ஞானவானான விஷய பிரவணன் ஆஸ்திக நாஸ்திகனைப் போலே -என்ற இடத்துக்கு
நாஸ்திகன் ஆகிறான் தர்ம அதர்ம பரலோக சேதன ஈஸ்வரர்களுக்கு பிரதிபாதகமான சாஸ்த்ரத்தை
பிரமாணம் என்று அறிகையாலே ஆஸ்திகன் -என்றும் சொல்லலாம் படி இருப்பானே
அந்த சாஸ்திர மரியாதையில் அடங்காதே தோற்றிற்று செய்து திரிகையாலே நாஸ்திக சமனாய் இருக்குமவன் –
என்று இப்படி ஸ்ரீ ஜீயர் தாமே வியாக்யானம் செய்து அருளினார் இறே-

நற்கலையின் நன்னெறி சேர் ஆத்திகர் -ஆவது
ஆஸ்திகோ தர்ம சீலச்ச -என்னும்படி
தர்ம அதர்மாதிசகல பிரதிபாதகமான சஸ் சாஸ்த்ரத்தை பிரமாணம் என்று அறிந்து
அந்த மர்யாதையிலே நின்று-அப்படியே அதில் உக்தமான சத் அனுஷ்டானங்களையும்
அனுஷ்டித்துக் கொண்டு போருகிற பிரமாணிகரான ஆஸ்திகர் -என்கை –

அன்றிக்கே
அத்யாத்ம சாஸ்தரங்களான ஸ்ரீ கீதாதிகளில் ஓதப் படுகிற
உபாய அத்யாவச்ய ரூபமான பிரபத்தி மார்க்கத்திலே வழி பட்டு இருக்கிற ஆஸ்திகர் என்று ஆகவுமாம்

ஆஸ்திகனாய் இவ்வர்த்தத்தில் ருசி விச்வாசங்களை யுடையனாய் உஜ்ஜீவித்தல்
நாஸ்திகனாய் நசித்தல் ஒழிய -என்று இறே அருளிச் செய்தது –
நெறி யறியாதார் -என்று தொடங்கி
இறையுரை தேறாதவரும் – என்றார் இறே
ஆகையால் ஸ்வ தந்த்ரனுக்கு ஆஸ்திகரை-அந்த ஆஸ்திகர் வாசி அறிந்து ஆதரித்துப் போரும் நெஞ்சே
அவர்களை நித்யமாக அனுவர்த்திக்கப் பார் –
அனுவ்ரஜாம் யஹம் நித்யம் -என்கிறபடியே அவர்கள் அடியை தொடர்ந்து திரியப் பார் –

நடுச் சொன்னவரை நாளும் தொடர் –
மத்யமபதோக்தரை-
அதாவது
பிரதம பதத்தில் கழி யுண்கிற தேகாத்ம அபிமானிகளான நாஸ்திகரையும்
சரம பதத்தில் கழி யுண்கிற விஷய சபலரான ஆஸ்திக நாஸ்திகர் போல் அன்றிக்கே
மத்யம பத உக்தமான தத் ஏக உபாயத்வத்தையும்
ததீய பார தந்த்ர்யத்தையும் யுடையராய்
அவர்களில் அத்யந்த விலஷணராய் இறே ஆஸ்திகர் படி இருப்பது என்கை –
ஆகையால்
ப்ரதிகூலர் ஆனவர்கள் யுடைய ஷண கால மாத்ரமான சஹவாசம் சத்தியத்தை நசிக்குமா போலே
இவர்கள் யுடைய ஷண கால மாத்ரமான சம்ஸ்லேஷமும் சத்தா தாரகமாய் இருக்கையாலும்
சத்தா சம்ருத்திக்கு ஹேதுவாகையாலும்-சர்வ காலமும் அவர்களை பின் சென்று பிழைக்கப் பார்
அவர்கள் நன்னெறியை யுடையார் ஆகையாலே நீயும் அன் நன்னெறியிலே நின்று
உஜ்ஜீவிக்கும் படி அவரை நாடொறும் உபசத்தி பண்ணு –

இத்தால்
அனுகூல சஹவாசமும் பிரதிகூல சஹவாச நிவ்ருத்தியும் சொல்லிற்று ஆய்த்து –

———————————————————

கீழில் பாட்டில் உக்தமான அனுகூல பிரதிகூல ரானவர்கள் சஹவாசத்தால் பலிக்குமத்தை சத்ருஷ்டாந்தமாக
இரண்டு பாட்டாலே அருளிச் செய்கிறார் –
அதில் இப்பாட்டில் அனுகூல சஹவாசத்தால் பலிக்குமத்தைச் சொல்லுகிறது –

நல்ல மணம் உள்ள ஒன்றை நண்ணி இருப்பதற்கு
நல்ல மணம் யுண்டாம் நலமது போல் -நல்ல
குணமுடையோர் தங்களுடன் கூடி இருப்பார்க்குக்
குணமதுவே யாம் சேர்த்தி கொண்டு——-69-

நல்ல மணம் உள்ள ஒன்றை நண்ணி இருப்பதற்கு நல்ல மணம் யுண்டாம் நலமது போல் –
நல்ல மணமாவது
அல்லாதவற்றின் யுடைய பொல்லாத மணத்தையும் போக்கும்படியான ஸூகந்தத்தை யுடைத்தாய் இருப்பதொன்று –
அதாவது
ஆமோ தவத் குஸூ மசம் வசல நேன யத்வ தாமோதவான் பவதி கேசபரோப்யகந்த -என்கிறபடியே
ஸ்லாக்கியமான பரிமளத்தை யுடைய புஷ்பத்தை சேர்ந்து இருப்பதொரு கேச பாரத்துக்கு தன்னுடைய
ஸ்வ பாவமான சிக்கு நாற்றம் போய்
மணங்கள் நாறும் வார் குழலார் -என்னும்படி பரிமள பிராசுர்யம் யுண்டாம் ந்யாயம் போலே –

நல்ல குணமுடையோர் தங்களுடன் கூடி இருப்பார்க்குக் குணமதுவே யாம் சேர்த்தி கொண்டு –
நறிய நன்மலர் -என்கிறபடியே சேஷத்வ ஞான பரிமளத்தை யுடையராய்
ஜ்ஞான பக்த்யாதி சத் குண யுக்தராய் இருக்குமவர்கள்
தங்களுடனே சஹவாசம் பண்ணி இருப்பாருக்கு அவர்கள் யுடைய சஹவாச ரூபமான சம்பந்தம் கொண்டு
அஞ்ஞான கந்தம் இன்றிக்கே-அந்த ஸ்லாக்கியமான குணமே சித்திக்கும் –
ஒரு செய் நிரம்ப நீர் நின்றால்-என்று தொடங்கி
உறாவுதல் தீரக் கடவதாய் இருக்கும் -என்று இறே அருளிச் செய்தது –

ஆக இத்தால்
இவனுக்கு யுண்டான சத் குணங்களும் சத்துக்கள் யுடைய சஹவாசத்தாலே சம்பவிக்கும் -என்றது ஆய்த்து –

ஸ்ரீ பாகவத சம்ச்லேஷம் -ஸ்ரீ பகவத் சம்ச்லேஷத்தையும் பிறப்பித்து அபாகவாத விச்லேஷத்தையும் பிறப்பித்து
இவனையும் கரை மரம் சேர்த்து விடும் -என்று இறே ஸ்ரீ ஆச்சான் பிள்ளை அருளிச் செய்திற்று –
சத் சங்காத பவதிஹி சாதுதாகிலா நாம் -என்னக் கடவது இறே –

—————————————————–

இதில்
பரித்யஜ்யரான பிரதிகூல சஹவாசத்தாலே பலிக்குமத்தை அருளிச் செய்கிறார் –

தீய கந்தம் உள்ளது ஒன்றைச் சேர்ந்து இருப்பது ஒன்றுக்குத்
தீய கந்தம் ஏறும் திறமது போல் -தீய
குணமுடையோர் தங்களுடன் கூடி இருப்பாருக்குக்
குணமதுவேயாம் செறிவு கொண்டு ——–70-

தீய கந்தம் உள்ளது ஒன்றைச் சேர்ந்து இருப்பது ஒன்றுக்குத் தீய கந்தம் ஏறும் திறமது போல் –
ஹேய கந்தாஸ்பதமாய் இருப்பதொரு லசு நாதி பதார்த்தத்துக்கு கிட்ட இருப்பதொரு ஸூகந்த பதார்த்தத்துக்கும்
தத் சம்சர்க்கத்தாலே அதில் யுண்டான ஸூகந்தம் போய் ஹேய கந்தமானது நாள் தோறும் அதிலே ஏறி வரும் பிரகாரம் போல் -என்கை –
அதுதான் ஸ்வ சமீப மாத்திர சம்பந்தத்தாலே அல்லாதவற்றின் யுடைய சத் கந்தத்தையும் சவாசனமாகப் போக்கி
தத் கந்தத்தைத் தந்து தன்படியாய் ஆக்குமதாய் இருப்பது ஓன்று இறே –

தீய குணமுடையோர் தங்களுடன் கூடி இருப்பாருக்குக் குணமதுவேயாம் செறிவு கொண்டு –
அப்படியே
ஹேய குண யுக்தராய் இருக்குமவர்களுடன் சம்சர்க்கித்தவர்களுக்கும் அந்த ஹேய குணம் யுண்டாம்
அவர்கள் யுடைய பிணக்கைக் கொண்டு
அபாகவாத சம்ச்லேஷத்தையும் பாகவத விச்லேஷத்தையும் பிறப்பித்தும் இதில்
பரித்யஜ்யரான
பிரதிகூல சஹவாசத்தாலே பலிக்குமத்தை அருளிச் செய்கிறார் –
ஸ்ரீ பகவத் விச்லேஷத்தையும் பிறப்பித்து இவனையும் முடித்து விடும் -என்று இறே
இதுக்கும் ஸ்ரீ ஆச்சான் பிள்ளை அருளிச் செய்தது –

சதாமசேவ நான்நித்ய மசதாம்ச நிஷேவணாத் ஷீயந்தே
சதா நச்யந்தி ஜ்ஞான வைராக்ய பக்த்ய -என்னக் கடவது இ றே –

ஆக இத்தால் –
அசத்துக்கள் ஆனவர்கள் சஹவாசத்தாலே சேஷத்வாதி குணங்கள் வேரோடு போய்
அசந்நேவ-என்னும் படியாய் இறே ஆவது என்றதாயிற்று –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: