மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -92-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

ஆஸ்ரித விரோதி நிரசன ஸ்வ பாவனான
எம்பெருமானை
நெஞ்சே
பூரணமாக நினை -என்கிறார் –
அவன் சிறைப் பட்டான் ஒருவன் என்று இராதே
நம் சிறையை வெட்டி விட
வல்லான் ஒருவன் என்று
புத்தி பண்ணு -என்கிறார் –

————————————————————————————-

மகன் ஒருவர்க்கு அல்லாத மா மேனி மாயன்
மகனாம் அவன் மகன் தன் காதல் -மகனைச்
சிறை செய்த வாணன் தோள் செற்றான் கழலே
நிறை செய்தேன் நெஞ்சே நினை——-92-

—————————————————————————————–

வியாக்யானம் –

மகன் ஒருவர்க்கு அல்லாத மா மேனி மாயன் –
தான் ஒருவர்க்கு புத்ரன் அல்லன்
என்னும் இடம் வடிவிலே
தோற்றும்படி யிருக்கிற
ஆச்சர்ய சக்தி யுக்தனானவன் –

மகன் ஒருவர்க்கு அல்லாத –
ஸ்வ தந்த்ரன் –
அவ்யய பிதா –
ஒரு நாளும் சாவாத தமப்பன் –

மா மேனி –
பூஜ்யமான திரு மேனியை
யுடையவன் –

மாயன் –
அத்ய ஆச்சர்யமான
ஞானாதி குணங்களை யுடையவன் –
மகனாம் –
என்ன ஆச்சர்யம் –
சர்வர்க்கும் பிதாவானவன்
தான் புத்ரனாய் அவதரிக்கும் –
பிதா புத்ரேண  பித்ருமான் யோநி யோ நௌ-என்னக் கடவது இ றே –
இது -இல்லாமையாலே
சர்வேஸ்வரனுக்கு அலாப்ய லாபம் இ றே –
தனக்கு இல்லாதது ஒன்றிலே இ றே ச்நேஹம் ஜநிப்பது –
ஸ்வ வ்யதிரிக்தர் அடங்கலும் பிதாவான தான்
தன்னாலே ஸ்ருஜ்யமான
பதார்த்தங்களின் உடைய ரஷண ஹேதுவாகத் தான்
புத்ரத்வத்தை ஏற்றுக் கொண்டு  பித்ருமானாம் –
இது தன்னிலும் தன்னை ஒழிந்தாருக்கு யாவை
யாவை சில விடங்களிலே புத்ரத்வம் உண்டாம் –
அவ்வோ இடங்கள் தோறும் புக்கு இவனும் புத்ரனாம் –
இனி இப்படி ஜன்மம் இன்றிக்கே இருக்கிற இவன் விரும்பி
ஜென்மத்தை ஏற்றுக் கொண்டால்
பின்னை
அந்த சம்பந்தின் எல்லை யளவும் செல்லக் கடவனாய் இருக்கும் இ றே –

அவன் மகன் தன் காதல் -மகனைச் சிறை செய்த-
அவன் மகன் தன் காதல் மகனை சிறை செய்தான் ஆய்த்து
புத்ரனில் காட்டில் பௌத்ரன் பக்கலிலே ச்நேஹம் உண்டு இ றே
ச்நிக்தனுமாய்-
பௌத்ரனுமான
அநிருத்த ஆழ்வானைச் சிறையிலே கொண்டுபுக்கு வைத்த
வாணன் உடைய –

வாணன் தோள் செற்றான் –
அவனுடைய பாஹூ வனச் சேதத்தைப் பண்ணினான்
ஆய்த்து –

செற்றான் கழலே –
சிறை வைக்கைக்கு பரிகரம் இல்லாதபடி
தோள்களைத் துணித்து
பொகட்டவனுடைய
திருவடிகளையே –

நிறை செய்தேன் நெஞ்சே நினை –
நிறை செய்து என் நெஞ்சே நினை –
என் நெஞ்சே
பூரணமாக
அனுசந்திக்கப் பார் –
அவன் பிரதி பந்தகங்களைப் போக்க
நீ அனுபவி –

——————————————————————————————-

பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: