மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -91-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

எம்பெருமானுடைய ஆஸ்ரித பாரதந்த்ர்யத்தை
அருளிச் செய்கிறார்
அவனுடைய அபரிச்சேத்யதைக்கு ஓர் அவதி
காண ஒண்ணாதா போலே கிடீர்
அவன் சரித்ரம் தானும் ஒருவரால்
ஓர் அவதி  காண ஒண்ணாத படி
என்கிறார் –

——————————————————————————

மண்ணுண்டும் பேய்ச்சி  முலையுண்டும் ஆற்றாதாய்
வெண்ணெய் விழுங்க வெகுண்டு ஆய்ச்சி -கண்ணிக்
கயிற்றினால் கட்டத் தான் கட்டுண்டு இருந்தான்
வயிற்றினோடுஆற்றா மகன் ———91-

————————————————————————————

வியாக்யானம் –

சாமான்யேன ஜகத்தையும்
பிரதிகூலருடைய பிராணங்களையும்
உண்டும் –
அனுகூலர் ஸ்பரசித்த த்ரவ்யத்தை யுண்டு அல்லது
பர்யாப்தம் ஆய்த்து இல்லை –

மண்ணுண்டும் பேய்ச்சி  முலையுண்டும் ஆற்றாதாய் –
பிரளயம் கொள்ளப் புக்க
பூமி யடங்கலும் வயிற்றிலே வைத்து –
அதுக்கு மேலே –
பூதநா ஸ்த்ன பானத்தாலே -அவளுடைய பிராணனை உண்டும் –
இவை இரண்டாலும் பர்யாப்தன் ஆகாதே
கீழ்ச் சொன்ன இரண்டாலும்
ஜகத்துக்கு அனுகூல பிரதி கூலங்கள் இல்லாமையாலும்
அத்ருப்தனாய் –

வெண்ணெய் விழுங்க-
குறை எல்லாம் தீரும்படிக்கு ஈடாக
வந்து –
வெண்ணெய் விழுங்கினான் ஆய்த்து –

வெகுண்டு ஆய்ச்சி –
ஆய்ச்சி வெகுண்டு
வெண்ணெய் களவு போய்த்து என்ற மாத்ரத்திலே
இவன் முகத்தில் பையாப்புக்கு
யசோதை பிராட்டியானவள் சீறினாள் ஆய்த்து –
ச்நேஹத்தோ பாதியும் போரும் கோபம் –
வெண்ணெய் களவு காண்கையில் உள்ள ச்நேஹம் போரும் இ றே -அவளுக்கு ரஷிக்கையிலும் –

வெண்ணெய் விழுங்க –
கீழ்-மண் உண்டது முதல்வன – இவற்றின் ஆற்றாமை பரிஹரித்த படி –
இங்கு தன ஆற்றாமை பரிஹரித்த படி –
ஜகத்துக்கு தன வயிறு போலே
தனக்கு வெண்ணெய் –

கண்ணிக் கயிற்றினால் கட்டத் தான் கட்டுண்டு இருந்தான் –
பல பிணைகளை யுடைத்தான
தாம்பாலே பந்திக்க
அதுக்கு பரிஹாரம் இன்றிக்கே
கட்டுண்டு இருந்தான் –

கட்டுண்டு –
சர்வ நியந்தா வானவன் –
சம்சார சம்பந்த ஸ்திதி மோஷ ஹேது வானவன்
ஒரு அபலை கையாலே கட்டுண்டு
போக மாட்டாதே இருந்தான் –
ஸ்வ சங்கல்பத்தாலே ஸ்வ வ்யதிரிக்தரை யடங்கலும் கட்டி விடக் கடவ
தான் கட்டுண்டு இருந்தான் –
தாய் எடுத்த சிறு கோலுக்கு உளைந்து-பெரிய திருமொழி -8-3-5-
நெய்யுண் வார்த்தையுள்  அன்னை கோல் கொள்ள
நீ யுன் தாமரைக் கண்கள் நீர் மல்கப்
பையவே நிலையும் -திருவாய் மொழி-5-3-5-
முழுதும் வெண்ணெய் அளைந்து தொட்டுண்ணும் முகிழ் இளம் சிறுத் தாமரைக் கையும் – பெருமாள் திருமொழி -7-8-

வயிற்றினோடுஆற்றா மகன் –
வயிற்றைக் கொண்டு புகும் இடம் அறியாத பிள்ளை –
பருவம் நிரம்பினால் இ றே பசி பொறுக்க வல்ல ஆற்றல் உண்டாவது –

இவ்விடத்தை இயலைக் கேட்டு
ஹர்ஷத்தாலே
பிள்ளை உறங்கா வில்லி  தாசர்
வயிற்றை  அறுத்து வண்ணானுக்கு
இட மாட்டானோ –
என்று பணித்தார் –
வயிரா வண்ணான் சாலா -இன்றும் சொல்லக் கேட்போமே –

————————————————————————————————

பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: