மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -88-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

இப்படி இருக்கிற
சர்வேஸ்வரனை விட்டு
இதர விஷயங்களில் உண்டான உள்மானம் புறமானத்தை
ஆராய்ந்து சம்சயியாதே
சர்வ சமாஸ்ரயநீயனான சர்வேஸ்வரன்
திருவடிகளை ஆஸ்ரயிங்கோள் –
உங்களுடைய சமஸ்த துக்கங்களும் போம்
என்கிறார் –

——————————————————————————

அது நன்று இது தீது என்று ஐயப்படாதே
மது நின்ற தண்  துழாய் மார்வன் -பொது நின்ற
பொன்னங்கழலே தொழுமின் முழுவினைகள்
முன்னம் கழலும் முடிந்து ——–88-

——————————————————————————-

வியாக்யானம் –

அது நன்று இது தீது என்று ஐயப்படாதே –
பகவத் ப்ராவண்யம் நன்று
விஷயப் ப்ராவண்யம் பொல்லாதது
என்று சம்சயப் படாதே –
பகவத் வ்யதிரிக்த விஷயங்கள் தீதொடு ஒக்க
நல்லத்தை சம்சயாஸ் பதமாகப் பண்ணும்
அவற்றின் உடைய நன்மை தீமை ஆராயப் புக்கால்
பின்னையும்
ஐயத்தோடு தலைக் கட்டும் இத்தனை –
அதாகிறது
தான் தீதாய் இருக்கச் செய்தே நன்று போலே தோற்றிலும் தோற்றும்
இப்படி நன்றாய்த் தோற்றுகிற தீமையோடு தலைக் கட்டி நிற்கிலும் நிற்கும் –

மது நின்ற தண்  துழாய் மார்வன் –
சம்சயம் இல்லாத விஷயம்
மது மாறாதே இருப்பதுமாய்
ஆதி ராஜ்ய ஸூ சகமான திருத் துழாய் மாலையை யுடைத்தான
மார்வை யுடையவன் –

பொது நின்ற பொன்னங்கழலே தொழுமின்-
என் தான் –
இவன் தொழுவான் என்னக் கடவர் அல்லாத திருவடிகள் –
தேவானாம் தானவானாம் ச -ஜிதந்தே -என்னக் கடவது இ றே-
சர்வ லோக சரண்யாய ராகவாய -யுத்தம் -17-15-என்றான் இ றே ஸ்ரீ விபீஷண ஆழ்வான்-
யாவன் ஒருவன் சம்பந்தம் கொண்டு நீங்கள் என்னை
இவன் ஆகாது என்கிறிகோள்   –
அப்படிப் பட்டவன் தனக்கு வரலாம் படி அன்றோ
அவர் ஸ்வரூபம் இருக்கிற படி -என்றான் இ றே
அவரும் அப்படியே
யதி வா ராவண ஸ்வயம் -யுத்தம் -18-19-என்றார் இ றே
சர்வாத்மாக்களுக்கும் சம்பந்தம் ஒத்து இருப்பதாய்
ஸ்ப்ருஹநீயமாய்
அழகிதான
திருவடிகளை தொழப் பாருங்கோள் –

முழுவினைகள் முன்னம் கழலும் முடிந்து –
தொழுகைக்கு விரோதியான
அநாதி கால சஞ்சிதமான பாபங்கள்
நீங்கள் தொழுவதாக் ஸ்மரிப்பதற்கு   முன்பே
நசிந்து ஓடிப் போம் –

முன்னம் கழலும் –
பிரணாமாத் பூர்வ காலீநாத்யவசாயத்திலே கழலும்

முடிந்து –
வ்யக்த்யந்தரத்துக்கு ஆகாதபடி நசிக்கும் –

அன்றிக்கே
அது நன்று
இது தீது
என்று ஐயப்படாதே என்று
அனுபூதமான விஷயம் நல்லது
இப்போது அனுபவிக்கிற விஷயம் பொல்லாதது என்று
இதர விஷயங்களில் உள்மானம் புறமானங்களைப் பார்த்து
சம்சயியாதே -என்னவுமாம் –

——————————————————————————————-

பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: