மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -86-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

ஸ்வரூப ரூப குணங்களைப் பரிச்சேதிக்கப் போகாது –
உபமானத்தில் சிறிது சொல்லலாம் இத்தனை
என்கிறது –
எம்பெருமான் உடைய அழகை அனுபவிக்க முடியாது என்னிலும்
விட ஒண்ணாத படி
ஸ்ப்ருஹநீயமாய் இருக்கும்
அது காண வேணும் என்று இருப்பாருக்கு
மேகங்களே அவன் வடிவைக் காட்டும் -என்கிறார் –
சம்சாரத்தில் இருப்புக்கு ஒரு பிரயோஜனம் உண்டு –
அதாகிறது
அவன் வடிவுக்கு போலியான
பதார்த்தம் கண்டு அனுபவிக்கலாம்
என்கிறார் –

——————————————————————————

எழில் கொண்ட மின்னுக் கொடி எடுத்து வேகத்
தொழில் கொண்டு தான் முழங்கித் தோன்றும் -எழில் கொண்ட
நீர் மேகமன்ன நெடுமால் நிறம் போலக்
கார்வானம் காட்டும் கலந்து ——-86-

———————————————————————————–

வியாக்யானம் –

எழில் கொண்ட மின்னுக் கொடி எடுத்து –
அழகை யுடைத்தான
மின்னித் த்வஜமாக எடுத்துக் கொண்டு –

வேகத் தொழில் கொண்டு தான் முழங்கித் தோன்றும் –
வேகமாகிற வியாபாரத்தை யுடைத்தாய்
தான் மிக்க கோஷத்தை யுடைத்தாய்
தோற்றுகிற –

எழில் கொண்ட நீர் மேகமன்ன நெடுமால் நிறம் போலக் –
ஆகண்டமாக நீரைப் பானம் பண்ணின
காளமேகம் போலே இருந்துள்ள
சர்வேஸ்வரன் யுடைய நிறம் போலே –
நீர் மேகம் அன்ன நிறம் என்று
சாஸ்த்ரங்களிலே கேட்க்கப் பட்ட பிரசித்தியி யுடைய
நிறத்தை -என்றுமாம் –

கார்வானம் காட்டும் கலந்து –
கார் காலத்திலேயே மேகமாது கலந்து காட்டும் –
மின்னி முழங்கி
வில்லிட்டு உலாவுகிற மேகத்தை யுடைய
ஆகாசம் காட்டும் -என்றுமாம் –
கலந்து காட்டும் –
சேர்ந்து காட்டும் –
கேவலம் மேகம் காட்டுகிறதும் அன்று
கேவலம் ஆகாசம் காட்டுகிறதும் அன்று
இப்படி
மின்னி
முழங்கி
வில்லிட்டுக் கொண்டு
தோற்றுவது-சஜாதீயமாய் இருப்பதொரு
மேகம் யுன்டானால்
அப்போது அத்தை யுடைத்தான ஆகாசம்
சர்வேஸ்வரன் உடைய திருமேனிக்குத்
தகுதியாய்க் கொண்டு
தோற்றுவது -என்கிறார் –

எழில் கொண்டு மின்னுக் கொடி எடுத்து -என்று பாடமான போது
அழகை யுடைத்தாயிருக்கிற -கார்வானம் என்று
மேகத்துக்கு விசேஷணம் ஆகக் கடவது –

——————————————————————————————–

பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: