மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -82-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

இது தன்னை நாம் இன்னாதாகிறது என் –
அவன் தான் சிலரால் அறிய ஒண்ணாத படியாய் இருப்பான் ஒருவனுமாய்
நிரதிசய போக்யனுமான பின்பு
இனியவனை நாம் கிட்டிக் கண்டோமாய்த்
தலை கட்ட விரகு உண்டோ
என்கிறார் –

————————————————————————————

உணரில் உணர்வரியன் உள்ளம் புகுந்து
புணரிலும் காண்பரியன் உண்மை -இணரணையக்
கொங்கணைந்து வண்டறையும் தண்  துழாய்க் கோமானை
எங்கணைந்து காண்டும் இனி ——–82-

————————————————————————————–

வியாக்யானம் –

உணரில் உணர்வரியன் –
முதல் தன்னிலே இதில் இழியாதாது நன்று –
அதாகிறது
அறிவதாக இழிந்து
அறியாது ஒழிவதில் காட்டில் முதல் தன்னிலே
அறிவதாக இழியாதது நன்று இ றே –
ஆரேனும் ஒருத்தருக்கும் ஸ்வ யத்னத்தாலே அறிவோம் என்னும் அன்று
அறிய அரியனாய் இருப்பான் ஒருவன் –
தன்னாலும் அறியப் போகாது –
இவனாலும் அறியப் போகாது
தனக்கும் தன் தன்மை அறிவரியான் -திருவாய்மொழி -8-4-6-

உள்ளம் புகுந்து புணரிலும் காண்பரியன் உண்மை –
அவ்வருமை தீர அவன் தான் ஹ்ருதயத்திலே சந்நிதி
பண்ணி கலக்கும் அன்று
ஒரு குறை இல்லையே என்னில் –
அப்போதும் அவனை உள்ளபடி யறிந்து பரிச்சேதிக்கப் போகாது –
அவனுடைய உண்மை யறியப் போகாது –

காண்பரியன் உண்மை –
என் எனபது –
வை லஷண்யத்தை பரிச்சேதிக்கப் போகாது
என்கிறது –

இணரணையக் கொங்கணைந்து வண்டறையும் தண்  துழாய்க் கோமானை –
ஏதேனும் அறிய ஒண்ணாத விஷயம் என்று
கை வாங்கப் போகாது -என்கிறது
இவன் தான் காணும் அன்று காண வரிதாய்
அவன் தானே காட்டும் அன்றும் காண வரிதானாலும்
இழந்து ஆறி இருக்க ஒண்ணாது
போக்யதையும் ஸ்வாமித்வமும் –

இணரணையக் கொங்கணைந்து வண்டறையும் தண்  துழாய்க் கோமானை –
பூங்கொத்துக்கள் ஆனவை தாழும்படிக்கு ஈடாகத்
தேனிலே வண்டுகள் வந்து கிட்டி
அத்தை புஜித்து மது பானத்தாலே வந்த ஹர்ஷத்தாலே
சப்தியா நின்றுள்ள குளிர்ந்த
திருத் துழாயை உடைய சர்வேஸ்வரனை –

எங்கணைந்து காண்டும் இனி –
இனி நான் எங்கே கிட்டிக் காணக் கடவேனோ
லௌகிகர் படியிலும் காண விரகற்று
அவன் தானே காட்டும் வைதிகர் படியாலும்
காண விரகற்ற பின்பு
இனி நான் காண்கை என்று ஒரு பொருள் உண்டோ
கிட்டாது ஒழிய மாட்டேன்
கிட்ட மாட்டேன் –

———————————————————————————————–

பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: