மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -81-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

கீழே
சம்சாரிகளுக்கு இல்லாதது தமக்கு உண்டானவாறே
நெஞ்சு
பகவத் விஷயத்திலே ப்ரவணமாய்த்து என்று கொண்டாடினார் –
விஷயத்தைப் பார்த்தவாறே
முதலடி இட்டிலராய் இருந்தார் –
அவன்  துர்ஜ்ஞேயன் ஆகிலும் அவனை அனுசந்தி என்று
திரு உள்ளத்தைக் குறித்து
அருளிச் செய்து
இவனை இம்மமனஸ் அனுசந்தியா இருக்கைக்கு
ஹேது என்னோ -என்கிறார்
இத்தால்
தம் நெஞ்சு முயலுகிற முயற்சி போராதது என்னும்படி
தமக்கு அவ் விஷயத்தில் உண்டான
ப்ராவண்யம் இருந்தபடி சொல்லுகிறார் –
அவன் பெருமை பார்த்த போது
அறிவொன்றும் இல்லையாத் தோன்றும்
புறம்பே பார்த்த போது குவாலாய் இருக்கும் –

————————————————————————————–

நெஞ்சால் நினைப்பரியனேலும் நிலைப் பெற்றேன்
நெஞ்சமே பேசாய் நினைக்கும் கால் -நெஞ்சத்துப்
பேராது நிற்கும் பெருமானை என் கொலோ
ஓராது நிற்பது உணர்வு ——81-

————————————————————————————–

வியாக்யானம் –

நெஞ்சால் நினைப்பரியனேலும் –
நெஞ்சமே
உன்னாலே நினைக்கப் போகாதாகிலும் –
ஓர் உழக்கைக் கொண்டு கடலை யளக்கப் போகாது இ றே –
அப்படியே
ஷூத்ரமான மனசைக் கொண்டு அபரிச்சேத்யனானவனை
பரிச்சேதிக்க ஒண்ணாது இ றே  –
அப்படியே அரியனாய் இருந்தானே யாகிலும் –

நிலைப் பெற்றேன் நெஞ்சமே பேசாய் –
ஐஸ்வர்யம் கண்டு பிற்காலியாதே-அனுபவிப்பாய் –
கிண்ணகம் என்று கால் வாங்காதே
ஊன்றி யடி இட்டுத் தரித்து    நின்று
அவனைப் பேசப் பாராய்-

இவர் இங்கனே சொல்லச் செய்தேயும் சற்று மெத்தென்று இருந்தது –
என் தான் –
நீ அவனை மேல் விழுந்து ஆஸ்ரயியாதே
கை வாங்கி இருக்கைக்கு அடி ஏதோ வென்று
ஸ்வ கதமாக வருளிச் செய்கிறார் மேல் –
நினைக்கும் கால் -நெஞ்சத்துப் பேராது நிற்கும் பெருமானை –
இவன் ஒருக்கால் நினைத்துக் கை வாங்கினால்
பின்னை
அவன் நெஞ்சத்து பேராது நிற்குமவன் யாய்த்து
அஹம் ஸ்மராமி -என்கிறபடியே எப்போதும்
தான் நினைத்து நம் ஹிருதயத்தை
விடாதே இருக்கிற சர்வேஸ்வரனை
ஒருக்கால் நினைக்கில் –
நாக்குண்டா நா வெழா  வென்ற நெஞ்சை விட்டுப் போக வறியாதவன்-
கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில் எண்ணிலும் வரும் -திருவாய்மொழி -1-10-2-என்னும்படியே
நாம் ஒருக்கால் நினைத்தால்
ருணம் ப்ரவ்ருத்தம் -என்று ஒருக்காலும் மறவான் –

என் கொலோ ஓராது நிற்பது உணர்வு –
நிரந்தரம் நினைத்தாலும்
நினையாதாரையோ நினைப்பது –

உணர்வு  ஓராது இருப்பது என் கொலோ –
அறிவு நடையாடா நிற்கச் செய்தே
இவனை அனுசந்தியாது இருக்கைக்கு ஹேது ஏதோ –
இவனை இட்டு வேறே சில துரராத தேவதைகளை ஆஸ்ரயிக்க இருக்கிறதோ
அவனை நினையாதே மண்ணை முக்கப் பார்க்கிறதோ
அவனை நினையாதே தாம் உண்டாம் படி எங்கனே –
ஒண் டாமரையாள்  கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -முதல் திருவந்தாதி -67-
அவனை விட்டுத் த்யாஜ்யமான சப்தாதி விஷயங்களில் போகவோ –

————————————————————————————–

பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: