மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -78-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

நெஞ்சே
விரோதி நிரசன ஸ்வபாவனானவன்
நமக்கு ரஷகனாம் –
ஆனபின்பு அவனையே புகலாக அனுசந்திக்கப் பார்
என்கிறார் –
அவன் சர்வ ரஷகன் ஆகிலும்
நம்முடைய ஜ்ஞான வ்ருத்த ஜன்மங்களில்
கொத்தை பார்க்க வேண்டாவோ -என்ன
வேண்டா -என்கிறார் –

——————————————————————————————

அரணாம் நமக்கு என்றும் ஆழி வலவன்
முரணாள் வலம் சுழிந்த மொய்ம்பன் -சரணாமேல்
ஏது கதி ஏது நிலை ஏது பிறப்பு என்னாதே
ஒது கதி மாயனையே ஓர்த்து———-78-

———————————————————————————————

வியாக்யானம் –

அரணாம் நமக்கு என்றும் ஆழி வலவன் –
திரு வாழியை வலவருகே தரித்து உள்ளவன் –
ரஷக அபேஷை உடையரான நாம் -ஆபன்னரானவன்று
சேவை காலத்திலும்
நம் ஆபத்தைப் போக்கும் ரஷகனாம் –
சர்வ சக்தியானவன் நமக்கு ரஷகனாம்
வலவருகே திரு வாழியைப் பிடிக்குமவன் போலே காணும் ரஷகன் ஆனவன் –
தன்னை புரச்கரித்து   இ றே-சுட்டிக் காட்டி – இ றே
மா ஸூச -என்றது
இவனுடைய அஹம் புத்தி சோக நிமித்தம்
அவனுடைய அஹம் புத்தி சோக நிவர்த்தகம் –
முரணாள் வலம் சுழிந்த மொய்ம்பன் –
விரோதியைப் போக்க வல்லவன் -என்னும் இடத்தை
உபபாதிக்கிறது –
முராசூரனுடைய ஆயுஸ்சால் வந்தபலத்தை
போக்கின மிடுக்கை யுடையவன் –

சரணாமேல்-
அவன் ரஷகன் ஆம் இடத்தில் –

ஆழி வலவன் –
எப்போதும் கை கழலா நேமியான் -பெரிய திருவந்தாதி -87-

ஏது கதி ஏது நிலை ஏது பிறப்பு என்னாதே -அரணாம் –
எது ஞானம்
எது வ்ருத்தம்
எது ஜன்மம்
என்று இவை ஒன்றும் பாராதே ரஷகனாம் –
நிலை வரம்பில பல பிறப்பாய் ஒளி வரும் முழு நலம் -திருவாய்மொழி -1-3-3-என்னக் கடவது இ றே –
அன்றிக்கே
அவன் விரோதி போக்குவானான பின்பு
இனி நீ உன்னுடைய
ஜன்ம வ்ருத்த ஜ்ஞான ஸ்வ பாவங்கள் ஒன்றும் பாராதே
அவனை அனுசந்திக்கப் பார் –
இவை ஒன்றும் பாராதே ஆஸ்ரயநீயனாம்
சமோஹம் வரவா பூதேஷு -கீதை -9-29-
யேபி ஸ்யு பாபயோ நய  –
எத்தனை நலந்தான் இலாத சண்டாள சண்டாளர்கள் ஆகிலும் -திருவாய்மொழி -3-7-9-

ஒது கதி மாயனையே ஓர்த்து –
சரண்யனாய்
ஆச்சர்யமான குண  சேஷ்டிதங்களை
யுடையனாய் யுள்ளவனை
யாராய்ந்து புகலாக ஒது –
கதியாக அவன் திருவடிகளை அனுசந்தித்துச் சொல்லு –

ஒது கதி மாதவனை ஒத்து –
என்ற பாடமாகில்
ஸ்ரீ யபதியையே உபாயமாக புத்தி பண்ணி
அவன் திரு நாமங்களை ஏத்து -என்று
பொருளாகக் கடவது –

——————————————————————————————–

பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: