மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -77-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

கீழே
சர்வேஸ்வரனை ஆஸ்ரயிக்கவே உங்கள் உடைய
பாபங்கள் எல்லாம் போம்
என்றார் –
இதில்
அளவில்லாதார்க்கே யன்று –
பேரளுவு உடையரானவர்களுக்கும்  விழுக்காடு அறியாதே
தங்களை முடியச் சூழ்த்துக் கொள்ளும் அன்று
அவர்களுக்கும் எல்லாம் ஹித காமனாய்க் கொண்டு
நோக்குவான் அவனே -என்கிறார் –
அவன் அல்லது நாம் ஹிதம் அறியோம் என்றார் கீழ் –
இதில்
நாமே யல்ல
ப்ரஹ்மாதிகளும் ஹிதம் அறியார்கள் –
அவர்களுக்கும் ஹிதம் பார்ப்பான் அவனே -என்கிறார் –

———————————————————————————–

ஆய்ந்த வரு மறையோன் நான்முகத்தோன் நன் குறங்கில்
வாய்ந்த குழவியாய் வாளரக்கன் -ஏய்ந்த
முடிப்போது மூன்று ஏழு என்று எண்ணினான் ஆர்ந்த
அடிப்போது நங்கட்கு அரண்  —–77-

—————————————————————————————-

வியாக்யானம் –

ஆய்ந்த வரு மறையோன் நான்முகத்தோன்-
சர்வேஸ்வரனாலே ஒதுவிக்கப் பட்டு
அழகிதாக ஆராய்ந்து
தரித்து
வேத வேதாந்த நிரூபணம் பண்ண வல்ல
சதுர்முகனுடைய –

நன் குறங்கில்-
நன்றான மடியிலே –
வாய்ந்த குழவியாய் –
நேர்பட்ட முக்த சிசூவானவனாய்
அழகிய பிள்ளையாய் –
ராவணன் தன வரம் பெறுகைக்காக
ப்ரஹ்மாவின் பக்கலிலே வந்து தண்டன் இட்டுக் கிடக்க
அவனும் தனக்கு
ஸ்வாபாவிகமான சேஷித்வம் இல்லாமையாலே
புதுக் கும்பீட்டைக் கண்டு இறுமாந்து
தங்கள் அநர்த்தம் அறியாதே
சொன்னது எல்லாம் கொடுக்கப் போக –
ப்ரஹ்மாவின் பக்கலிலே வந்து இவனாலே நோவு பட்டாலும்
நம்முடைய பாடே  இ றே இவர்கள் வந்து விழுவது என்று பார்த்து
அப்போது
சர்வேஸ்வரன் இவன் மடியிலே ஒரு பிள்ளையாய் வந்திருந்து
இவனுக்கு வரங்களை கனக்கக் கொடுப்புதியாகில்
நாடு குடி கிடவாது
உனக்கும் குடி இருப்பு அரிதாம்
ஆனபின்பு அவன் வத்யன் கிடாய் -என்னும் இடம் தோற்ற
அவனுடைய தலைகளைத் தன் திருவடிகளாலே கீறி
எண்ணிக் காட்டித் தான் அந்தர்த்தானம் பண்ணினான் –

வாளரக்கன் –
சாயுதனான ராஷசனுடைய –

ஏய்ந்த  முடிப்போது-
அறுக்கைக்குத் தகுதியான தலைகளிலே
மாலைகள் இட்டு வா வென்று –

மூன்று ஏழு என்று எண்ணினான் –
தன் மௌக்த்யம் தோற்ற எண்ணின படி யாய்த்து –

மூன்று ஏழு –
ஏழும் மூன்றும் என்னாதே  –

ஆர்ந்த அடிப்போது நங்கட்கு அரண்  –
அவனுடைய நிரதிசய போக்யமான திருவடிகள் ஆகிற
செவ்விப் பூ நமக்கு ரஷை-
அவனுடைய அபேஷிதம் செய்ய வற்றான திருவடிப்பூ
ஆகிஞ்சன்யராய்
அநந்ய பிரயோஜனரான
நமக்கும் அரண் –

ஆர்ந்த அடிப் பூ –
போக்யதையால் பரிபூரணமான
திருவடிகள் ஆகிற பூ –

———————————————————————————————–

பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: