மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -70-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை-

ஆகில் இப்படி ஆஸ்ரயிக்கும் போது
சிறிது யோக்யதை யுண்டாக்கிக் கொள்ள வேண்டாவோ -என்னில்
அது வேண்டா
திர்யக்குகளுக்கும் புக்கு ஆஸ்ரயிக்கலாம் படி
இருப்பான் ஒருவன் -என்கிறார் –
இனி
ஆஸ்ரயணம் தன்னிலும் ஒரு நியதி இல்லை –
செய்தது எல்லாம் நியதியாம் அத்தனை –
என்கிறது –
அனுகூலர் உடைய தேக யாத்ரை எல்லாம்
தன் சமாஸ்ரயணத்துக்கு உறுப்பாகக்
கொள்ளும் -என்கிறது –

—————————————————————————-

புகு மதத்தால் வாய் பூசிக் கீழ்த் தாழ்ந்து அருவி
உகு மதத்தால் கால் கழுவிக் கையால் -மிகு மதத்தேன்
விண்ட மலர் கொண்டு விறல் வேங்கடவனையே
கண்டு வணங்கும் களிறு —–70-

——————————————————————————

வியாக்யானம் –

புகு மதத்தால் –
மஸ்த கஸ்தலம் கண்ட ஸ்தலம் இவற்றில் நின்றும்
பாய்த்து வாயிலே
புகுகிற மத ஜலத்தாலே –

வாய் பூசிக் –
மதம் மிகைத்துக் கொண்டு
வாயிலே புகுவதொரு அவஸ்தை யுண்டாய் இருக்கும் இ றே –
அப்போதை ஆசனம் ஆக்கவுமாம் –

கீழ்த் தாழ்ந்து அருவி உகு மதத்தால் கால் கழுவிக் –
கீழே தாழ்ந்த அருவிகள் போலே வந்து விழுகிற
மத ஜலத்தைக் கொண்டு
கால் கழுவி

கையால் -மிகு மதத்தேன் விண்ட மலர் கொண்டு –
தன் செருக்காலே பொய்கைகளிலே புக்குப்
பூக்களை பறிக்கக்
கடவதாய் இருக்கும் இ றே –
அதாய்த்து சமாராதன உபகரணம்
மிக்க மதத்தை உண்டாக்கக் கடவதான தேனை உடைத்தான
அலர்ந்த பூக்களைக் கொண்டு –
மதம் என்று கந்தமாய்
மிக்க கந்தத்தையும் தேனையும் யுடைய செவ்விப் பூக்களைக் கொண்டு -என்னவுமாம் –
விறல் வேங்கடவனையே கண்டு வணங்கும் –
திருமலையில்
திரியக்குகளும்
தன்னை வணங்கும் ஞானத்தைக் கொடுக்க வல்ல
சக்தியை யுடையவன் என்கிறது
ஞான கார்யமான சமாஸ்ரயணத்தை
தேச வாசத்தாலே பண்ண விருக்கும்

வேங்கடவனையே –
ஸ்ரீ வைகுண்ட நாதனையோ
வேங்கடவனை அன்றோ –

கண்டு வணங்கும் களிறு –
ஓர் ஆனைசென்று ஆஸ்ரயித்தால் போலே யாய்த்து
திரு வேங்கடமுடையானை
ஆஸ்ரயிக்கலாம் படி –

களிறு –
ஆஸ்ரயிப்பாருக்கு ஜன்ம வ்ருத்த ஸ்வ பாவங்கள்
அப்ரயோஜகம் –

—————————————————————————————-

பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: