மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -64-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

இவன் தான் –
பிரயோஜனாந்தர பரராய்
தேவதாந்தரரான தேவர்களுக்கும் கூடத்
தன்னை அழித்துத்
கார்யம் செய்து கொடுப்பான் -என்று
அவன் ஸ்வ பாவத்தை அனுசந்தித்து
அவனுக்குப் பரிகிறார்-

——————————————————————————–

இசைந்த வரவும் வெற்பும் கடலும்
பசைந்தங்கு அமுது படுப்ப -அசைந்து
கடைந்த வருத்தமோ கச்சி வெக்காவில்
கிடந்தது இருந்து நின்றதுவும் அங்கு – —–64-

———————————————————————————–
வியாக்யானம் –

இசைந்த வரவும் வெற்பும் கடலும் –
கடலிலே ஒரு மலையை நட்டு
ஒரு பாம்பைச் சுற்றிக்
கடையா நின்றால்
சேராச் சேர்த்தி யாய்   இருக்குமோ என்னில்
தன்னிலே பொருந்தி இருக்கும் –
கயிறாகச் சுற்றிக் கடைகைக்குத் தகுதியான
வாசூகியும் மத்தாக நட்டுக்
கடைகைக்குத் தகுதியான மந்தரமும்
தாழியாகப் போரும்படியான கடலும் —

பசைந்தங்கு அமுது படுப்ப –
இம்மூன்றையும் கொண்டு
கடலிலே நீர் கோதாகக் கொண்டு
அம்ருதத்தைஉத்பதிக்கும் படி
அமுதம் படும்படிக்கு  ஈடாக
பசை கொடுத்துக்
கடைந்தான் ஆயத்து –

அசைந்து கடைந்த வருத்தமோ –
திருமேனி நோவும் படி
ஆயாசித்துக்
கடைந்த வருத்தமோ –
சஞ்சரித்து வ்யாபரிக்கை –

கச்சி வெக்காவில்கிடந்தது இருந்து நின்றதுவும் அங்கு –
திருக் கச்சியிலே
திரு வெக்காவிலே
கண் வளர்ந்து –
அவ்விடம் தன்னிலே
திருப்பாடகத்திலே -இருந்து –
திரு ஊரகத்திலே-நின்றதுவும் –
இப்படி –
நிற்பது
இருப்பது
சாய்வதான
இச் செயல்களை அனுசந்தித்து –
தனித் தனியே கடல் கடைந்து
அத்தால் திரு மேனியில் பிறந்த ஆயாசமோ
இது எல்லாவற்றுக்கும் என்று கொண்டு
அஞ்சுகிறார் –

—————————————————————————————————–

பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: