மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -62-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

ஆஸ்ரித ரஷணத்துக்கு ஏகாந்த ஸ்தலங்கள் என்று
உகந்து அருளின நிலங்களைச்
சால விரும்பி இருக்கும்
என்கிறார் –
கேவலம் சம்சாரத்தில் வந்து நின்ற மாதரமோ –
பரமபதத்திருப்பும் மனிச்சுக்கவாய்
அத்தாட்சியோடே கூடி இருப்பது
உகந்து அருளின தேசத்திலே அன்றோ
என்கிறார் –

————————————————————————————-

விண்ணகரம் வெக்கா விரிதிரை நீர் வேங்கடம்
மண்ணகரம் மா மாட வேளுக்கை மண்ணகத்த
தென் குடந்தை தேனார் திருவரங்கம் தென்  கோட்டி
தன் குடங்கை நீரேற்றான் தாழ்வு  ——62-

—————————————————————————————-

வியாக்யானம் –

விண்ணகரம் வெக்கா விரிதிரை நீர் வேங்கடம் –
திரு விண்ணகர்
திரு வெக்கா
ஜல சம்ருத்தியை யுதைத்தான திருமலை
குளிர்  அருவி வேங்கடம் -நாச்சியார் திருமொழி -8-3-என்னுமா போலே
மிக்க அருவிகளை உடைய திருமலை –
திருமலை என்றால்
ஒரு விசேஷண   ரஹிதமாக்ச் சொல்ல மாட்டார் –

மண்ணகரம் மா மாட வேளுக்கை –
சம்சாரத்திலேயாய் இருக்கச் செய்தே
பரம பதத்தோடு ஒக்க எண்ணலாம்
நகரமான –
பெரிய மாடங்களை உடைத்தான
திரு வேளுக்கை –

மா மாட –
ஸ்லாக்கியமான மாடங்கள் -என்றுமாம் –

மண்ணகத்த தென் குடந்தை –
பூமியிலே உண்டான திருக் குடந்தை –
திரு நாட்டிலே ஒரு கண்டம் –

தேனார் திருவரங்கம் –
நிரதிசய போக்யமான
சோலையை யுடைய
பெரிய கோயில் –

தென்  கோட்டி –
தெற்குத் திக்கிலே யுண்டான
திருக் கோட்டியூர் –

தன் குடங்கை நீரேற்றான் தாழ்வு  –
தன்னுடைய சிறாங்கித்த கையிலே நீரை ஏற்றவன்
திரு உள்ளம் தாழ்ந்து கிடக்கும் இடங்கள்
தன் உடைமையை மீட்டுக் கொள்ளுகைக்கு அர்த்தி யானவன்
தன்னது மீட்டுக் கொள்ளுகைக்கு அர்த்தியாய் இருக்கிறபடி –
மகா பலி பக்கலிலே தன்னுடைமை பெறுகைக்கு அர்த்தி யானால் போலே
உகந்து அருளின தேசங்களிலே
அர்த்தித்வம் தொடரும்படி நின்றான் –

தாழ்வு –
அபேஷித்த சமயத்திலே ஒருக்கால் உதவிப் போகை அன்றிக்கே
எப்போதும் உதவும்படி வந்து
நிற்கப் பெற்றோமே என்று
திரு உள்ளம் மண்டி இருக்கிற இடங்கள் –
ஆஸ்ரிதர்  அபேஷித்த போதாக வந்து அவதரிக்க
வேண்டாதபடி
தாழ்ந்து வர்த்திக்கிற தேசம் –

———————————————————————————————–

பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: