மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -60-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

உமக்கு வாழ்விலே அந்யமாகில்
பிரதி பந்தகம் போனால் அன்றோ வாழலாவது –
விரோதி செய்த படி என் என்ன
அது போக்குகை அவனுக்கு பாரமாய் விட்டது
என்கிறார் –

————————————————————————————

பெற்றம் பிணை மருதம் பேய் முலை மாச் சகடம்
முற்றக் காத்தூடு போய் உண்டுதைத்து -கற்றுக் குணிலை
விளங்கனிக்குக்  கொண்டு எறிந்தான் வெற்றிப்
பணிலம் வாய் வைத்துகந்தான் பண்டு —–60-

————————————————————————————-

வியாக்யானம் –

இந்த பாசுரம் நிரல் நிறை அணி பாசுரம் –

பெற்றம் –
பசுக்கள் –
பிணை மருதம் –
நிர்விவரமான மருத்துகள் –

பேய் முலை –
பேயினுடைய   முலை –

மாச் சகடம் –
பயாவஹமான சகடம்

முற்றக் காத்து –
இவற்றில் –
பசுக்களை ஓன்று ஒழியாமல் நோக்கி –

ஊடு போய் –
யமலார்ஜூனங்களின் நடிவே
அவை சாயும்படி வழி போய் –

உண்டு-
பூதனை முடியும் படி உண்டு –

உதைத்து –
சகடத்தை உதைத்து

அநந்தரம் –
கற்றுக் குணிலை-
கன்றாகிற எறி கருவியைக் கொண்டு –

விளங்கனிக்குக்  கொண்டு எறிந்தான் –
விளாவினுடைய கனிக்கு எறிந்தான்
தன்னைக் கொண்டு தன்னை மாய்த்தபடி –

வெற்றிப் பணிலம் வாய் வைத்துகந்தான் –
அவன் தான் ஆர் என்னில் –
வெற்றியைப் பண்ணக் கடவதான
ஸ்ரீ பாஞ்ச  ஜன்யத்தைத் திருப்பவளத்திலே வைத்தூதி
ஆசூர வர்க்கத்தை முடித்து –
ஆஸ்ரித விரோதி போகப் பெற்றோம் என்று உகந்தவன் –
ஆயுதம் எடேன் என்று ஓர் ஆயுதம் எடுத்தவன் –
அர்ஜுனன் அம்பால் தனித் தனியே கொல்லாமே
திரளக் கொல்லவும் பெற்று
ஆஸ்ரிதர்க்கு உஜ்ஜீவன மிடவும் பெற்றான் –

பண்டு-
பருவம் நிரம்புவதற்கு முன்னே
ஆசூர வர்க்கத்தை கை தொடானாய் முடித்தான்
பின்பு
ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தின் உடைய த்வநியாலே முடித்தான் –

————————————————————————————————-

பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: