மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -59-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

கீழ்
கரியான் கழலே தெருள் என்று
திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்தார் –
அப்படிப் பட்ட திருவடிகளைத்
தாம் கிட்டி அனுபவிக்கிறார் –

———————————————————————–

வாழும் வகை யறிந்தேன் மை போல் நெடு வரை வாய்த்
தாழும் அருவி போல் தார் கிடப்ப -சூழும்
திரு மா மணி வண்ணன் செங்கண் மால் எங்கள்
பெருமான் அடி சேரப் பெற்று ——59-

—————————————————————————

வியாக்யானம் –

வாழும் வகை யறிந்தேன் –
வாழும் பிரகாரம் அறிந்து கொண்டேன் –
சர்வேஸ்வரனைப் பற்றி ஆத்மாவுக்கு
வகுத்த சம்பத்து இது வென்று
வ்யுத்பத்தி பண்ணினேன் –
புத்தி நாசாத் ப்ரணச்யதி -கீதை -2-62/63-என்னும் படியே –
சப்தாதி விஷயங்களை
விநாச்யத்துக்கு உபாயம் அறிந்த இத்தனை இ றே முன்பு
பல நீ காட்டிப் படுப்பாயோ –திருவாய் மொழி -6-9-9-என்னும் படியே –
பகவத் விஷயத்திலே இவனுடைய
இச்சையும் அநிச்சையும் இ றே
உஜ்ஜீவனத்துக்கும் விநாசத்துக்கும் ஹேது-
யதி ஜீவிது மிச்சசி -சுந்தர -21-20-
மை போல் நெடு வரை வாய்த் தாழும் அருவி போல் தார் கிடப்ப –
விநாசத்தை பண்ணினாலும் விட ஒண்ணாது –

மை போல் நெடு வரை வாய்த் தாழும் அருவி போல் தார் கிடப்ப –
அஞ்சன கிரியிலே பாய நின்ற அருவி  போலே
திரு மார்விலே இட்ட தோள் மாலை கிடப்ப –
ஒரு மேருவிலே நின்றும்
பூமி அளவும் வர இரண்டருகும்
அருவிகள் வந்து விழுந்தால் போலே யாய்த்து
திருத் தோளில் இட்ட  மாலையானது சூழப் போந்து
திருவடிகள் அளவும் கிடக்கும் படி –
மை போல் என்கிறது திருமேனிக்கும் போரும்படி
உபமானம் தன்னையே சிஷிக்கிறது
சூழ்ந்திரு என்று மேலோடு கூட்டி இவ் ஒப்பனை அழகைக் கண்டு
இறையும் அகலகில்லேன் -என்று சூழ்ந்து போந்து
பெரிய பிராட்டியார் விட மாட்டாதே
திரு மேனியிலே உடையவன் -என்றுமாம்
பெரிய பிராட்டியார் நித்ய வாசம் பண்ணும் படியை சொல்லிற்று ஆகவுமாம் –

திரு மா மணி வண்ணன் –
காந்தி மிக்குப் பெரு விலையனான ரத்னத்தோடே ஒத்த
நிறத்தை யுடையவன்
அன்றிக்கே
திருவையும்
மா மணியையும்
திரு மார்விலே யுடையவன் -என்றுமாம்
பெரிய பிராட்டியாரை யுடையனாய்
ஸ்ரமஹரமான வடிவையும் உடையவன் –

செங்கண் மால் –
புண்டரீகாஷனான சர்வேஸ்வரன்
ஈஸ்வரன் என்று ஸூ சிப்பியா நின்ற
கண்களை யுடையவன்
ஸ்ரீ யபதித்வத்தால் வந்த சிவப்பாக்கவுமாம்
இத்தால்
உகந்த விஷயமே
வகுத்த விஷயம் ஆய்த்து -என்றபடி –

எங்கள் பெருமான் –
ஒரு மிதுனம்  இவருக்கு போக்கியம்
அஸ்மத் ஸ்வாமியாய்  உள்ளான் –

அடி சேரப் பெற்று –
இப்படிப் பட்டு உள்ளவன் யுடைய
திருவடிகளைச் சேரப் பெற்று
வாழும் வகை அறிந்தேன் –
போகய பூதனாய்
மேன்மையை உடையனாய் வகுத்தவனுடைய
திருவடிகளைப் பெற்று –

——————————————————————————————

பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: