மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -58-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

இப்படிப் பட்ட ஐஸ்வர்யத்தை உடையவனை
ஆஸ்ரயிக்கும் போது
கண்ணாலே காண வேணுமே -என்ன
காணலாம் படி திரு மலையிலே நின்றான்
என்கிறார் –

—————————————————————————————

தெளிந்த சிலா தலத்தின் மேலிருந்த மந்தி
அளிந்த கடுவனையே நோக்கி -விளங்கிய
வெண் மதியம் தா வென்னும் வேங்கடமே மேலோருநாள்
மண் மதியில் கொண்டுகந்தான் வாழ்வு ——-58-

———————————————————————————————

வியாக்யானம் –

தெளிந்த சிலா தலத்தின் மேலிருந்த மந்தி –
ஸ்படிக மயமான சிலா தளத்திலே பெண் குரங்கு
திருச் சித்ர கூட பரிசரத்தில்
சிலா தலத்திலே
பிராட்டியும் பெருமாளும் இருந்தாப் போலே இருக்கிறது –

சிலா தலத்தின் மேல் இருந்த
சிலா தலத்திலே
முற்கோலி   இருந்தபடி –

இருந்த –
வேண்டற்பாடு தோன்ற இருந்தபடி
கோதாவரி தீரத்திலே
சிலா தலத்திலே
முற்கோலிக் கொண்டு இருந்த பிராட்டியை போலே யாய்த்து
இந்தப் பெண் குரங்கும் –
அஸ்மின் மயா சார்த்தம் -ஆரண்ய -63-12-என்று பிராட்டி செய்த செயலை
திருமலையிலே திர்யக்குகள் அனுவர்த்தியா நின்றன –
அளிந்த கடுவனையே நோக்கி –
தன் பக்கலிலே மிக்க ச்நேஹத்தை யுடைத்தாய்
இது எப்போதோ நம்மை கைக் கொள்ளுவது என்று
காலம் பார்த்து நிற்கிற ஆண் குரங்கை பார்த்து

அளிந்த –
ப்ருகுடி படரைப் போலே
ஏவுவது காண் -என்று இருக்கை –

அளிந்த கடுவன் –
ச்நேஹத்தின் மிகுதி இ றே ஊடல் –

கடுவனையே நோக்கி –
ஊடினால் ஒரு கடகர் பொருந்த விட வேண்டாதே
தானே பார்த்து வரத்தை சொன்னபடி
இங்கு இளையபெருமாள் இல்லையே –

நோக்கி –
சர்வ ஸ்வதானம் பண்ணி-

விளங்கிய வெண் மதியம் தா வென்னும் –
உஜ்ஜ்வலமான சந்திர மண்டலத்தை தா -என்னா நின்றது
எனக்கு பார்க்கைக்கு கண்ணாடி கொடு வந்து தா -என்பாரைப் போலே
திருமலையினுடைய அந்தம்
சந்திர பதத்துக்கு அவ்வருகேயாய்
அதிலே இருக்கிற மந்தி யாகையாலே
அப்புறம் இ றே அதுக்குத் தோற்றுவது –
அவ்விடத்தில் களங்கம் இல்லையே
விளங்கிய வெண் மதியம் தா என்னும் ஆய்த்து –

தா என்னும் –
கடுவன் கீழே இருக்கையாலே அது மேலே நின்றும்
கீழ் நோக்கிக் கையை நீட்டுகிறபடி –
வேங்கடமே-
இப்படிப்பட்ட திருமலையே –

லோருநாள் மண் மதியில் கொண்டுகந்தான் வாழ்வு –
பண்டொரு காலத்திலே
பூமியை புத்தி யோகத்தாலே அவன் இருப்புக்குச் சேரும்படி
தன்னைத் தாழ விட்டுக் கொண்டு
இரந்து
பெற்றதுக்கு உகந்தவன் தனக்கு
சம்பத்தாக் நினைக்கும் தேசம் –

மண் மதியில் கொண்டுகந்தான் –
கொள்ளும் விரகு அறிந்து
இரக்கக் கொடுக்கும் என்று
இரந்து
கொண்டான் –

வாழ்வு –
வர்த்திக்கும் தேசம்
அவனுடைய ஐஸ்வர்யம் -என்றுமாம் –

மண் மதியில் கொண்டு –
இந்த மௌக்த்யம்- அத்தை-பெண் குரங்கு சந்த்ரனை தா -என்றத்தை -ஸ்மரித்த   படி –

————————————————————————————————————————————————————————-

பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: