மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -55-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

ஸ்ரீ பூமிப் பிராட்டி பக்கல்
இப்படி வத்சலனாய்
உள்ளவன் உடைய
அழகை -அனுபவிக்கிறார் –

———————————————————————————

பெரிய வரை மார்வில் பேராரம் பூண்டு
கரிய முகிலிடை மின் போல் -திரியுங்கால்
பாண் ஒடுங்க வண்டறையும் பங்கயமே மற்றவன் தன்
நீண் நெடுங்கண் காட்டும் நிறம் ———-55-

————————————————————————————-

வியாக்யானம் –

பெரிய வரை மார்வில் –
ஒரு மேரு போலே யாய்த்து
தன் திருமேனி இருக்கிற படி –
இத்தால்
ஆரத்தால் பரிச்சேதிக்கப் போகாத படி
பெரிய மலை போலே பரந்து இருக்கிற
திரு மார்வில் -என்கிறபடி –

பேராரம் பூண்டு  –
அம்மார்வு தனக்கு இருமடி இட்டுச்
சாத்த வேண்டும்படி யாய்த்து
ஆரத்தின் பெருமை
இருக்கிறபடி –

கரிய முகிலிடை மின் போல் –
அப்போது இருக்கும் படி என் என்னில் –
மார்வுக்கும்
ஆரத்துக்கும்
திருஷ்டாந்தம்
கருத்த நிறத்தை   உடைத்தாய் இருப்பதொரு
மேகத்தில் மின்னினாப் போலே
யாய்த்து ச்யாமளமான திரு மேனியிலே
ஆரம் கிடந்தால் இருக்கும் படி  –

திரியுங்கால் –
பெரிய வடிவிலே ஆரத்தைச் சாத்தி
சஞ்சரிக்கும் போது

அங்கன் அன்றிக்கே
திரியுங்கால் –
இவ்வழகை அனுசந்திக்கும் போது -என்றுமாம் –

பாண் ஒடுங்க வண்டறையும் பங்கயமே-
பாண ஜாதியாக
லஜ்ஜித்து ஒடுங்கும் படிக்கு ஈடாக
வண்டுகள் ஆனவை சப்தியா நின்றுள்ள
பங்கயமே காட்டும் –

எத்தை என்னில் –
மற்றவன் தன் நீண் நெடுங்கண் காட்டும் நிறம் –
அவனுடைய மற்றை நீண் நெடும் கண்ணில் உண்டான நிறத்தை –
அவனுடைய பரிச்சேதிக்கப் போகாத கண்ணின் உடைய நிறத்தைக் காட்டா நின்றது –
பெரும் கேழலார் தம் பெரும் கண் மலர்ப் புண்டரீகம் -திரு விருத்தம்-45-

——————————————————————————————

பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: