மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -54-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

வடதள சாயி வ்ருத்தாந்தத் தோடு
சேரச் சொல்லலாம் படியான
கிருஷ்ண வ்ருத்தாந்தத்தை
அனுபவிக்கிறார் –

———————————————————————————–
தாளால் சகட்முதைத்துப் பகடுந்தி
கீளா மருதிடை  போய்க் கேழலாய் -மீளாது
மண்ணகலம் கீண்டு அங்கோர் மாதுகந்த மார்வற்குப்
பெண்ணகலம்   காதல் பெரிது —–54-

—————————————————————————————

வியாக்யானம் –

தாளால் சகட்முதைத்துப் –
திருவடிகளாலே சகடாசூர பஞ்ஜனம் பண்ணி –
திருவடிகள் அளவும் வந்து கிட்டின
சகடத்தை
திருவடிகளாலே தள்ளி –

பகடுந்தி –
குவலயா பீடம் நிரசனம் பண்ணின படி –
கையளவும் வந்து கிட்டின குவலயா பீடத்தை
கையாலே விழ விட்டு –

வழி போக்குக்கு விரோதியான சகடத்தை திருவடிகளாலே தள்ளி –
புகுவாய் நின்ற போதகம் -பெரிய திருமொழி -6-5-6-என்னும் படி –
போய்ப் புகுகிற போதைக்கு இடைஞ்சலாய் நின்ற
குவலயா பீடத்தையும் கையாலே தள்ளினான் ஆய்த்து –

கீளா மருதிடை  போய்க்-
நிர்விவரமான மருதுகளின் நடுவே
வழி கண்டு போய்-
அன்றிக்கே
மரத்தைக் கிழித்துக் கொண்டு போனான் -என்னவுமாம் –

கேழலாய் -மீளாது-
சர்வாதிகனான தான் வராஹ வேஷத்தைக் கொண்டால்
பின்பு அவ்வளவிலே
பர்யவசிக்க இ றே அடுப்பது
அதுக்கு மேலே
கேழலாய்த் தன்னை உணர்ந்தான் –
ஸ்ரீ யபதி என்று உணர்ந்தால் செய்யப் போமோ-

மீளாது மண்ணகலம் கீண்டு –
என்று மேலே கூட்டி
மீளாத படிக்கு ஈடாக
பூமியைக் கொண்டு என்றுமாம் –

அங்கோர் மண்ணகலம் கொண்டு –
அவ்விடத்தே பிரளயம் கொண்ட பரப்பை
உடைத்தான பூமியைக் கொண்டு
ஏறினான் ஆய்த்து –

மாதுகந்த மார்வற்குப் –
பெரிய பிராட்டியார் விரும்பும்படியான
மார்வை உடையவன் –

பெண்ணகலம்   காதல் பெரிது –
ஸ்ரீ பூமிப் பிராட்டி பக்கல் உண்டான சங்கம்
சாலக் கரை புரண்டு இருந்தது –
பெண்ணகலம்  -என்கிறது -ஸ்ரீ பூமிப் பிராட்டி உடைய திரு மேனியை –
காரார் வரைக் கொங்கை கண்ணார் கடலுடுக்கை -சிறிய திரு மடல் -என்னக் கடவது இ றே –

காதல் பெரிது –
ஸ்ரீ பூமிப் பிராட்டியார் பக்கலிலே
பிச்சேறி இருக்கும் படி –
தன்னை யாசைப் படுவார் விடாயிலும்
மிக்கு இருப்பதே
தான் ஆசைப் படுவார் பக்கல் விடாய் –
அவாப்த சமஸ்த காமன் மகா வராஹமாய்
அண்ட பித்தியில் நின்றும்
பூமியை ஒட்டு விடுவித்து எடுத்து-

பெண்ணகலம்   காதல் பெரிது –
அவள் பக்கல் காதலாலே இ றே
அவள் அபிமானித்த
பூமியை எடுத்தது -என்கை –

————————————————————————————————–

பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: