மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -53-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

ப்ரஸ்துதமான ஸ்ரீ வாமன்னோடு
போலியான
வடதள சாயியை அனுபவிக்கிறார் –
எம்பெருமான் படி இதுவான பின்பு
மேல் வீழ்ந்து அனுபவி -என்கிறார் –
துர்க்கடங்களை கடிப்பிக்க வல்லவன்
என்கிறார் –

————————————————————————————

முயன்று தொழு நெஞ்சே மூரி நீர் வேலை
இயன்ற மரத்தாலிலையின் மேலால் -பயின்று அங்கோர்
மண்ணலம்  கொள் வெள்ளத்து மாயக் குழவியாய்த்
தண்  அலங்கல் மாலையான் தாள்  —–53-

————————————————————————————-

வியாக்யானம் –

முயன்று தொழு நெஞ்சே –
வரில் பொகடேன் கெடில் தேடேன்  -என்று இராதே நெஞ்சே –
உத்சாஹித்துக் கொண்டு
ஆஸ்ரயிக்கப் பாராய் –
யத்னம் பண்ணி ஆஸ்ரயிக்கப் பாராய் –
ஒரு கை முறிய விழுந்து கொடு நில்லாய் –

மூரி நீர் வேலை –
சஞ்சரியா நின்றுள்ள
நீரை உடைத்தான
சமுத்ரத்திலே –

இயன்ற மரத்தாலிலையின் மேலால் –
அதிலே உண்டான ஆல மரத்தின் உடைய
பவனாய் இருப்பதொரு
ஆலிலையின் மேலே –

பயின்று –
சிரகாலம்  சாய்ந்து அருளி —
மார்கண்டே யாதிகள் பயப்படும்படி –

அங்கோர் மண்ணலம்  கொள் வெள்ளத்து-
அங்கே-பூமியினுடைய
கார்யாகாரத்தை
அழியா நின்றுள்ள
பிரளயத்திலே –

மண் நலம் கொள் வெள்ளம் –
சேதனர்க்கு
போகோபகரணம்
போக ஸ்தானம்
போக்யமான பூமி
அழிந்து மூச்சடங்குகை-

மாயக் குழவியாய்த் –
ஆச்சர்யமான சேஷ்டிதங்களை யுடைய
முக்த்தனானவன் –

தண்  அலங்கல் மாலையான் தாள்  –
ஸ்ரமஹரமாய்
அசைந்து வாரா நின்றுள்ள
மாலையை உடையனான்வன்
திருவடிகளை –

முயன்று தொழு நெஞ்சே –
இவற்றை யடைய வயிற்றிலே
வைக்கிற போது ஒப்பனை குறி அழியாமே யாய்த்து வைத்தது –
ஆலிலையின் மேல் கண் வளர்ந்து அருளுகிற போது
இட்ட தோள் மாலையும்  தானுமாய்க் கிடந்த படி –
யசோதைப் பிராட்டி உண்டோ ஒப்பிக்க –
எல்லாம் ஆச்சர்யமாய் இருப்பதே –

——————————————————————————————-

பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: