மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -52-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

கீழே ப்ரஸ்துதமான
ராம வ்ருத்தாந்தம் தன்னிலே திரியவும் ஆழங்கால் பட்டுப்
பேசுகிறார் –
கீழே
கலங்கா  பெரு நகரம்  காட்டுவான் -என்றாரே
ருசி உடையாருக்குப் பரமபதம் கொடுக்கும் அத்தனையோ
-என்னில் –
ருசி பிறப்பிப்பானும் அவனே –
என்கிறது –

—————————————————————————————

எய்தான் மராமரம் ஏழும் இராமனாய்
எய்தான் அம்மான் மறிய  ஏந்திழைக்காய் -எய்ததுவும்
தென்னிலங்கைக் கோன் வீழச் சென்று குறளுருவாய்
முன்னிலம் கைக் கொண்டான் முயன்று   ——-52-

——————————————————————————————–

வியாக்யானம் –

எய்தான் மராமரம் ஏழும் இராமனாய் –
ஓர் ஆஸ்ரிதனை
விஸ்வசிப்பிக்கைக்காக
சக்கரவர்த்தி திரு மகனாய்க் கொண்டு
அவன் ஒன்றை எய்யக் கோலி
மராமரங்கள் ஏழும் துளை பட எய்தான் ஆயிற்று –
ருசி இல்லாதாருக்கு ருசியைப் பிறப்பிக்கும் போதும்
ருசி யுடையாருக்குச் செய்யுமா போலே
செய்யும் -என்றபடி –

எய்தான் அம்மான் மறிய  ஏந்திழைக்காய் –
பிராட்டி சொல்லு மறுக்க மாட்டாமையாலே
அந்த மான் புரண்டு விழும்படியாக எய்தான் –
அன்றிக்கே –
மான் மறியை -என்ற பாடம் ஆய்த்தாகில்
இளமான் -என்றாய் -மான் குட்டி என்று பாராதே
கிடீர் எய்தது -அவள் அருளிச் செய்கையாலே –

ஏந்திழைக்காய் —
கண்ணாஞ்சுழலை இடப் பண்ணின அழகு இ றே –
புரேவ மே சாறு தத்தி ம நிந்திதாம் -ஆரண்ய -64-78-
இத்தாலும் அவளுடைய ருசியை வர்த்திப்பித்த  படி –

எய்ததுவும் தென்னிலங்கைக் கோன் வீழச்-
எய்தது தெற்கு திக்கில் உண்டான இலங்கைக்கு
நிர்வாஹகனான ராவணனை –
அழகுக்கு இலக்காகாதாரையும்
புக்கு இலக்காக்கின படி –

சென்று குறளுருவாய்  முன்னிலம் கைக் கொண்டான் முயன்று   –
முன்பு குறளுருவாய் சென்று
முயன்று
பூமியைக் கையிலே கொண்டான் –

முன்னிலம் கைக் கொண்டான் முயன்று   –
லோகத்தை யடங்கக் கைக் கொண்டான் –

முயன்று –
கொள்வன் நான் -திருவாய் -3-8-9-
இத்யாதிகள் செய்தவை
இத்தால்
ப்ராப்தி பண்ணா நின்று கொண்ட படி –

———————————————————————————————

பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: