மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -51-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

இப்படி ஸ்ரீ  கஜேந்திர ஆழ்வான் உடைய ஆபன்நிவாரணம்
பண்ணினவன் கிடீர்
நமக்கும் எல்லாம் உபாய பூதனாவான்
என்கிறார் –
ஓர் ஆபத்து நீக்கி விட்ட அளவோ
ஆபத்துக்கள் ஒன்றும் தட்டாதபடி பண்ணி
பரமபதத்திலே செல்ல நடத்துவான் அவனே
என்கிறார் –
சங்கல்ப்பத்தாலே ஆஸ்ரித பஷபாதம் தோற்றாது என்று இ றே மா முதலை கொன்றது
முதலாக விச் செயல்கள் –

——————————————————————————————

அவனே அருவரையால் ஆநிரைகள் காத்தான்
அவனே அணி மருதம் சாய்த்தான் -அவனே
கலங்கா  பெரு நகரம் காட்டுவான் கண்டீர்
இலங்கா புரம் எரித்தான் எய்து ——51-

——————————————————————————————–

வியாக்யானம் –

அவனே அருவரையால் ஆநிரைகள் காத்தான் –
ஒருவரால் சலிப்பிக்க ஒண்ணாத மலையைத்
தரித்துக் கொண்டு நின்று
பசுக்களுக்கும் இடையருக்கும்
ஒரு நோவு வாராதபடி நோக்கினவன்
கிடீர் -என்கிறார்
வர்ஷத்தால் நோவுபட்ட
பசுக்கள் ஆதல்
இடையர் ஆதல்
தங்கள் உடைய ரஷணத்துக்கு ப்ரவர்த்தித்தார் உண்டோ –
அப்போது
அவ்விடையரிலே யாதல் பசுக்களிலே யாதல்
சிலர் வந்து ஒரு தலை பற்றின்மை இல்லை -கிடீர்
மலைக் கீழ் ஒதுங்கோம் என்னாத மாத்ரமே –
இவற்றுக்குச் செய்யல் யாவது இல்லை
அவனுக்குச் செய்ய வேண்டுவது இல்லை
ரஷ்ய ரஷக பாவம் தப்பாமையே வேண்டுவது-

அவனே அணி மருதம் சாய்த்தான் –
பருவம் நிரம்பா இருக்கச் செய்தே
தன்னிலே சேர்ந்து நின்ற
யமளார்ஜூனங்களைத் தள்ளினான் அவனே கிடீர்
அப்போது யசோதாதிகளும் ஒருவர்கூட்டுப் பட்டார் இல்லையே
இத்தால்
எல்லா ரஷைக்கும் தானே கடவனாய் இருக்க
அவளுடைய சகாயம் ஒழியவே
தன்னுடைய ரஷையை நடத்தினான் –
என்றபடி –
அவனே -என்று
சஹகாரி நைரபேஷயத்தைச் சொல்லுகிறது –

அவனே கலங்கா  பெரு நகரம் காட்டுவான் கண்டீர் –
நாம் கண்டு ஓரடி இடலாம் என்று
பிரமித்த இடத்துக்கும் அவனே வேண்டின  பின்பு –
நமக்குத் தெரியாத இடத்துக்கு
அவனே என்னும் இடம் சொல்ல வேணுமோ –
அவனே கிடீர் நம் பேற்றுக்கு
சஹாயாந்தர நிரபேஷமான சாதனமும் –
இத்தலையிலும் ஓன்று கண்டல்ல கிடீர் –

கலங்கா  பெரு நகரம் –
ஒருவர் கூறை
எழுவர் உடாத தேசம் –

காட்டுவான் கண்டீர் –
ஏஷா சாத்ருச்யதே -யுத்த -123-55-என்று
அவன் காட்டக் காண்கையிலே
அந்வயம்-
ஸ்வ யத்னத்தாலே காண்பாருக்கு காணப் போகாது  –

இலங்கா புரம் எரித்தான் எய்து –
ப்ரஹ்மாதிகள் உடைய அஸ்த்ரத்துக்கும் அழியாத ஊரை
மூலையடியே அம்பு பறக்கும் படி பண்ணிப்
பின்பு அழியச் செய்தவனும் அவனே -கிடீர் –

இலங்கையை அழித்து பிராட்டியைப் பெறுகைக்கு யத்னம் பண்ணினானும் -அவனே
அவள் ஓர் அம்பு எய்தாளோ-
அறிவில்லாத பசுக்களோடு
அறிவுடைய பிராட்டியோடு
வாசி இல்லை –
அறிவுக்குப் பிரயோஜனம்
தத் தஸ்ய சத்ருசம் பவேத்  -சுந்தர -39-40-என்கைக்கு உடலாயிற்று
அவற்றின் உடைய அஜ்ஞ்ஞதை –
ஆபன் நிவாரணத்தை விலக்காமைக்குப் பரிகரம் ஆயிற்று –

————————————————————————–

பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: