மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -49-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

இன்னும் இவ்வளவேயோ
அவன் ஆஸ்ரித அர்த்தமாகப் பண்ணும்
வியாபாரம்
என்கிறார் –

—————————————————————————–

செற்றதுவும் சேரா இரணியனைச் சென்றேற்றுப்
பெற்றதுவும் மா நிலம் பின்னைக்காய் -முற்றல்
முரியேற்றின் முன்னின்று மொய்ம் பொழித்தாய் மூரிச்
சுரியேறு சங்கினாய் சூழ்ந்து —-49-

————————————————————-

வியாக்யானம் –

செற்றதுவும் சேரா இரணியனைச் –
முடித்ததும்
சர்வதா பொருந்தாத ஆசூரப்ரக்ருதியான ஹிரண்யனை —
ஆஸ்ரிதரோடு சேராத ஹிரண்யனை -என்றுமாம் –
அவன் இழவுக்காக கொன்றான் -என்றுமாம் –

சென்றேற்றுப் பெற்றதுவும் மா நிலம் –
மகா பலி பக்கலிலே சென்று
நீரேற்று
பெறாதது பெற்றாப் போலே நினைத்து
பெற்றதும் தன்னைதான பூமியை –

பின்னைக்காய் -முற்றல்முரியேற்றின் முன்னின்று மொய்ம் பொழித்தாய் மூரிச்சுரியேறு சங்கினாய் சூழ்ந்து –
நப்பின்னைப் பிராட்டியைப் பெறுகைக்காக
மிடுக்கை உடைத்தாய் கொண்டு சஞ்சரியா நின்றுள்ள
ருஷபங்களின் முன்னே நின்று
அவற்றின் வ லியைப் போக்கினான் -ஆய்த்து-

சூழ்ந்து –
இடம் பார்த்து நின்று –
திண்மையாகவுமாம்   –

முரி-
சஞ்சரிக்கிற –

மூரிச் சுரியேறு சங்கினாய் –
இடைத்தையும் உடைத்தாய்
சுரியையும் உடைத்தாய் உள்ள
ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை உடையவன் கிடீர்
சூழ்ந்து முன்னின்று அவற்றை முடித்தான்
தானே கை தொட்டு
விரகாலே செய்தான் -என்கை-

பின்னைக்காய் –
ரசிகத்வத்தாலே
தன்னை அழிய மாறின படி –

———————————————————————————————-

பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: