மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -45-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

பல கதிர்கள் பாரித்த பைம் பொன் முடியான் -என்று
பரம பதத்தைக்கலவிருக்கையாக உடையவன் என்று
ப்ரஸ்துதமான வாறே
அவனை ஆஸ்ரயிக்கும் போது கண்ணாலே கண்டு கொள்ள வேணும் –
அவன் நமக்கு ஸூ லபனோ என்னில் –
அக்குறைகள் தீர நமக்காக வன்றோ
திருமலையிலே வந்து சந்நிஹிதனாய்
ஸூ லபன் ஆயத்து -என்கிறார் –

———————————————————————————–

புரிந்து மத வேழம் மாப் பிடியோடூடித்
திரிந்து சினத்தால் பொருது -விரிந்த சீர்
வெண் கோட்டு முத்து உதிர்க்கும் வேங்கடமே மேலொரு நாள்
மண் கோட்டுக் கொண்டான் மலை ——–45-

—————————————————————————————-

வியாக்யானம் –

புரிந்து மத வேழம் –
மதித்து இருந்துள்ள ஆனை யுண்டு -மத்த கஜம் –

மாப் பிடியோடூடித் –
தன்னை நினைத்த படியே கார்யம் கொள்ள வல்ல
ஸ்லாக்கியமான பிடியோடு ஊடி –
இவ்வளவிலேயும் தன்னை ஏவிக் கார்யம் கொள்ள வற்றான பிடி இ றே-

புரிந்து –
அநந்தரம்
ஊடல் தீர்ந்து
கலந்து  –

திரிந்து –
அந்தச் செருக்காலே
சஞ்சரியா நிற்கும் –

ஊடி மாப் பிடியோடு –
ஸ்லாக்யதை ஊடுகைக்கு அடி –

திரிந்து-
பூஞ்சோலை வழி இ றே சஞ்சரிப்பது –

சினத்தால் பொருது –
அங்கு உண்டான பளிங்குப் பாறையிலே
தன் நிழலைக் கண்டு -பிரதி கஜம் என்று புத்தி பண்ணி
பின்னை அத்தோடேஒன்றிப் பொருது –
அந்த வீர ஸ்ரீ யடங்கலும் தோற்றும் படி நின்று –

இப் பொருள் அன்றிக்கே –
மத வேழம் மாப் பிடியோடு புரிந்து ஊடி –
பிடியோடு சம்ச்லேஷித்து
அநந்தரம்
ஊடி-

திரிந்து சினத்தால் பொருது –
ஊடலாலே பிறந்த சினத்தாலே உலாவி –
சினத்தாலே பொருது –
மலையில் ரத்ன பித்திகளிலே  பொருது
காமாத் குரோத அபிஜாயதே -கீதை-2-62-
மலையோடு பொருகிற படி –

விரிந்த சீர்-
இப்படி பொருகையாலே வீர ஸ்ரீயை யுடைய ஆனை
இத்தால்
கர வதத்தின் அன்று போலே
விஜயம் கண்டு ஊடல் தீர்ந்து அணைக்க வேண்டி
இருக்கை-

விரிந்த சீர் வெண் கோட்டு முத்து உதிர்க்கும் -வேங்கடமே –
வீர ஸ்ரீ யை உடைத்தான வெள்ளைக் கொம்புகளில் உண்டான முத்தை உதிரா நின்ற திருமலை என்று ஜீயர்
விரைந்த சீரை உடைத்தாய்
வெண் கொட்டு முத்தையும் உதிர்க்கும் -என்றுமாம் –

மேலொரு நாள் மண் கோட்டுக் கொண்டான் மலை-
இப்படிப் பட்ட நன்மையை உடைத்தான தேசம் கிடீர்
முன்னொரு நாள் பூமி அடங்கலும் தன் திரு எயிற்றிலே அடக்கினவன் வர்த்திக்கிற திருமலை
ஸ்ரீ வராஹ ரூபியாய் எயிற்றிலே கொண்டவன் உடைய மலை
திரு மலையில் ஆனைகளுக்குச் சேரும் இ றே ஸ்ரீ வராஹமான வடிவு
இந்த மத்த கஜத்தின் உடைய ஸ்வரூபமானது
வராஹ ரூபியானவனுடைய செருக்கை ஸ்மரிப்பித்த தாய்த்து
வராகம் ஒன்றாய் மண் எல்லாம் இடந்து எடுத்து மதங்கள் செய்து–பெரிய திருமொழி -3-4-3-என்னக் கடவது இ றே  –

மலை –
இன்ன மலையை யுடையவன் என்னுமா போலே
அவனுக்கு ஐஸ்வர்யம் ஆகை-

——————————————————————————————-

பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: