மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -42-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

ஒரு நாடாகத் தன் திருவடிகளின் கீழே இட்டுக் கொண்டு
நோக்கினான் என்கிற
பிரசங்கத்தாலே
ஒரூருக்காக வந்த விரோதங்களைப் போக்கி
அங்கு உள்ளாரை நோக்கின படி சொல்லுகிறார் –

———————————————————————–

கோவலனாய் ஆநிரைகள் மேய்த்துக் குழலூதி
மாவலனாய்க் கீண்ட மணி வண்ணன் -மேவி
அரியுருவமாகி இரணியனதாகம்
தெரியுகிரால் கீண்டான் சினம் —-42–

——————————————————————————-

வியாக்யானம் –

கோவலனாய் ஆநிரைகள் மேய்த்துக் குழலூதி –
பசு மேய்க்கைக்கு ஈடான யோக்யதை யுண்டாம்படி
இடையனாய்ப் பிறந்து
குழலூதிப் பின்பு
பசுக்களை மேய்த்தான் ஆய்த்து-
பிராமணன் ஒத்துச் சொல்லப் பெறுமா போலே
இடைச் சாதிக்கு உசிதமான பசுக்களையும் மேய்த்துக் குழலையுமூதி
ஆபி ஜாத்யம் –

மாவலனாய்க் கீண்ட –
அப்பருவம் நிரம்பாதே இருக்க
கேசியுடைய வாயைக் கிழித்த படி –
தான் பிற்காலியாதே-சமர்த்தனாய்க் கொண்டு
நேர் நின்று கேசி வாயைக் கிழித்துப் பொகட்டு-

மாவலனாய்க் கீண்ட –
சௌகுமார்யம் கண்டு
மாட்டான் என்று இருந்தான் –

மணி வண்ணன் –
விரோதியைப் போக்குகையாலே
ஸ்ரமஹரமான வடிவை யுடையனாய்க் கொண்டு
நின்றவன் –
அப்போதை அழகு –

மேவி அரியுருவமாகி –
நரசிம்ஹ வேஷத்தோடு பொருந்தி
ஆவது நரத்வ சிம்ஹத்வம் ஆகிற இரண்டு வடிவு கொண்டால்
பொருந்தாதே இருக்குமோ என்னில்
ஒரு வடிவு போலே பொருந்தின படி
சேர்ப்பாலும் கண்ட சர்க்கரையும் போலே சேர்ந்த படி –

அன்றிக்கே –
இரணியனதாகம் மேவி
இரணியனைக் கிட்டி -என்னவுமாம் –

இரணியனதாகம் தெரியுகிரால் கீண்டான் சினம் –
முருட்டு ஹிரண்யன் உடைய உடலை உகிராலே
கீண்டு பொகட்டவன்-

சினம் தெரி –
அவனுடைய கோபத்தை அனுசந்தித்து
அருள் அன்று நமக்கு உத்தேஸ்யம்
ஆஸ்ரித விரோதிகள் பக்கல் அவனுக்கு உண்டான சினம் உத்தேஸ்யம் –
அச்சினத்தை அனுசந்தி –

அன்றிக்கே –
தெரி உகிர் என்றதாய்
விசதமான உகிர் -என்றதாகவுமாம் –

———————————————————————————————–

பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: