மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -39-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

இப்படி ஜகதாகாரனான சர்வேஸ்வரன்
திரு மலையிலே புகுந்து
சந்நிஹிதனாய்ப் பின்பு
என் ஹிருதயத்தை விட்டுப் போகிறிலன்
என்கிறார் –

————————————————————————————-

இறையாய் நிலனாகி எண்டிசையும் தானாய்
மறையாய்  மறைப் பொருளாய் வானாய்-பிறை வாய்ந்த
வெள்ளத்தருவி விளங்கொலி  நீர் வேங்கடத்தான்
உள்ளத்தின் உள்ளே  உளன் —–39-

————————————————————————————–

வியாக்யானம் –

இறையாய் –
உபய விபூதி யுக்தனான
சர்வேஸ்வரனாய்-

நிலனாகி –
பூமி யடங்கத் தானாய் –

எண்டிசையும் தானாய்-
எட்டு திக்குகளும்
திக்குகளில் உண்டான சேதனவர்க்கம் அடங்கத்
தான் இட்ட வழக்காய்-

மறையாய்  –
தன்னை உள்ளபடி பிரதிபாதியா நின்ற வேதங்களாய் –

மறைப் பொருளாய்-
அப்படிப் பட்ட வேதாந்த ரகஸ்யமாய்
வேத பிரதிபாத்யன் -என்னுதல்-

வானாய்-
பரமாகாச சப்த வச்யமான
பரமபதத்தையும் பிரகாரமாக உடையனாய்

இப்படியாய்க் கொண்டு
அழியாதவனாவான்
இறை -என்னுதல் –

பிறை வாய்ந்த-
சந்திர பதத் தளவும் கிட்டி இருப்பதாய் –

வெள்ளத்தருவி –
வெள்ளத்தை யுடைத்தான அருவி –
மிக்க ஜலத்தை யுடைத்தான அருவியையும் உடைத்தாய் –

விளங்கொலி  -நீர் வேங்கடத்தான்
விளக்கத்தையும்
த்வநியையும்
உடைத்தான அருவி
இப்படிப் பட்ட ஜல சம்ருத்தியை உடைத்தான
திருமலையை வாசச் ஸ்தானமாக உடையவன் –

உள்ளத்தின் உள்ளே  உளன் —
திருமலையில் நின்று
என்னுடைய ஹிருதயத்தில் புகுர
அவசர ப்ரதீஷனாய்க் கொண்டு
வந்து புகுந்தான் –
அங்குத்தை இருப்பானது என் பக்கலிலே வருகைக்குக் காலம்
பார்த்து இருந்தான் என்று தோற்றி இரா நின்றது –

உள்ளத்தின் உள்ளே  உளன் —
திவ்யஜ்ஞான உபபன்நாஸ் தே ராமம் த்ருஷ்ட்வா மகார்ஷய -ஆரண்யம் -1-10-
அதீந்த்ரிய வஸ்து
கண்ணுக்கு விஷயமான படி –

—————————————————————————————-

பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: