மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -38-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

இப்படி என்னை வந்து விரும்பினவன் தான்
சால எளியான் ஒருவனோ
சர்வேஸ்வரன் கிடீர்
என்கிறார் –

——————————————————————————-

தானே தனக்குமவன் தன்னுருவே எவ்வுருவும்
தானே தவவுருவும் தாரகையும் –தானே
எரி சுடரும் மால் வரையும் எண் திசையும் அண்டத்து
இரு சுடருமாய விறை –38-

———————————————————————————–

வியாக்யானம் –

தானே தனக்குமவன் –
தனக்குத் தானே உபமான ரஹீதன்-
தனக்கு ஒப்பாகச் சொல்லலாவானும் தானே  –
புறம்பு இல்லை
ஒப்புச் சொல்லில் தன்னையே சொல்லும் இத்தனை –
இன்னும் ஓர் ஈஸ்வரன் உண்டாகில் இ றே ஒப்புச் சொல்லலாவது –

தன்னுருவே எவ்வுருவும் –
உபமான ராஹித்யத்துவக்கு அடி
சகல பதார்த்தங்களும் தனக்குப் பிரகாரமாய்த்
தான் ப்ரகாரியாய்
தனக்கு ஒரு ப்ரகார்யந்தரம் இன்றிக்கே இருக்கை -என்கிறது
சகல ஜந்துக்களும் தனக்கு சரீரம் என்றபடி-

தானே தவவுருவம் –
தபஸ் ஸூ பண்ணி
புண்ய சரீரமான அதிகாரி புருஷர்களும்
அவனுக்கு பிரகாரம் –

தாரகையும் -தானே –
நஷத்ரங்களும் அவனுக்குப் பிரகாரம் –

தானே எரி சுடரும் –
அக்னியும் –

மால்வரையும் –
குல பர்வதங்களும் –

எண்டிசையும் –
எட்டு திக்குகளும் –

அண்டத்து –
பஞ்ச பூதங்களால் ஆரப்தமான அண்டமும் –

இரு சுடருமாய –
அண்டாந்தர வர்த்திகளான
சந்திர சூரியாதிகளும் ஆகிற
இருவகைப் பட்ட  தேஜ பதார்த்தங்களும் எல்லாம் தான் இட்ட வழக்கு-

இறை –
இவை எல்லாமாய் நின்ற
சர்வேஸ்வரன்
தானே தனக்குமவன் –

——————————————————————————————–

பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: