மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -37-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

இப்படிப் பட்டவன் திருவடிகளிலே
நான் ஒரு வழியாலே அடிமை புக்கேன்
இங்கனே இருந்துள்ள நான்
அவனை ஸ்ப்ருஹநீயனாக புத்தி பண்ணுகை அன்றிக்கே
அவன் தானே என்னை
ஸ்ப்ருஹநீயனாக   புத்தி பண்ணா நின்றான்
என்கிறார் –

————————————————————————————-

அவர்க்கு அடிமை பட்டேன் அகத்தான் புறத்தான்
உவர்க்கும் கருங்கடல் நீருள்ளான் -துவர்க்கும்
பவளவாய்ப் பூ மகளும் பன் மணிப் பூணாரம்
திகழும் திரு மார்வன் தான் ——37–

—————————————————————————————–

வியாக்யானம் –

அவர்க்கு அடிமை பட்டேன் –
அவன் திருவடிகளிலே அடிமை புக்கேன்
அஹ்ருதயமாக அடிமை புக்கேன் என்றேன் இத்தனை-என்றுமாம் –

அகத்தான் புறத்தான் –
அவன் பின்னை என் செய்தான் என்னில்
அடிமையிலே அந்வயித்த மாத்ரத்திலே
உள்ளும் புறமும் ஒக்கக்
கை விட மாட்டாதே
சௌபரியைப் போலே பல வடிவு கொண்டு
பூஜியா நின்றான்
விட சக்தன் ஆகிறிலன்-

உவர்க்கும் கருங்கடல் நீருள்ளான் –
பூமியை வளைந்த இந்த உப்புக் கடலிலேயும் கண் வளர்ந்து அருளுவதாக சொல்லா நிற்பார்கள்
கடலுக்குச் சிறப்பான இடம் எங்கும் கண் வளர்ந்து அருளுவதாகச் சொல்லா நிற்பார்கள்
திருப் பாற் கடலைக் கடையச் செய்தே இ றே
அல்லாத கடல்களுக்கும் இட்டுச் சொல்லுகிறது –

பூமியைச் சூழ்ந்த லவணோத்தரமாய்
கருத்து இருக்கிற கடலிலே
நீரிலே   கண் வளர்ந்து அருளுமவன் –
நீலக் கடலுள் நெடுங்காலம் கண் வளர்ந்தான் -பெரியாழ்வார் -2-6-6-என்னக் கடவது இ றே

திருப் பாற் கடலை வாசஸ் ஸ்தானமாக யுடையவன் -என்றுமாம் –
துவர்க்கும் பவளவாய்ப் பூ மகளும் –
சிறந்த பவளம் போலே இருந்துள்ள
பவளம் போலே இருந்துள்ள அதரத்தை யுடைய
பெரிய பிராட்டியாரையும்
இத்தால்
அகத்தான் புறத்தான் ஆகைக்கு அடி
அவள் முறுவல் பெறுகைக்கு -என்றவாறு –

பன் மணிப் பூணாரம் திகழும் திரு மார்வன் தான் –
நவ ரத்னன்களை உடைத்தான ஆபரணங்களையும்
திரு வாரத்தையும் உடைத்தாய்க் கொண்டு
விளங்கா நின்றுள்ள திரு மார்வை உடையனானவன் –
பன் மணிப் பூணாரம் -என்று ஒரு சொல் ஆகவுமாம்-

அகத்தான் புறத்தான் –
பெரிய பிராட்டியாருக்கு ஸ்ப்ருஹநீயமான மார்வை உடையவன் கிடீர்
பெறாததும் பெற்றானாய் இருக்கிறான் –
அப்படிப் பட்ட ஒப்பனையையும்
குறைவற்ற மேன்மையையும்
பிராட்டி உடைய விருப்பத்தையும்
உடையனானவன் கிடீர்
இப்போது என்னை வந்து விரும்பினான் –

ஒருவனுடைய அபி நிவேசம் இருக்கும் படி என்
என்று ஈடுபட்டுப் பேசுகிறார் –

——————————————————————————————–

பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: