மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -35-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

நெஞ்சமே காண் என்று உபதேசித்தாரே கீழே –
அதடியாக மற்றைக் கரணங்கள்-இவர்   தம்மை ப்ரேரிக்கத் தொடங்கிற்றன-
மனச் சஹ காரத்தோடேயாய் இருக்கும் இ றே  -அல்லாத இந்த்ரியங்களுக்கும் அனுபவம் –
இந்த்ரியங்கள் தான் முற்பட்டு
இவர் மூட்டும் அளவாய்த்து –

————————————————————————————-

காண் காண் என விரும்பும் கண்கள் கதிரிலகு
பூண்டார கலத்தான் பொன் மேனி -பாண் கண்
தொழில் பாடி வண்டறையும் தொங்கலான செம்பொற்
கழல் பாடி யாம் தொழுதும் கை ——35–

—————————————————————————————-

வியாக்யானம் –

காண் காண் என விரும்பும் கண்கள் கதிரிலகு-பூண்டார கலத்தான் பொன் மேனி –
கதிரிலகு-பூண்டார கலத்தான் பொன் மேனி -காண் காண் என விரும்பும் கண்கள்
இவ்வடிவு காண் என்று உபதேசிக்கும் படியாய் இருந்ததோ –

கதிரில்கு பூண் –
புகர் மிக்கு இருந்துள்ள ஆபரணம் -என்னுதல்-
ஒளி விடா நின்றுள்ள  ஆபரணம் -என்னுதல் –

தார் அகலத்தான்
தார் உண்டு -மாலை
அத்தையும் உடைத்தான
அகன்ற மார்பையும் உடையவனானவனுடைய –

பொன் மேனி –
ஸ்ப்ருஹநீயமான திரு மேனியை –

இத்தால்
இவ் இந்த்ரியங்களின் குற்றம் அல்ல -என்றபடி –
காண வேணும் காண வேணும் என்று விரும்பி நின்றன கண்கள்
ஷாம காலத்தில் பசல்கள் சோறுசோறு -என்னுமா போலே –

பாண் கண் தொழில் பாடி –
பாணிலே பாட்டிலே
அவனுடைய அபதானங்களைப் பாடி -என்னுதல் –
பாண் கட்டொழில்-என்று அவனுடைய அபதானங்களைப் பாடி -என்னுதல் –
அன்றிக்கே
பாணர் உடைய தொழிலிலே -அவர்களுடைய ரீதியிலே -பாடி என்னுதல்
அன்றிக்கே
பாண்கள் தொழில்  உண்டாகப் பாடி -என்னவுமாம் –

வண்டறையும் தொங்கலான –
வண்டுகள ஆனவை சப்தியா நின்றுள்ள வளையத்தை உடையனாய் உள்ளவன்
மாலையை உடையவன் -என்னவுமாம்
இத்தால் வண்டுகள் மீட்கில் இ றே
என் இந்த்ரியங்களை மீட்கலாவது -என்றபடி –

செம்பொற் கழல் பாடி யாம் தொழுதும் கை –
நமக்கு இவற்றின் கீழ் குடி இருப்பு அரிதான பின்பு
இனி நாமும் அவனுடைய ஸ்லாக்யமான திருவடிகளை
வாயாரப்   பாடி
கையாலே தொழுவோம் –

——————————————————————————————–

பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: