மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -33-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

இப்படி இருக்கிறவன் அபேஷித்தார் அபேஷித்தது எல்லாம்
கொடுக்குமவன் கிடீர்
என்கிறார் –
இவனுடைய உடைமை எல்லாம் பரார்த்தம்
என்கிறது –

——————————————————————————–

பாலகனாய் ஆலிலை மேல் பைய உலகெல்லாம்
மேலோருநாள் உண்டவனே மெய்ம்மையே -மாலவனே
மந்தரத்தால் மா நீர்க் கடல் கடைந்து வானமுதம்
அந்தரத்தாக்கு ஈந்தாய் நீ யன்று —33–

———————————————————————————-
வியாக்யானம் –

பாலகனாய் –
தனக்கு சிலர் பரிய வேண்டும்படியான
பருவம் நிரம்பாத அவஸ்தையை யுடையனாய்க் கொண்டு –

ஆலிலை மேல் –
பவனாய் இருப்பதொரு ஆலந்தளிரிலே –

மேலோருநாள் உண்டவனே-
பூர்வ காலத்திலே பிரளயம் வந்து முகம் காட்ட
அப்போது ஜகத்தை யடங்கலும் நெருக்குப் படாதபடி
வயிற்றிலே வைத்து நோக்கினவனே-

உலகெல்லாம் பைய உண்டு –
நெருக்குப் படாதபடி
மெள்ளத் திரு வயிற்றிலே வைத்து –
மெய்ம்மையே –
இச் செயலில் ஒரு கண் அழிவு இல்லை கிடீர் -என்கிறார்
ஐந்தர ஜாலிகரைப் போலே அன்றிக்கே
சத்தியமே –

மாலவனே –
சர்வாதிகனான சர்வேஸ்வரனே –
செய்யும் செய்கைகள் பரிச்சேதிக்கப் போகாது
என்கை –

மந்தரத்தால் மா நீர்க் கடல் கடைந்து-
மந்த்ரம் என்று ஒன்றைப் பேரிட்டுக் கொண்டு
பெரிய நீரை யுடைய கடலைக் கலக்கி

வானமுதம் –
வலிதான அமுதம் –
அதாகிறது
சரீரத்துக்கு ச்தைர்யத்தைப் பண்ணிக் கொடுக்கக் கடவதான அம்ருதம் –
தேவ ஜாதி மரியாதபடி
பிராணனைக் கொடுத்து
ஜரா மரணாதி களைப்போக்க வல்ல அம்ருதம் –

அந்தரத்தார்ககு ஈந்தாய் நீ யன்று –
ஸ்வர்க்கத்திலே வர்த்திக்கக் கடவரான தேவர்களுக்கு
அன்று கொடுத்தாய்
சம்சாரத்தைப் பூண் கட்டி நடுவில் பரணிலே இருக்கிறவர்கள் –

மெய்ம்மையே –
இவை யடங்கலும் பத்தும் பத்தான படி
என் -என்று விஸ்மிதர் ஆகிறார்  –

————————————————————————————

பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: