மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -32-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

இப்படி சீலவானான இவன்
எழுந்து அருளி இருக்கும் இடங்களுக்கு
ஓர் எல்லை இல்லை கிடீர் –
என்கிறார் –

—————————————————————————————–

பாற் கடலும் வேங்கடமும் பாம்பும் பனி விசும்பும்
நூற் கடலும் நுண்ணூல தாமரை மேல் -பாற் பட்டு
இருந்தார் மனமும் இடமாகக் கொண்டான்
குருந்து ஒசித்த கோபாலகன் ——-32-

——————————————————————————————–

வியாக்யானம் –

பாற் கடலும் வேங்கடமும் பாம்பும் –
திருப்பாற் கடலும்
திருமலையும்
திரு வநந்த வாழ்வான்
பக்கலிலும் –

பனி விசும்பும் –
சம்சார வெக்காயம் தட்டாத படி
குளிர்த்தி மிக்க நிரதிசய போக்யமான
ஸ்ரீ வைகுண்டமும்

நூற் கடலும் –
வித்யா சமுத்ரமும்
இதிஹாச புராணங்கள்   ஆகிற
கடலும் —

நுண்ணூல தாமரை மேல் -பாற் பட்டு இருந்தார் மனமும் –
பத்ம கோச ப்ரதீகாசம் ஹ்ருதயஞ்சாப் யதோ முகம் -என்று
சாஸ்த்ரைக சமதி கம்யமான ஹ்ருதயக் கமலத்திலே
அவனுக்கு இருப்பாக அனுசந்தித்து இருக்கும் அவர்கள் உடைய மனசும்
சாஸ்த்ரங்களிலே ஹ்ருதய கமலம் என்று சொல்லப் பட்ட
அதின் மேலே வைக்கப்பட்ட
இந்த்ரியங்களை யுடையரான யோகிகள் உடைய மனசும் –

இடமாகக் கொண்டான் –
இவற்றை எல்லாம் தனக்கு வாசஸ் ஸ்தானமாகக் கொண்டான் –

அவன் ஆர் என்னில் –
குருந்து ஒசித்த கோபாலகன் –
விரோதி நிரசன சீலனான கிருஷ்ணன் ஆவான்
இப்படி இருக்கிற இவன் கிடீர்
எனக்கு எளியன் ஆனான் -என்று கருத்து –

———————————————————————————————–

பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: