மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -31-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

இவ்வோ இடங்களிலே நிற்கிறவன் தான்
ஆஸ்ரித விரோதி நிரசனம் பண்ணுமவனுமாய்
ஸூ சீலனுமாய்
இருப்பான் ஒருவன் கிடீர்
என்கிறார்
கீழ்ச் சொன்ன திருப்பதிகள் நெஞ்சை
அனுவர்த்திக்கிற படி    –

——————————————————————————–

இவையவன் கோயில் இரணியனதாகம்
அவை செய்தரியுருவமானான் -செவி தெரியா
நாகத்தான் நால் வேதத்துள்ளான் நறவேற்றான்
பாகத்தான் பாற் கடலுளான்   —–31–

———————————————————————————-

வியாக்யானம் –

இவையவன் கோயில் –
அவனுடைய கோயில்கள் இவை –
கீழ்ச் சொன்னவை –

இரணியனதாகம்-
முருட்டு ஹிரண்யன் உடைய
உபசயாத்மகமான சரீரத்தை –

அவை செய்தரியுருவமானான் –
சின்னம் பின்னம்-யுத்த -94-82-என்கிறபடியே
பல கூறுகளாம் படி பண்ணின
நரசிம்ஹ ரூபியானவன் –

ஆகம் அவை செய்து –
ஒன்றை இரண்டாக்கின படி
கிட்ட விருக்கிறது விரோதி போக்குகைக்கு -என்கிறார் –

செவி தெரியா நாகத்தான்-
செவி இன்றிக்கே ஒரு இந்த்ரியம் கொண்டு
ஓன்று கொள்ளும் கார்யத்தை
ஒரு இந்த்ரியம் கொண்டு கொள்ள வல்லனான
திரு வநந்த வாழ்வானை -படுக்கையாக உடையவன் –
சஷூஸ்ரவ-இ றே –
தூது செய் கண்கள் கொண்டு ஓன்று பேசி -என்னுமா போலே

நால் வேதத்துள்ளான் –
நாலு வேதங்களாலும் பிரதி பாதிக்க பட்டவன்

நறவேற்றான் பாகத்தான்-
நற வென்று  பொல்லாத மதுவாய்
தண்ணிதான மதுவைக் கையிலே ஏற்றுள்ள ருத்ரனுக்குத் தன் திரு மேனியிலே
இடம் கொடுக்கும் ஸ்வ பாவனாய் உள்ளான் –
சீலவான் -என்றபடி –
நற வென்று போக்யதை -என்றுமாம்
அங்கன் அன்றிக்கே
நற வேற்றான் -என்கிறது
மதுவையும் ருஷபத்தையும் உடையவன் -என்றுமாம் –

பாற் கடலுளான்   –
இவன் தான் ஆர் என்னில்
திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளினவன் –

———————————————————————————————–

பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: