மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -30-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

அவன் சந்நிஹிதன் ஆகையாலே அவள் சநேஹித்தாள் –
இப்போது நமக்கு அவன் சந்நிஹிதன் அன்றே என்னில்
அவன் சந்நிஹிதனான இடங்களைச் சொல்லுகிறார் –
ஒரு கால விசேஷத்திலே
ஒருத்திக்கு எளியனான
இந்நிலை எல்லார்க்கும் உண்டாம்படி
கோயில்கள் எங்கும் வந்து நின்று அருளின படியை
அருளிச் செய்கிறார் –

———————————————————————————

சேர்ந்த திருமால் கடல் குடந்தை வேங்கடம்
நேர்ந்த வென் சிந்தை நிறை விசும்பும் -வாய்ந்த
மறை பாடகம் அனந்தன் வண்டுழாய்க் கண்ணி
இறைபாடி யாய இவை  —-30–

———————————————————————————–

வியாக்யானம் –

சேர்ந்த திருமால் –
ஸ்ரீ யபதியானவன்  சேர்ந்தனவானவை

கடல் குடந்தை வேங்கடம் –
திருப்பாற் கடல்
திருக் குடந்தை
திருமலை –

நேர்ந்த வென் சிந்தை –
அவ்வளவு அல்லாத என்னுடைய ஹிருதயம் –

நேர்ந்த வென் சிந்தை –
என்கையாலே இத் திருப்பதிகளிலே வந்து நின்றது எல்லாம்
என் ஹிருதயத்திலே புகுந்து இருக்கைக்கு –
என்கிறது –

நிறை விசும்பும் –
பூரணமான ஸ்ரீ வைகுண்டம்
த்ரிபாத் விபூதி -என்றபடி-
வாய்ந்த மறை –
அவனை உள்ளபடி பிரதிபாதிக்கிற வேதங்கள் –
இத்தால் வேதத்தில் நின்றதோடு
கண்ணால் காணப் படுகிற திருப்பதிகளோடு
வாசி அற
இவருக்கு பிரகாசமாய் இருக்கிறபடி –

பாடகம்-
திருப்பாடகம் –

அனந்தன்-
திரு அநந்த ஆழ்வான் –
வண்டுழாய்க் கண்ணி-
திருத் துழாய் கண்ணி –

பாடி யாய –
ராஜ தாநியான-

இவை  –
இறையான திருமால் சேர்ந்தன -என்னவுமாம்
வண் துழாய்க் கண்ணி என்று
கீழ்ச் சொன்னவற்றோடு ஒக்கச் சொல்லவுமாம்-

அன்றிக்கே-
வண் துழாய்க்   கண்ணி இறை என்று அவனுக்கு விசேஷணம் ஆகவுமாம்-

அழகிய திருத் துழாய்  மாலையாலே
அலங்க்ருதனாய் கொண்டு இருக்கிற் சர்வ ஸ்வாமி
யானவன் –

————————————————————————————-

பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: