மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -29 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

யசோதைப் பிராட்டி ப்ரஸ்துதை யானவாறே
அவளுடைய ச்நேஹத்தையும் குணங்களையும் சொல்லி
அவளும் ஒருத்தியே -என்று
கொண்டாடுகிறார் –
கீழே
உடைத்ததுவும் ஆய்ச்சி பால் மத்துக்கு-என்றாரே
அச்சத்துக்கு இவன் பால்  ஒப்பு இல்லாதாப் போலே
ச்நேஹத்துக்கும் யசோதைப் பிராட்டிக்கு ஒப்பில்லை –
என்கிறது –
கீழே
மிடைந்தது பாரத வெம்போர் -என்று ஆஸ்ரிதர்க்காக அவன் தன்னை அழிய மாறின படியைச் சொன்னாரே
இதில் அவனுக்காக இவள் தன்னை அழிய மாறின படி சொல்லுகிறது –
அச்சம் கெடுகை ஸ்த்ரீத்வம் அழிய மாறுகை
ஸ்த்ரீத்வ பிரயுக்தம் இ றே அச்சம் –

—————————————————————————————-

பேய்ச்சி பாலுண்ட பெருமானைப் பேர்ந்து எடுத்து
ஆய்ச்சி முலை கொடுத்தாள் அஞ்சாதே -வாய்த்த
இருளார் திருமேனியின் பவளச் செவ்வாய்
தெருளா மொழியானைச் சேர்ந்து —-29–

——————————————————————————————
வியாக்யானம் –

பேய்ச்சி பாலுண்ட பெருமானைப் –
பூதனை யுடைய முலை யுண்டு முடித்து
அத்தால் தனக்கு ஒரு நலிவு வாராத படி நோக்கி
ஜகத்துக்கு ஒரு சேஷியைத் உண்டாக்கித் தந்த உபகாரகன் –
ஸ்தன் யந்தத் விஷ சம்மிச்ரம் ரஸ்ய மாஸீத் ஜகத் குரோ -ஹரி வம்சம் –65-என்னும் படியான விஷயம் இ றே
ஜகத்தில் ஒப்பற்றுக் கிடீர் பிழைத்தது என்கை

பெருமானை-
ஸ்வா பாவிகமான சேஷித்வத்தை உதறிப் படுத்த படி -மீண்டும் நிலை நாட்டினான்
பிரளயாதி ஆபத்துக்களுக்கு அவன் உண்டு என்று இருக்கலாம்
அவனுக்கு வந்தது இ றே இது  –

பேர்ந்து எடுத்து ஆய்ச்சி முலை கொடுத்தாள் அஞ்சாதே –
பூதனை கையிலே பிள்ளை அகப்பட்டான் என்றால்
தன்னைக் கொண்டு அஞ்ச இ றே அடுப்பது
ஸ்த்ரீத்வ பிரயுக்தமான பயத்தைப் பொகட்டு
கடுக வந்து எடுத்து
ப்ரத்யௌஷதம் பண்ணுகையிலே ஒருப்பட்டாள் ஆய்த்து
கேட்ட விடத்தே மோஹித்து விழுகை அன்றிக்கே
கால் நடை தந்து–வந்து— எடுத்து
பிரதிகிரியை பண்ண தொடங்கினாள் ஆய்த்து
மோஹித்து விழுமதுவும் பிரேம கார்யமே யாகிலும்
அவனைப் பெறும்படியும் கார்யம் பார்க்க வேணும் இ றே
மயர்வற மதி நலம் பெற்றும் -யாம் மடலூர்ந்தும் -என்னப் பண்ணும் விஷயம் இ றே –

வாய்த்த இருளார் திருமேனி-
பூதனை மடியில் இருந்து முலை யுண்கிற   போதை
வடிவிலே நிறம் இருக்கிறபடி
இவள் தன்னைப் பேணாதே மேல் விழப் பண்ணின அழகு –

யின் பவளச் செவ்வாய் –
பவளம் போலே இருந்துள்ள அதரத்தை யுடையனானவன் –
யசோதைப் பிராட்டி முலை யுண்ணும் போது
அந்த உபகார ச்ம்ருதியாலே பண்ணக் கடவ ஸ்மிதத்தை
இங்கே இருந்து பண்ணினான் ஆய்த்து –

வாய்த்த இருளார் திருமேனி-
ஸ்ரமஹரமான வடிவை உடையவன் –

தெருளா மொழியான் —
அப்போது பூதனை முகத்தைப் பார்த்து
அறிவு கலவாத முக்த ஜல்பிதங்களைப் பண்ணின படி –
அவள் முகத்தைப் பார்த்து முக்தமான பேச்சாலே ஆச்சிஆச்சி என்கிறபடி –

முலை கொடுத்தாள் –
ஸ்வரூபத்தை அழிய மாறி முலையைக் கொடுத்தாள்

சேர்ந்து –
அவனைக் கிட்டி –

வாய்த்த விருளார் திருமேனி இன் பவளச் செவ்வாய்
தெருளா மொழியானைச் சேர்ந்து
பேர்ந்து எடுத்து
ஆய்ச்சி முலை கொடுத்தாள் அஞ்சாதே
என்று அந்வயம்-

—————————————————————————————–

பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: