மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -28 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

இவர்கள் பண்ணின பாப பலம் இவர்களுக்கு
புஜிக்க வேண்டுவது
பாண்டவர்கள் தங்கள் சத்ருக்களை தாங்கள் நிரசிக்கும் அன்று அன்றோ
என்கிறார் –
கீழ்
வேங்கடமும் வெக்காவும் வேளுக்கைப் பாடியும்   -என்ற
பிரசங்கத்தாலே
ஆஸ்ரித பாரதந்த்ர்யத்தை அனுசந்தித்து
ஈடுபடுகிறார் –

———————————————————————————

அடைந்தது அரவணை   மேல் ஐவர்க்காய் அன்று
மிடைந்தது பாரத வெம் போர் -உடைந்ததுவும்
ஆய்ச்சி பால் மத்துக்கே அம்மனே வாள் எயிற்றுப்
பேய்ச்சி பால்  உண்ட   பிரான் ——28-

———————————————————————————-

வியாக்யானம் –

அடைந்தது அரவணை   மேல் –
தன்னால் அல்லது செல்லாதாரோடு
அணைந்து அல்லது
தனக்குச் செல்லாதபடியாய் இருப்பான்
ஒருவன் ஆய்த்து-

ஐவர்க்காய் அன்று மிடைந்தது பாரத வெம் போர் –
ஆஸ்ரிதர்க்காக தன்னை அழிவுக்கு இட்டான் ஆய்த்து
பாண்டவர்களுக்காய் அன்று நெருங்க ப்ரவர்த்தித்தது பாரதமாகிற வெவ்விய சமரம் –

இவ்விரண்டு பதத்தாலும்
உகந்தாருக்கு தன உடம்பைக் கொடுக்கும் –
ஆஸ்ரிதர்க்காகத் தன் உடம்பை அழிய மாறியும் நோக்கும் -என்றபடி –
அநந்த சாயியான சௌகுமார்யம் உடையவன் கிடீர் -என்கை –

மிடைந்தது
இவர்கள் நிமித்த மாதரமும் என்றது இல்லை என்கிறார் –

உடைந்ததுவும் ஆய்ச்சி பால் மத்துக்கே –
இவன் அஞ்சாததும் பீஷ்மாதிகளுக்கே –
அஞ்சுவதும் யசோதைப் பிராட்டிக்கே
அவர்கள் பிரஹ்மாஸ்திரம்-வேல் -தொடக்க மானவற்றை
பிரயோகிக்கிற  போது இத்தனை வெருவிற்றிலன் –
இவள் கையில் மத்தைக் கண்ட போது மிகவும் பீதான் ஆனான் –
அவர்களுக்கு தோலாதவன்-பரிஹாரம் இன்றிக்கே ஒழிந்ததுவும்-
அவளுக்குப் பயப்பட்டு தன் கையில் சத்ருக்கள் பட்டத்தைப் படுவதே
அவர்களும் வில்லைப் பொகட்டு
மதத்தை எடுத்துக் கொண்டார்கள் ஆகில்
ஜெயிக்கலாயிற்றுக் கிடீர்
சசால ச முமோச வீர -யுத்தம் -59-130 என்னக் கடவது இ றே –

அம்மனே –
இது ஒரு எத்திறம் இருக்கிறபடி –
கெட்டேன் இவனால் -என்கிறார் –

வாள் எயிற்றுப் பேய்ச்சி பால்  உண்ட   பிரான் –
பருவம் நிரம்பாதே இருக்கச் செய்தே
வாள் போலே இருந்துள்ள எயிற்றை யுடைய
பூதனையை முடித்த உபகாரகன்
அனுகூலையாய் இருப்பாள் ஒரு இடைச்சிக்கு பயப்பட்டு
பரிஹாரம் இன்றிக்கே இருப்பதே –
அப்பருவத்திலே வாசி யறிய வல்ல அழகு என் தான் –
இவள் பக்கலிலே உன் தாயான ஞானம் கிடந்து அஞ்சாது ஒழியப் பெற்றோமே
ஒளியை யுடைத்தான எயிற்றை யுடைய பூதனை-என்றுமாம் –
அம்மனே -என்று கிரியை -ஆச்சர்யத்தை வெளி இடுகிறார் –

—————————————————————————————

பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: