மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -26 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

இப்படிக் கிட்டி ஆஸ்ரயிக்கத் தம் திரு உள்ளத்தை
அவன் உகந்து அருளின நிலங்களில் காட்டில் விரும்பின படியை அருளிச் செய்கிறார் –
கோயில்களில் இருக்கிறது இசைந்தார் நெஞ்சிலே புகவிறே –
அங்கன் இன்றிக்கே
யசோதை பிராட்டி வெண்ணெயை விழுங்கும் காட்டில் நாம் பெற்றது ஏன் என்னில்
உகந்து அருளின தேசங்களிலே நமக்காக வந்து ஸூ லபனானான்
என்கிறார் -என்னவுமாம்
தொழுதால் பழுதுண்டே என்றாரே
இவர் இப்படிச் சொல்ல அவன் பேசாது இரானே –

—————————————————————————————–

சிறந்த வென் சிந்தையும் செங்கண் அரவும்
நிறைந்த சீர் நீள் கச்சி யுள்ளும் உறைந்ததுவும்
வேங்கடமும் வெக்காவும் வேளுக்கைப் பாடியுமே
தாங்கடவார் தண் துழாயார்  ——–26–

———————————————————————————————

வியாக்யானம் –

சிறந்த வென் சிந்தையும் செங்கண் அரவும் –
அவனுடைய ஆதரத்துக்கு இவை இரண்டும்
ஒரு கோவையாய் இருக்கிறது –
உகந்த படுக்கையான திரு வநந்த வாழ்வானோபாதி
என்னுடைய நெஞ்சும் –

செங்கண் அரவும் –
அவனோட்டை ஸ்பர்சத்தாலே மதுபான மத்தரைப் போலே
கண்கள் சிவக்கை –

இவ்விரண்டு இடத்திலும்
உறைந்ததுவும்-
தனக்கு உகந்த படுக்கையான திரு வநந்த வாழ்வானோபாதி
என்னுடைய நெஞ்சையும்
ஆதரம் பண்ணி  வர்த்திப்பதும்
திரு வநந்த ஆழ்வானையும்-என்னுடைய நெஞ்சையும் தன்னதாக
அபிமானித்து இருப்பது –
நிறைந்த சீர் நீள் கச்சி யுள்ளும் உறைந்ததுவும்-
திருப்பதிகளாலே நிறைந்த ஐஸ்வர்யத்தையும்
அளவிறந்த போக்யதையும் உடைத்தான திருக் கச்சியிலும் –

வேங்கடமும் வெக்காவும் வேளுக்கைப் பாடியுமே –
திருமலையிலும்
திரு வெக்காவிலும்
திரு வேளுக்கை பாடியிலும்
சர்வேஸ்வரன் ஆனவன் நித்ய வாசம் பண்ணி
ஒரு நாளும் கை விடான்
தாம் கடவார் -என்றபடி
நிறைந்த சீர் நீள் கச்சி யுள்ளும் உறைந்ததுவும் -என்று கீழோடு கூட்டி
வேங்கடமும் வெக்காவும் வேளுக்கைப் பாடியுமே தாங்கடவார்-என்னவுமாம்
கடவாத மாத்திரமே -என்றபடி
இப்படிச் சொல்லுகிறது –
கீழ் உறைந்ததுவும் என்ற அத்தாலே –
அங்கன் அன்றிக்கே
சிறந்த வென் சிந்தையும் செங்கண் அரவும் தாம் கடவார் -இத்தை அதிக்ரமியார்

நிறைந்த சீர் நீள் கச்சி யுள்ளும் வேங்கடமும் வெக்காவும் வேளுக்கைப் பாடியுமே உறைந்ததுவும் –
உறைந்த மாதரம் -என்றுமாம் –

இப்படிச் செய்கிறார் –
தண் துழாயார்  –
சர்வேஸ்வரன் ஆனவன் –

————————————————————————————————

பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: