மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -25 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

இவர் இப்படி உபதேசிக்கச் செய்தேயும்
திரு உள்ளமானது திமிர்த்துத்
தன்னுடைய பூர்வ வ்ருத்தத்தை ஸ்மரித்து இருந்தாப் போலே இருந்தது –
அத்தைப்   பார்த்து
நீ இங்கே கிட்டி ஆஸ்ரயித்தால் உனக்கு
வருவதொரு   குறை இல்லை காண்
என்கிறார்  –

—————————————————————————————-

தொழுதால் பழுதுண்டே தூ நீருலகம்
முழுதுண்டு மொய் குழலாள் ஆய்ச்சி விழுதுண்ட
வாயானை மால் விடை ஏழ் செற்றானை வானவர்க்கும்
சேயானை நெஞ்சே சிறந்து ——-25–

—————————————————————

வியாக்யானம் –

தொழுதால் பழுதுண்டே –
நீ அவனை ஆஸ்ரயித்தால் உனக்கு வருவதொரு தப்புண்டோ –
இத்தால் உனக்கு என்ன அநர்த்தம் வரும் –
நெஞ்சுக்கி முந்துற சுவட்டை அறிவித்து வைத்து
பழுதுண்டே என்கிறார் –
ஜகத்துக்கு அவன் வயிறு தாரகமானால் போலேயும்
நெய் அவனுக்கு தாரகமானால் போலேயும்
அடிமை உனக்கு தாரகம் அன்றோ –

தூ நீருலகம் -இத்யாதி –
நான் சொல்லுகிற வேப்பங்குடி நீர் இது வன்றோ
என்கிறார் –

தூ நீருலகம் -முழுதுண்டு –
அவனுக்காகாதார் ஒருத்தர் இல்லை காண்
பிரளயம் வந்து  முகம் காட்ட
லோகத்தை அடங்க வெடுத்து வயிற்றிலே வைத்தும்
பின்னையும் அத்தால் ஆராதானாய் –

தூ நீருலகம் –
கடல லையாதபடியாக வயிற்றிலே வைத்த படி
பின்னையும் ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ளத் த்ரவ்யத்தாலே
அங்கு வயிறு நிறையாமையாலே
வந்த குறை தீர்ந்தானாய் இருக்கிறவனை –
மொய் குழலாள் ஆய்ச்சி விழுதுண்ட வாயானை-
யசோதை பிராட்டி உடைய
வெண்ணெய் அமுத செய்த பின்பாய்த்து வயிறு நிறைந்தது –
சர்வ நிர்வாஹகனாய் வைத்து
ஆஸ்ரித பரதந்த்ரன் ஆனவன் -என்னுதல் –
வெண்ணெய் உண்ணா விடில் அவனுக்கு பிரளயம் வந்தது போலே என்னுதல் –
அனுகூலர் உடைய த்ரவ்யத்த்தால் அல்லது தரியாதவனை –
அழகிய குழலை உடைய
யசோதை பிராட்டி உடைய வெண்ணெயை
அமுது செய்த திருப் பவளத்தை உடையவனை –

மால் விடை ஏழ் செற்றானை –
பயாவஹமாய் கொண்டு தோற்றின ருஷ்பங்கள் ஏழையும் முடித்தவனை –
நப்பின்னை பிராட்டி உடைய சம்ச்லேஷத்துக்கு விரோதியான மதித்த
ருஷபங்களைச்  செற்றவனை  –
இத்தால்
தனக்கு அசாதாரண பரிகரத்துக்குத் தானே
விரோதியைப் போக்கும் -என்றபடி-

வானவர்க்கும் சேயானை-
ப்ரஹ்மாதிகளுக்கும் சால தூரஸ்தன் ஆனவனை
ஸ்வ யத்னத்தால் காண்பாருக்கு தூரஸ்தன் -என்றபடி –

நெஞ்சே சிறந்து தொழுதால் பழுதுண்டே –
ஆஸ்ரித ஸூ லபன் ஆனவனைத் தொழுதால் பழுதுண்டோ –

சிறந்து –
நீ அங்குத்தைக்குத் தகுதியாய்க் கொண்டு
இவை அறிந்து யோக்யதை தேடி வரப் பார்த்து இருக்கிறாய் ஆகில்
ப்ரஹ்மாதிகளுக்கு அவ்வருகு இல்லையே
அவர்களுக்கும் கூட அவ்வருகாய் இருப்பான் ஒருவன் ஆனபின்பு
இனி அவன் காலிலே விழுந்து பிழைக்கில் பிழைக்கும் அத்தனை
என்கிறார் –

———————————————————————————————-

பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: