மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -24 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

அபி நிவிஷ்டராய்க் கொண்டு எல்லாம் செய்தோம் இ றே என்று
ஏறி மறிந்து   இராதே -நெஞ்சே
அவனை மேலே விழுந்து ஆஸ்ரயிக்கப் பார் கிடாய்
என்கிறார் –
ஆசை பிறந்த பின்பு இனி
விச்சேதம் இன்றிக்கே அனுபவிக்கப் பார்
என்கிறார் –

—————————————————————————————–

வருங்கால் இருநிலனும் மால் விசும்பும் காற்றும்
நெருங்கு தீ நீருருவு மானான் -பொருந்தும்
சுடராழி ஒன்றுடையான் சூழ் கழலே நாளும்
தொடராழி நெஞ்சே தொழுது —-24-

——————————————————————————————-

வியாக்யானம் –

வருங்கால் –
இதுக்கு முன்புள்ள காலம் எல்லாம் செய்தபடி அழகிது
இனி மேல் வரக் கடவதான காலம் எல்லாம் இப்படியே செய்யப் பார் –

இருநிலனும் மால் விசும்பும் காற்றும் நெருங்கு தீ நீருருவு மானான் –
பஞ்ச பூதங்களாலும் ஆரப்தமான
ஜகதா காரணனாய் உள்ளான்
பரப்பை உடைத்தான பூமியும்
அபரிச்சேத்யமான ஆகாசமும்
வாய்வும்
சேர்ந்த தேஜஸ் தத்வமும்
ஜல பதார்த்தமும்
அவ்வோ பதார்த்தங்களுக்கு அந்தராத்மாவாய் நிற்கையாலே
லீலா விபூதி விசிஷ்டனாய் –
காரணமான பூத பஞ்சகங்களும் லீலா விபூதிக்கு உப லஷணம் –
பொருந்தும் சுடராழி ஒன்றுடையான் –
அத்விதீயமாய்
தேஜோ ரூபமான திரு வாழியை   யுடையனாகையாலே
நித்ய விபூதி யுக்தனாய் யுள்ளான்
இவன் அங்கு உள்ளாருக்கு எல்லாம் உப லஷணம்
தொழு வித்துக் கொள்ளப் பரிகரம் உண்டு
இப்படி உபய விபூதி யுக்தனானவனுடைய –

சூழ் கழலே –
ஆஸ்ரிதரை அகப்படுத்துக் கொள்ளுகிற திருவடிகளையே
புறம்பு போகாமல் சூழ்த்துக் கொள்ளும் திருவடிகளையே -என்னுதல்
இத்தால்
அவன் எதிர் சூழல் புக்குத் திரியா நின்றால் அத்தை அறிந்த இன்றாகிலும் நீ தொடராயோ

ஆழி நெஞ்சே –
அளவுடைய நெஞ்சே
உனக்கு உபதேசிக்க வேண்டா வி றே
தொழுது கொண்டு வரும் காலம் எல்லாம் நாளும் தொடர்
கீழ் விச்சேதித்துப் பட்டது போரும்
இனி மேல் உள்ளகாலம் முறையாலே இடைவிடாதே தொடர்ந்து ஆஸ்ரயி-

————————————————————————————————

பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: