மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -23 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

மெய்ம்மையைக் காண விரும்பு -என்றாரே –
அந்த உபதேசம் கடுகப் பலித்துக் கொடு நின்றதாய் இருந்தது –
தான்சொன்னபடியே திருவுள்ளம் விரும்புகிற படி
இவருடைய நெஞ்சாகில் இங்கனே இருக்க வேண்டாவோ –

————————————————————————————-

விரும்பி விண் மண்ணளந்த அஞ்சிறைய வண்டார்
சுரும்புதுளையில்  சென்றூத  -அரும்பும்
புனந்துழாய் மாலையான் பொன்னங்கழற்கே
மனந்துழாய் மாலாய் வரும் ——-23-

————————————————————————————–

வியாக்யானம் –

விரும்பி விண் மண்ணளந்த –
தன்னது அல்லாத ஓன்று பெற்றாப் போலே
ஆதரித்துக் கொண்டு
ஆகாசத்தையும் பூமியையும் அளந்து கொண்டான்
என்கிறார் –
விரும்பி அளந்தான் என்கையாலே காடும் ஓடையும் அளந்தது
தேவைக்கு அன்று என்கை –

அஞ்சிறைய வண்டு-
அழகிய சிறகை யுடைத்தான வண்டு –

ஆர் சுரும்பு –
முகத்துச் சேர்ந்து வர்த்திக்க  கடவ சுரும்பு –

துளையில்  சென்றூத  –
இவை ரசிசிரைகள் அறிந்து
சென்றுவாயை வைத்தூத –
அரும்பும் புனந்துழாய் மாலையான் –
அத்தாலே
அரும்பி அலரா நின்றுள்ள
செவ்வித் திருத் துழாய் மாலையை உடையனானவனுடைய –

புனந்துழாய் மாலையான் —
திரு மார்வில் ஸ்பர்சத்தாலே
தன்னிலத்தில் நின்றாப் போலே இருக்கிற
திருத் துழாய் மாலையை யுடையவன்

பொன்னங்கழற்கே –
ச்ப்ருஹணீயமான திருவடிகளிலே –

மனந்துழாய் மாலாய் வரும் –
மனம் விரும்பித் துழாய் மாலாய்வரும் என்று
மேலே மனஸ் ஸோ டே கூட்டவுமாம்
மனஸ் ஸா னது ஹ்ருதயமான துழாய் கலங்கிக் கொண்டு மாலாய் வரும்
பிச்சேறா  நிற்கும்
வ்யாமோஹத்தைப் பண்ணித்துழாவி வாரா நின்றது –
வண்டுகள் பட்டது படா நின்றது –

————————————————————————————-

பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: