மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -22 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

ஒருவராலும் அவனை அளவிட்டுப் பேச ஒண்ணாது
என்றாரே –
அநந்தரம்
திரு வுள்ளத்தைக் குறித்து நீ முன்னம் அவனை
அழகிதாக சாஷாத் கரிக்கையிலே
ஸ்ரத்தை பண்ணு கிடாய்
என்கிறார் –

———————————————————————————

வடிவார் முடிகோட்டி வானவர்கள் நாளும்
கடியார் மலர் தூவிக் காணும் -படியானை
செம்மையால் உள்ளுருகிச்   செவ்வனே நெஞ்சமே
மெய்ம்மையே காண விரும்பு ——22-

—————————————————————————————

வியாக்யானம் –

வடிவார் முடி-
தர்ச நீயமாய் இருந்துள்ள முடிகளை –
எம்பெருமானை வணங்கும் முடியானால் இங்கனே இருக்க வேண்டாவோ –

முடி கோட்டி –
தங்கள் உடைய அபிஷேகங்களை வளைத்து
பணியா அமரர் -திருவாய்மொழி -8-4-5-இ றே –
ராவணன் பகவத் விஷயத்தில் ஆஸ்ரயிதாப் போலே
இதர விஷயத்தில் பணிய வறியார் இவர்கள் –

வானவர்கள் –
நித்ய ஸூ ரிகள்
ப்ரஹ்மாதிகள் -என்றுமாம் –

நாளும் –
நாள் தோறும்
நாம் ஒரு நாளைக்கு ஒரு நாள் உண்ணுமோ பாதி
எப்பொழுதும் தொழுமவர்கள் –
சதா பஸ்யந்தி -இ றே –

கடியார் மலர் தூவிக்-
பரிமளம் மிக்கு இருந்துள்ள புஷ்பங்களைக் கார்ய புத்தியா வன்றிக்கே
திருவடிகளிலே பொகட்ட ஆஸ்ரயித்து

காணும் –
அதுக்குப் பலமாக காண்பார்கள்
சர்வ இந்த்ரியங்களும் அங்கே பிரவணம் ஆகை-

படியானை –
வடிவுடையவனை
அவனுக்குப் பிரகாரமான உடம்பு என்னுதல் –

செம்மையால் உள்ளுருகிச்  –
முறை தப்பாமே
அவன் சேஷி நாம் சேஷ பூதர் என்னும் புத்தி பண்ணி
ஹ்ருதயம் சிதிலமாய் –

செவ்வனே நெஞ்சமே –
நெஞ்சே அவனைக் காட்டும் வழியாலே
இத்தால் அவனே உபாயமாய்க் கொண்டு -என்றபடி –
பக்தியைப் பண்ணலாம்
நீ ஓன்று கொண்டு அவனைக் காண இருக்கை அன்றிக்கே
அவன் தானே தன்னைக் காட்டுவதாகக் கொண்டு –

மெய்ம்மையே காண விரும்பு –
பின்பு ஒரோ குண ஆவிஷ்காரத்தாலே மீளப் பாராதே
நெஞ்சே
அவனைப் பத்தும் பத்தாக
சாஷாத் கரிக்கையிலே யாதரி
பிரயோஜன நிரபேஷமாக ஆசைப்படு
பிரயோஜனமும் அவனே -என்றபடி
முதல் தன்னிலே இவர் சாஷாத் கரித்தன்றோ  அனுபவிக்கிறது -என்னில்
ஒருக்கால் கண்டோம் இ றே என்றால்
அவ்வளவால் பர்யவசிக்கும் விஷயம் அல்லாமையாலும்
இவர் இருந்து கண்டதுசம்சாரத்தே ஆகையாலும்
ஆறி இருக்க விரகு இல்லையே –

———————————————————————————————-

பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: