மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -21 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

அவனை ஒருவரால் அளவிட்டுப் பேச ஒண்ணாது கிடீர்
என்கிறார் –
கீழ்த் திரு வுலகு அளந்த அருளின இடம்
ப்ரஸ்திதமான வாறே
அப்படிவரையாதே பரிமாறும்
கிருஷ்ணாவ தாரத்தைச் சொல்லுகிறார் –

——————————————————————————-

பேசுவார் எவ்வளவு பேசுவர் அவ்வளவே
வாச மலர்த் துழாய் மாலையான் -தேசுடைய
சக்கரத்தான் சங்கினான் சார்ங்கத்தான் பொங்கரவ
வக்கரனைக் கொன்றான் வடிவு ——21-

————————————————————————————

வியாக்யானம் –

பேசுவார் எவ்வளவு பேசுவர் அவ்வளவே –
பேசுகையிலே அளவுடையராய் இருக்குமவர்கள்
யாதொரு அளவு பேசுவர்கள்
அவ்வளவு பேசினார்களாம் அத்தனை போக்கி
இதுக்கு மேல் உள்ளது கண்டு பேச ஒண்ணாது
மதி ஷயான் நிவர்த்தே ந கோவிந்த குண ஷயாத்-
அன்றிக்கே
ஆஸ்ரிதர் நினைத்த அளவே தனக்கு என்று ஒன்றில்லை
என்றுமாம்  –

பரிச்சேதித்துப் பேச ஒண்ணாமைக்கு ஹேதுக்கள் –
வாச மலர்த் துழாய் மாலையான் –
வாசம் என்று குளிர்த்தியாகவும்
பரிமளமாகவும்-

பரிமளத்தையும் -செவ்வியையும் உடைத்தாய்
சர்வ ஐஸ்வர்ய ஸூ  ச-கமான திருத் துழாய் மாலையாலே
அலங்க்ருதனானவன் –

தேசுடைய சக்கரத்தான் சங்கினான் சார்ங்கத்தான் –
நிரவதிக தேஜஸ் சை யுடைத்தான
திருவாழி
ஸ்ரீ பாஞ்ச ஜன்யம்
ஸ்ரீ சார்ங்கம்
இவற்றை உடையானாய் யுள்ளவன்
தேசுசைய அவனுக்கு
தேஜஸ் சை விளக்குமவை -என்றுமாம் –

பொங்கரவ வக்கரனைக் கொன்றான் வடிவு –
விஸ்ருதமான சப்தத்தை யுடையனான தந்த வக்த்ரன் -என்னுதல்
கிளர்த்தியையும் ஆரவாரத்தையும் உடையவனாய்க் கொண்டு
வந்து தோன்றின தந்த வக்த்ரனை
முடித்தவனுடைய வடிவு
பிரகாரம் பேசுவார் எவ்வளவு பேசுவர் அவ்வளவே –

—————————————————————————————-

பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: