மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -20 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

அவன் தன்னை அபேஷித்தார்க்குத்
தன்னை அழிய மாறாதேயோ கார்யம் செய்வது
என்கிறார் –
சம்சார பயம் கெட்டார்க்கு யாத்ரை இதுவே இ றே –
உன் படியை நீயே சொல்ல வேணும் என்று
எம்பெருமானைக் கே ட்கிறார் –

—————————————————————————

முன்னுலகம் உண்டு உமிழ்ந்தாய்க்கு அவ்வுலகம் ஈரடியால்
பின்னளந்து கோடல் பெரிதொன்றே -என்னே
திருமாலே செங்கண் நெடியானே எங்கள்
பெருமானே நீ யிதனைப் பேசு ——-20-

——————————————————————————

வியாக்யானம் –

முன்னுலகம் உண்டு உமிழ்ந்தாய்க்கு –
முன்பு இந்த லோகங்களை உண்பது
உமிழ்வதாய்ச் செய்த வுனக்கு –
ஒரு சரக்கற்ற செயல் என்னும் இடம் தோற்றச் சொல்லுகிறார் –

அவ்வுலகம் ஈரடியால் பின்னளந்து கோடல் பெரிதொன்றே –
இப்படி உனக்கு இஷ்ட சேஷ்டா விஷயமாய்ப்
பருத்தி பட்ட பன்னிரண்டும் பட வந்த லோகம்
தன்னையே பின்பொரு நாளிலே
மூன்றடியை இரந்து அளந்து கொண்ட விது
பெரியதொரு செயலாகச் செய்தாயோ
அவனுக்கு மறுக்க மாட்டாத வ்யாமோஹம் இ றே –

என்னே  –
இது என்ன ஆச்சர்யம் –
எத்திறம் -என்கிறார்
அன்நீர்மை தம்மை வருத்தின படி
உன்னுடைய மேன்மைக்கும் இத் தாழ்ச்சிக்கும்
எங்கே சேர்த்தி யுண்டு –

திருமாலே செங்கண் நெடியானே-
உன்னை நீ யுணர்ந்து கொண்டு தான் கார்யம் செய்யப் பெற்றாயோ –
ஸ்ரீ ய பதியாய் -அவளோட்டைச் சேர்த்தியாலே
சிவந்த கண்ணை யுடையவனே
ஸ்ரீ யபதியாய் இருப்பதே –

செங்கண் –
புண்டரீ காஷனான சர்வேஸ்வரன்
ஸ்ருதி சித்தமான கண்ணை யுடையவனே –

நெடியானே –
அபரிச்சேத்ய மகிமையை யுடையவனே –
இத்தால்
உனக்கு ஒரு குறை யுன்டாய்ச் செய்தாயோ -என்கை –

எங்கள் பெருமானே நீ யிதனைப் பேசு –
ஸ்வாமி யான நீ
அனந்யார்ஹரான எங்கள் அபேஷிதமும்
உனக்குச் செய்ய வேண்டும் இ றே
ஆனபின்பு நீ இத்தை அருளிச் செய்து அருள வேணும் –

நீ இதனைப் பேசு –
இச் செயல்களைச் செய்யும் இத்தனையோ
சொன்னால் ஆகாதோ
இவர் பேச்சுக் கேட்டு இனியனாய் இருந்தான் அவன்
அவன் பேச்சுக் கேட்டு வாழ நினைக்கிறார் இவர்  –

——————————————————————————————-
பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: