மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -19 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

அஞ்சாது இருக்க அருள் என்றார்
அநந்தரம்-
திரு உள்ளமானது நாம் அவனை இப்படி அருள் என்று நிர்பந்தித்தால்
அவன் முன் நின்று அருளுகைக்கு வேண்டும் யோக்யதை நம் பக்கலிலே உண்டாயோ –
அன்றிக்கே –
அவன் தான் செய்ய வல்லானோ -என்று
நெஞ்சு பிற்காலிக்க-
அவை ஒன்றும் இல்லை காண்-
யோக்யராய் இருப்பாருக்கு முன்னே அயோக்யரான நமக்குத் தன்
அகடிதகட நா சாமர்த்யத்தாலே அருளும்
நீ பயப்பட வேண்டா
என்கிறார்   –

————————————————————————————–

அருளாது ஒழியுமே ஆலிலை மேல் அன்று
தெருளாத பிள்ளையாய்ச் சேர்ந்தான் -இருளாத
சிந்தையராய்ச் சேவடிக்கே செம்மலர் தூயக் கை தொழுது
முந்தையராய் நிற்பார்க்கு முன் -19-

——————————————————————————————–

வியாக்யானம் –

அருளாது ஒழியுமே –
நமக்கு அருளாது ஒழியுமோ
யோக்யதை யுண்டாய் அருளாது ஒழிகிறானோ –
எத்தினால் இடர்க்கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே -திருச் சந்த விருத்தம் -115 –
மா ஸூச -என்றது நமக்காக அன்றோ –

ஆலிலை மேல் அன்று தெருளாத பிள்ளையாய்ச் சேர்ந்தான் –
ஆலிலையிலே சேர்ந்த முக்தனான பிள்ளை
அவனுக்கு அருள ஒண்ணாதது இல்லை -என்கை
அஞ்சாது இருக்க அருள் -என்று அபேஷிக்கவும் அறியாதார்க்கும்
அருளுமவன் நமக்கு அருளானோ -என்கை –
இத்தால் சம்சார பிரளயத்துக்கும் அவனை விஸ்வசித்து க்ருதார்த்தராய் இருக்க   அமையும் -என்கை –
ஜகத்து பிரளயத்தில் அழியப் புக்கவன்று
பவனாய் இருப்பதோர் ஆலந்தளிரிலே
அறிவு கலவாதானொரு முக்தனாய்க் கொண்டு
சாய்ந்து அருளின அகடிதகட நா சமர்த்தன் –

இருளாத சிந்தையராய்ச் –
பகவத் ஜ்ஞானத்திலே
அஜ்ஞ்ஞன கந்தம் இல்லாத ஹிருதயத்தை உடையராய்க் கொண்டு –

சேவடிக்கே செம்மலர் தூயக் கை தொழுது –
அவனுடைய சிவந்த திருவடிகளிலே
அழகிய செவ்விப் பூக்களைப் பணிமாறி ஆஸ்ரயித்து
புஷ்பாதி உபகரணங்களைக்  கொண்டு
கைகளால் தொழுது –

முந்தையராய் நிற்பார்க்கு முன் –
முற்பாடராய் நிற்கிறவர்களுக்கு முன்பே நமக்கு அருளும் காண்
தம்தாமுக்கு என்ன ஒரு கைம்முதல் உடையார் பக்கல் காணும் அவன் தாழ்ப்பது –

தெருளாத பிள்ளையாய் –
தன் பக்கலிலே சில நேர்ந்தார்க்கு ஒழிய
நேராதார்க்கும் அவை செய்ய மாட்டாதார்க்கும்
வாசி கணக்கிட வல்ல அறிவில்லை காண் அவனுக்கு –

——————————————————————————————

பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: