மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -18 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

கால த்ரயத்திலும் இழவு வாராமல் அனுபவிக்கப் பெற்ற
எனக்கு
உன் திருவடிகளிலே அடிமை செய்யுமஅதுவே யாத்ரையாய்
இதுக்கு விரோதமான சம்சார அனுசந்தானத்தாலே வரும் பயம் வாராதபடி
பண்ணி யருள வேணும் -என்கிறார் –
உன் உடைமை யொன்றும் சோர விடாத நீ
என்னைக் கைக் கொண்டு அருள வேணும் –
என்கிறார் –
மறவாது என்றும் நான் நினைத்தால்
லாபம் உண்டோ  –
நீ அஞ்சாது இருக்க அருள்
என்கிறார் –

——————————————————————————-

வாய் மொழிந்து வாமனனாய் மாவலி பால்
மூவடி மண் நீ யளந்து கொண்ட நெடுமாலே -தாவிய நின்
எஞ்சா இணை யடிக்கே ஏழ் பிறப்பும் ஆளாகி
அஞ்சாது இருக்க வருள் ———-18-

———————————————————————————
வியாக்யானம் –

வாய் மொழிந்து வாமனனாய்-
ஸ்ரீ வாமனனாய்
மூவடி மண் தா வென்று அருளிச் செய்து –
ஸ்ரீ வாமனனாய்க் கொண்டு
ஆசூர பிரக்ருதியானவன் இரங்கும்படி
முக்த ஜல்பிதங்களைப் பண்ணி
மறுக்க மாட்டாத படி பண்ணுகை –

வாய் மொழிந்து
கொள்வன் நான் மாவலி மூவடி தா என்ற கள்வனே -திருவாய்மொழி -3-8-9-
அவாக்ய அநாதர-என்னுமவன் கிடீர்

வாமனனாய் –
வடிவும் அப்படியே பண்ண வேணுமோ –

மாவலி பால் மூவடி மண் நீ யளந்து கொண்ட நெடுமாலே –
மகாபலி பக்கலிலே சென்று மூவடி மண்ணை அபேஷித்து
அவன் தரப் பின்னை அளந்து கொண்ட
சர்வேஸ்வரனே
உன்னது அல்லாததை அளந்து கொண்டாயோ

தாவிய-
அனாயாசேன அளந்து கொண்ட –
நின் எஞ்சா இணை யடிக்கே –
திரு வுலகு அளந்து   அருளின உன்னுடைய கல்யாணமான திருவடிகளிலே –

எஞ்சா இணையடி –
எல்லா சங்கோ சங்களும் நீக்கும் திருவடிகள்
அன்றிக்கே
விஸ்த்ருதமான திருவடிகள் -என்றுமாம் –

ஏழ் பிறப்பும் ஆளாகி –
காலம் எல்லாம் அடிமை செய்து

அஞ்சாது இருக்க வருள் –
இவ்வடிமைக்கு இழவு வரில் செய்வது என் என்று நான் அஞ்சாதே இருக்கும் படி
பண்ணி யருள வேணும்
நிர்ப்பயனாம் படி –
என்னுடைமையை நான் விடுவேனோ
மீட்டுக் கொண்ட பின்பு நீ அஞ்ச வேண்டா -என்று
அருளிச் செய்ய வேணும்

இனி
உன்கையிலும் பிறர் கையிலும் காட்டிக் கொடேன் -என்கை-
இந்த்ரன் அபேஷிதம் செய்து தலைக் கட்டினாப் போலே
நானும் இதொன்றும் பெறும்படி பண்ணி யருள வேணும்
ஒரு ஔஷதத்தை சேவித்தான் ஒருத்தன் பயம் இன்றிக்கே
சர்ப்பத்தின் வாயிலே கையைக் கொடா நின்றான் இ றே
அவனுடைய அருள் பெற்றவன்று
சம்சாரத்திலே இருந்து பயம் கெட்டு இருக்கத் தட்டில்லை இ றே –

————————————————————————————————

பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: