மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -17 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

இப்படிப் பட்ட சர்வேஸ்வரன் நம் பக்கல் வ்யாமுக்தன் என்று
அறிவதொரு நாள் உண்டானால்
அதுக்கு முன்பு உள்ள காலத்தோடு
மேல் வரக் கடவ காலத்தோடு வாசி அற
எல்லாம்
ஸபிரயோஜனமாய்த் தலைக் கட்டும் கிடீர்
என்கிறார் –

———————————————————————————-

சென்ற நாள் செல்லாத நாள் செங்கண் மால் எங்கள் மால்
என்ற நாள் எந்நாளும் நாளாகும் -என்றும்
இறவாத எந்தை இணையடிக்கே ஆளாய்
மறவாது வாழ்த்துக என் வாய் —-17-

—————————————————————————————

வியாக்யானம் –

செங்கண் மால் –
புண்டரீ காஷனான சர்வேஸ்வரன் அவளோடே  கூடி இருக்கையாலே
பலத்துக்குத் தட்டில்லை –
இனி என்னுடைய வாக்கானது அவனை விச்சேதம் இன்றிக்கே அனுபவிப்பதாக என்கிறது
எம்பெருமான் படி இதுவான பின்பு
நாம் க்ருதக்ஞராய் இருக்கும் அத்தனை வேண்டும் –
என்கிறார் -ஆகவுமாம் –

செங்கண் மால்
சீரியதான செய்ய தாமரைக் கண்ணன் –
புண்டரீ காஷன் ஆகைக்கு அடி ஸ்ரீ யபதிதவம் இ றே-

எங்கள் மால் –
ஆஸ்ரிதரான நம் பக்கல் வ்யாமுக்தன் –

என்ற நாள்-
சர்வேஸ்வரனானவன் நம் பக்கலிலே வ்யாமோஹத்தைப் பண்ணினான்
என்னும் அறிவு பிறப்பதொரு நாள்
உண்டானால் பின்னை –

சென்ற நாள் செல்லாத நாள்   எந்நாளும் நாளாகும் –
முன்பு கழிந்த நாள்களும்
மேல் வரக் கடவ நாள்களும்
அல்லாத நாள்களும்
நாளையே தலைக் கட்டும்
அத்யமே சபலம் ஜன்ம -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-17-3-என்றது போலே இ றே
அதாகிறபடி எங்கனே என்னில்
முன்னாள் வருகைக்கு உடலாகக் கழிந்தவை யாகையாலே
முன்பு உள்ளவையும் எல்லாம் உத்தேச்யம் ஆம் –
செங்கண் மால் எங்கள் மால் -என்கைக்கு அடியான நாள் இ றே
மேல் உள்ள அனுபவத்தோடு கூடிச் செல்லுகையாலே அவையும் எல்லாம் நன்றாம் –
இத்தை அசையிடும் நாள் இ றே –

என்றும் மறவாதே –
இனி மேல் செய்ய வேண்டுவது இது தனக்கு ஒரு குறைவின்றிக்கே செல்லம் அத்தனையே –
இவ்வனுபவத்துக்கு ஒரு நாளும் விச்சேத சங்கை இன்றிக்கே -என்னுதல்
அன்றிக்கே –
அனுபவத்தால் வரும் முடிவு இன்றிக்கே -என்னுதல்

அன்றிக்கே
என்றும் இறவாத எந்தை –
என்ற பாடமாய்த்து ஆகில் –
ஒரு நாள் உண்டாயொரு நாள் இன்றிக்கே ஒழியுமவன் அன்றிக்கே
நித்யனான பிதாவினுடைய
திருவடிகளிலே -என்றுமாம்
பூதாநாம் யஅவ்யய  பிதா -ஸ்ரீ விஷ்ணு சஹச்ர நாமம் -என்னக் கடவதுஇ றே –

எந்தை –
ஸ்வாமி யானவன்
வகுத்த விஷயத்திலே -என்றபடி –

இணையடிக்கே-
சேர்ந்த திருவடிகளிலே –

ஆளாய் –
அடிமையாய் –

மறவாது –
இது தன்னில் விச்ம்ருதி இன்றிக்கே –

வாழ்த்துக என் வாய் –
என்னுடைய வாக் இந்த்ரியம் ஸ்துதிப்பதாக வேணும் –

மறவாது வாழ்த்துக –
சந்தமேனம் ததோ வித்து –
மறந்தேன் உன்னை முன்னம் மறந்த மதியின்  மனத்தால் இறந்தேன் -பெரிய திருமொழி -6-2-2-
சாஹானி-
உத்தர மந்தரம் குருதே –
அபயம் பிரதிஷ்டாம் விந்ததே அதஸோ பயங்க தோ பவதி  –

——————————————————————————————-

பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: