மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -4 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

சர்வ ரஷகனானவன் திருவடிகளே
ப்ராப்ய ப்ராபகங்கள் என்கிறார் –
கீழ் –
தமக்குச் செய்த படி சொன்னார் –
இதில் பொதுவான ரஷையைச் சொல்லுகிறது –
அது ஸ்வஜன ரஷணம் –

—————————————————————————

மருந்தும் பொருளும் அமுதமும் தானே
திருந்திய செங்கண் மால் ஆங்கே பொருந்தியும்
நின்று உலகம் உண்டும்  உமிழ்ந்தும் நீரேற்று மூவடியால்
அன்று உலகம் தாயோன் அடி ——–4—

———————————————————————————

வியாக்யானம் –

மருந்தும் பொருளும் அமுதமும் தானே –
மருந்து என்று விரோதி நிரசன மாதரத்தைக் கொண்டு
பொருள் என்று உபாயம் ஆக்கி
அமுதமும் தானே -என்று உபேயத்தைச் சொல்லுகிறது –
விரோதியைப் போக்குவானும்
அபிமதத்தைத் தருவானும்
அபிமதம் தானும்
அவனே -என்றபடி
அநிஷ்ட நிவாரண பூர்வகமான
இஷ்ட பிராப்தி பண்ணித்  தருவானும் அவனே -என்றபடி
அன்றிக்கே
மருந்து என்று உபாயமாக்கி
பொருளும் அமுதமும் தானே என்று
உபேயத்தில் இரண்டு அவஸ்தையைச் சொல்லுகிறது
என்றுமாம் –

மருந்தும் பொருளும் அமுதமும் தானே-
அம்ருதம் சாதனம் சாத்தியம் யம் பஸ்யந்தி மநீஷின
ஜஞ்யாக்யம்   பரமாத்மானம் விஷ்ணும் த்யாயன் ந சீததி -என்றும்
சரண்யம் சரணஞ்ச த்வாமாகூர் திவ்யா மகார்ஷய -யுத்த -111-17-
நமுசி பிரக்ருதிகளை பொடிப் படுத்தின படியாலே -மருந்து
அர்தியாய் வருகையாலே பொருளானான்
திருவடிகளைத் தலையிலே வைக்கையாலே அம்ருதமானான்
திரு வுலகு  அளந்து  அருளினஎம்பெருமான் திருவடிகளே
சமிதை பாதி சாவித்திரி பாதி யல்ல –

திருந்திய செங்கண் மால் –
இவன் ஈஸ்வரன் என்று அறியலாம்படி
திருந்திச் சிவந்த கண்ணை யுடையனான சர்வேஸ்வரன்
அன்றிக்கே
திருந்திய –
ப்ராப்ய பிராபகங்கள் ஆகை-
ஸ்வரூப பிரயுக்தமாகை -என்றுமாம்
அன்றிக்கே
இவ்வாத்மா திருந்தா விட்டால் -இவற்றைத் திருத்தப் பாராதே
இவற்றுக்கு ஈடாக தன்னைத் திருத்திக் கொண்டு இருக்கும் -என்றுமாம்
இவை திருந்தாதே இருக்குமா போலே
அவன் என்றும் திருத்தி இருக்கும் -என்றுமாம் –

செங்கண்
ஆஸ்ரித வாத்சல்யத்தாலே சிவந்த கண்

மால் –
வ்யாமுக்தன் -என்றுமாம் –
ஆங்கே பொருந்தியும் நின்று –
ஸ்ரீ யபதி வந்து நீர் ஏற்கிறான் என்று
கூச வேண்டாதபடி இரப்பிலே பொருந்தி நின்று  –

பொருந்தியும்
ரஷணத்திலே   பொருந்தப்பட்டு –

நின்று –
அதிலே திரு உள்ளம் மண்டி நின்று

உலகம் உண்டு உமிழ்ந்தும்
லோகத்தை வயிற்றிலே வைத்து காத்தும்
வெளி நாடு காண உமிழ்ந்தும்
நீரேற்றும்
தன்னது அல்லாதது கொள்வாரைப் போலே

நீர்  ஏற்றும்
அலாப்ய லாபம் போலே

மூவடியால் அன்று உலகம் தாயோன் அடி
நீர் ஏற்ற லோகத்தை மூவடியாலே அளந்தவனுடைய திருவடிகள் –

மருந்தும் பொருளும் அமுதமும் தானே
உண்டு -மருந்தானபடி
உமிழ்ந்து -பொருளானபடி
செங்கண் மால் -அமுதமான படி
என்றுமாம் –

———————————————————————————————

பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: