மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -10 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

இப்படி அழகு குறைவற்ற விஷயத்தை
அனுபவிக்கும் போது  –யோக்யராய்ப் பேச வேணுமே –
ஆனால் சிறிது நன்மை தேடிக் கொண்டு வந்து புகுர வேண்டாவோ என்ன
நீங்கள் மேல் விழுந்து அனுபவிக்க -எல்லா நன்மையையும் தன்னடையே உண்டாம்
என்கிறார்
அங்குள்ள நன்மையே பேசிப் போம் இத்தனையோ
நமக்கும் சில பேறு உண்டாவோ -என்ன
நாம் அவனுடைய திருநாமம் சொல்லி உபக்ரமிக்க
எல்லா சம்பத்துக்களும்
தங்கள் ஸ்வரூபம் பெருகைக்குத் தாமே வந்தடையும்
என்கிறார் –

————————————————————————————-

தேசும் திறலும் திருவும் உருவமும்
மாசில் குடிப்பிறப்பும்   மற்றவையும் -பேசில்
வலம் புரிந்த வான் சங்கம் கொண்டான் பேரோத
நலம் புரிந்து சென்றடையும் நன்கு —-10–

—————————————————————————————

வியாக்யானம் –

தேசும் –
அதிக தேஜஸ் ஸூ உண்டு -மதிப்பு ஸ்வரூபம் அதுவும்

திறலும் –
பலமும்
பராபிபவன சாமர்த்தியமும் –

திருவும்-
மாறாத ஐஸ்வர்யமும் –

உருவமும் –
வடிவழகும் –

மாசில் குடிப்பிறப்பும்  –
குற்றமற்ற குடிப் பிறப்பும்
ஜனக குலத்தில் உள்ளாரைப் போலே இருக்கும் ஆபிஜாத்யமும்
குலம் தரும் -பெரிய திருமொழி -1-1-9–இத்யாதி
ஸ குலீன-ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-11-என்று சொல்லுகிறபடியே
வேடன் ஆகவுமாம்-ராஷசன் ஆகவுமாம் -இஷ்வாகு வம்ச்யனாம் -இத்தனை-

மற்றவையும் –
அனுக்தமானவையும்-

பேசில் –
மற்றுச் சொல்லிச் சொல்லாத னவான-எல்லாமான
நன்கு சொலப் புகில்   –
திருநாமம் சொன்னதுக்கு பலம் சொல்லப் போகாது

பிரயோஜனத்தைப் பேசில் –
வலம் புரிந்த வான் சங்கம் கொண்டான் பேரோத –
வலவருகே புரிந்து இருப்பதாய்
வெளுத்த நிறத்தை உடைத்தான
ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை தரித்தவன் உடைய
திரு நாமத்தைச் சொல்லி –

நலம் புரிந்து சென்றடையும் நன்கு –
நாட்டில் நன்மைகளாக பேர் பெற்றவையான
இஸ் சம்பத்துக்கள் எல்லாம் நமக்கு
இவ் வாஸ்ரயத்தை சென்று கிட்டி ஸ்வரூபம் பெற வேணும் என்று கொண்டு
ச்நேஹித்துச் சென்று மேல் விழும்
தன் பேராகச் சென்று அடையும் -என்றபடி –

நலம் புரிந்து சென்றடையும் –
மடலூர்ந்து கொண்டு வரும்
பேரோதுகை இவனுக்கு உத்தேச்யம்
அவை தன்னடையே ப்ராபிக்கும்
இவன் திரு நாமம் சொல்லி அல்லது நிற்க மாட்டாதாப் போலே
அவையும்
இவனை அடைந்து அல்லது நிற்க மாட்டா –
ஸ ஸ்லாக்யஸ் ஸ குணீ தன்ய ஸ குலீ நஸ் ஸ புத்திமான் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-131-
சரீரா ரோக்கியம் ஐஸ்வர்யம் அரிபஷ ஷயஸ் ஸூ கம்  –ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-125-

வலம் புரிந்த வான் சங்கம் கொண்டான்
பேரோதத்
தேசும் திறலும் திருவும் உருவும்
மாசில் குடிபிறப்பும் மற்றவையுமான
நன்கு நலம் புரிந்து சென்றடையும்  –

———————————————————————————————-

பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: