மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -9 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

காண்க நம் கண் என்று
இவர் சொன்னவாறே
அவன் தன்னைக் காட்டக் கண்டு
அவனுடைய அழகை
அனுபவிக்கிறார் –

——————————————————————————-

கண்ணும் கமலம் கமலமே கைத்தலமும்
மண்ணளந்த பாதமும் மற்றவையே எண்ணில்
கருமா முகில் வண்ணன் கார்க்கடல் நீர் வண்ணன்
திருமா மணி வண்ணன் தேசு ——-9-

————————————————————————————-

வியாக்யானம் –

கண்ணும் கமலம் –
உடம்பு வவ்வலிடும்படி நோக்கி –
ஜிதந்தே  புண்டரீகாஷா எண்ணப் பண்ணும் கண் –
முதலுறவு பண்ணும் திருக் கண்கள் –

கமலமே கைத்தலமும்-
அநந்தரம்-
ஸ்பர்சிக்கும் திருக் கைகள் –
கண்ணுக்குத் தோற்று விழா நிற்க அணைக்கும் கை இ ரே –

மண்ணளந்த பாதமும் –
கண்ணிலும் ஸ்பர்சத்திலும் தோற்று
விழும் திருவடிகள் –

மண்ணளந்த பாதமும் -மற்றவையே –
காடும் ஓடையுமான பூமியை யளந்ததுவும்
பூவைக் கொண்டே –
எண்ணில்-
ஆராய அரிது -என்கை-
என்ன ஒட்டாதே கலக்குமே அழகு –

வருந்தி இத்தனையும் செய்யில் –
கருமா முகில் வண்ணன்-
கறுத்து-
ஸ்லாக்கியமான-
மேகம் போன்ற வடிவை உடையவன் –

கார்க்கடல் நீர் வண்ணன்-
கறுத்த கடலிலே
நீர் போன்ற நிறத்தை உடையவன் –

திருமா மணி வண்ணன் –
காந்தி மிகுத்ததான
பெரு விலையனான
ரத்னத்தை உடைய நிறத்தை உடையவன்
ஸ்ரீ மத்தாய் ஸ்லாக்கியமான -ஸ்ரீ மன் நாராயண அர்க்கமான மணி
சர்வதா சாம்யம் காணாமல் கதிர் பொறுக்குகிறார்  இ றே
புறம்பு உபமேயம் பொய்யாய் இருக்கும்
இங்கு உபமானம் பொய்யாய் இருக்கும் –

கருமா முகில் வண்ணன்-
ஸ்ரமஹரமாய் இருக்கை –

கார்க்கடல் நீர் வண்ணன்-
கண்ணுக்கு அடங்காதாய் இருக்கை –

திருமா மணி வண்ணன் –
திரண்டு குளிர்ந்து இருக்கை –

தேசு –
சமுதாயமான எழில்

கருமா முகில் வண்ணன் கார்க்கடல் நீர் வண்ணன்
திருமா மணி வண்ணன் தேசு –
எண்ணில் –
தனித் தனி ஆராயும் அன்று
கண்ணும் கமலம் கமலமே கைத்தலமும்
மண்ணளந்த பாதமும் மற்றவையே-

————————————————————————————————-

பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: