மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -8 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

எல்லா இந்த்ரியங்களும் அவனை அனுபவிக்க வேணும்
என்கிறார் –

——————————————————————————–

நாமம் பல சொல்லி நாராயணா வென்று
நாம் அங்கையால் தொழுது நன்னெஞ்சே வா மருவி
மண்ணுலகம் உண்டு உமிழ்ந்த வண்டறையும் தண்டுழாய்க்
கண்ணனையே காண்க நங்கண்    ———8

————————————————————————————
வியாக்யானம் –

நாமம் பல சொல்லி –
கார்யபுத்த்யா சொல்லுகிறில் இ றே ஒன்றைச் சொல்லுவது
எல்லா திரு நாமங்களையும் சொல்லி
கைக்கு எட்டிற்று ஒரு கண்ட சக்கரையை எடுத்து வாயிலிடுமா போலே
தேவை இல்லாமை –

நாராயணா வென்று –
அசாதாரண நாமத்தையும் சொல்லி
உறவு அறிந்து கொண்டு
அவசியம் இவ்வாசி அறிந்து ஊன்றிப் போருகிற படி –
இப்படி நமக்கு சோ லபனாய் உள்ளவனை –
நன்னெஞ்சே –
வாகாதி கரணங்களைக்  கொண்டு  நாம் அனுபவிப்போம் வா -என்கறார்

நாமம் பல சொல்லி –
பிச்சர் வாழைத் தோட்டம் புக்கால் போலே தோற்றின
திரு நாமங்களை அடங்கச் சொல்லி –

நாராயணா என்று –
அவை எல்லாவற்றுக்கும் அடியான
பிரதான நாமத்தைச் சொல்லி-
நாம் அங்கையால் தொழுதும்-
அவனைத் தொழக் கண்ட கைகளாலே தொழுவோம்
அங்குத்தைக்கு எடுத்துக் கை நீட்ட  கண்ட
அழகிய கையாலே நாம்
அஞ்சலி பந்தம் முதலான ப்ரீதி விசேஷங்களைப் பண்ணுவோம்

நன்னெஞ்சே –
எல்லா இந்த்ரியங்களுக்கும்   அடி நீ இ றே –
இப்படிச் சொல்லுகைக்கு பாங்கான நெஞ்சே
முற்கொலி  இழிந்த நெஞ்சே -என்றுமாம் –

வா மருவி –
நீ இறாயாதே வந்து கிட்டப் பாராய்
என்கிறார் –

மண்ணுலகம் உண்டு உமிழ்ந்த-
பிரளயம் வரும் என்று ஏற்கவே கோழி
வயிற்றிலே வைத்துப் பேணி
வெளிநாடு காண உமிழ்ந்து –

வண்டறையும் தண்டுழாய்க் கண்ணனையே –
போகய பூதனாய்
ஸூ லபனான கிருஷ்ணனையே
பூமியை அடங்க நோக்கும் ஸ்வ பாவனே யாகிலும்
விட ஒண்ணாத போக்யதை உடைய கிருஷ்ணனையே
அரியன செய்து நோக்கா விடிலும்
விட ஒண்ணாத ஒப்பனையை யுடைய கிருஷ்ணனையே

காண்க நங்கண்    –
நம் கண்கள் காண்பதாக விரும்பிக் காண வேணும்
நம் கண்கள் காண்க –

———————————————————————————————–

பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: