மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -5 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

திரு வுலகு அளந்து அருளின படி பிரச்துத்தமானவாறே
அதுக்குத் தோற்று அவன் அழகை அனுபவிக்கிறார் –
அவனே மருந்தும் -பொருளும் -அமுதமுமானவாறே
இனி அழகை அனுபவிப்போம் என்கை-
அப்ராக்ருதமான அழகுக்கு வஸ்துக்களை சத்ருசமாக சொல்லுகிறது –
அலமாப்பாலே இ றே-
அழகை அனுசந்தித்தாருக்குப் பேசாது இருக்க ஒண்ணாது
பேச ஒண்ணாது –

—————————————————————————————–

அடி வண்ணம் தாமரை அன்றுலகம் தாயோன்
படி வண்ணம் பார்க்கடல் நீர் வண்ணன் முடி வண்ணம்
ஓராழி வெய்யோன் ஒளியும் அக்தே அன்றே
ஆராழி கொண்டார்க்கு அழகு —-5–

——————————————————————————————–
வியாக்யானம் –

அடி வண்ணம் தாமரை –
திருவடிகள் உடைய படி தாமரை –

அன்றுலகம் தாயோன் படி வண்ணம் பார்க்கடல் நீர் வண்ணன் –
இஜ் ஜகத்தை அளந்து கொண்டவனுடைய திருமேனி யுடைய நிறம் பார் சூழ்ந்த கடலிலே நிறம் போலே
வெளுப்புப் பேசுகிற விடமாகில்
திருப்பாற் கடலினிடைய நிறம் என்னலாம் –

முடி வண்ணம் ஓராழி வெய்யோன் –
திரு அபிஷேகத்தின் உடைய நிறம் ஆதித்யன் –

ஓராழி வெய்யோன் –
ஒரு சக்ரமான ரதத்தை யுடைய ஆதித்யன் -என்னுதல்
ஆதித்ய மண்டலத்தை சொல்லுதல்  –

ஒளியும் அக்தே அன்றே –
அவனுடைய தேஜஸ் ஸூ
ஆதித்யனுடைய தேஜஸ் சைப் போலே என்றபடி –

ஆராழி கொண்டார்க்கு அழகு –
கையிலே திருவாழி பிடித்தால் வேறோர் ஆபரணம் சாத்த வேண்டாமல்
இருக்கறவனுக்கு
கையிலே ஆர்ந்த திருவாழியைப் பிடித்தவனுக்கு அழகு
இப்படியே அடி வண்ணம் தாமரை -என்றபடி –

——————————————————————————————
பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: